கே ஜி எஃப் (சேப்டர் 2) விமர்சனம்
பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, பிரகாஷ் ராஜ் நடித்திருக்கும் அதிரடி - திரில்லர் திரைப்படம்.
விஜய் கிரகண்டுர் தயாரிக்க, ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார்.
KGF முதல் பாகத்தில் KGFஐ கைப்பற்றிய நாயகன் அதை முழுமையாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார். பிறகென்ன அதை கைப்பற்ற துடிக்கும் கும்பல், ஹீரோவை அழிக்க நினைக்கும் கும்பல் என வில்லன்களுக்கு பஞ்சமில்லை. இறுதியாக எல்லாவற்றையும் முறியடித்து வெற்றி கண்டாரா? என்பதே கதை.
முழுக்க முழுக்க சண்டை, பஞ்ச் வசனங்கள் தான், இருப்பினும் மேக்கிங்கிற்காக ஒருமுறை
பார்க்கலாம். (3/5)
'குற்றம் குற்றமே' விமர்சனம்
சுசீந்திரன் இயக்கத்தில் ஜெய், பாரதிராஜா, ஹரிஷ் உத்தமன், திவ்யா துரைசாமி என பலர் நடித்திருக்கும் அதிரடி திரைப்படம். துரை தயாரிக்க, அஜேஷ் இசையமைத்துள்ளார்.
இத் திரைப்படம் ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு வெளியீடாக நேரடியாக கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப் பட்டது.
'பீஸ்ட்' விமர்சனம்
இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு என தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் அதிரடி - திரில்லர் திரைப்படம்.
ஆங்கிலப் பெயருடன் வழமைபோல் வெளி வந்து முதல்நாளே
இத்தனை கோடி வசூல் என்று சமூக வலைத் தளங்களில் றீல் விட்ட இன்னுமொரு மசாலாப் படம் "பீஸ்ற்".
ஏற்கனவே பழம்பெரும் நடிகர்கள் பலர் நடித்து முடித்து அலுத்துப்போன கதை. வழக்கமாக, முஸ்லிம் தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளிக்கும் அரசியல் வாதி வில்லன்.
மோசமான திரைக்கதை, சலிப்புத் தட்டும் நடிப்பு, நம்ப முடியாத காட்சிகள், குழப்பமான விளங்க முடியாத திருப்பு முனைகள், அவசியமற்ற இடைச் செருக்கல்கள்.
நம்ம ஹீரோ அசத்தும் பறக்கும் சூப்பர் வீரனாகக் கொம்பியூட்டர் கிராபிக்ஸ் மூலம்
காட்டப்பட்டுள்ளார். ஆனால் நடிப்பு சூன்யம்.
தரமான திரைப்படம் ஒன்றை விரும்புவோர் தமது பணத்தை இப்படத்தைப் பார்ப்பதற்கு விரயம் செய்ய மாட்டார்கள். இந்தக் கதாநாயகனுக்கு விசிறிக்கொண்டிருப்பவர்கள் மட்டும்தான் புகழ்பாடிக்
கொண்டு இருப்பார்கள்.
பெரும்பாலான திரையரங்குகளில் பீஸ்ட் படத்தை எடுத்துவிட்டு கேஜிஎப் 2 படத்தை திரையிட்டு வருகின்றனர்.
'டாணாக்காரன்' விமர்சனம்
இயக்குனர் தமிழ் இயக்கத்தில் விக்ரம் பிரபு, அஞ்சலி நாயர், மதுசூதன் ராவ், லால் என
முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அதிரடி - திரில்லர் திரைப்படம்.
எஸ்.ஆர். பிரபு தயாரிக்க, ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
நேர்மையான போலீஸ் ஆகவேண்டும் என்ற ஆசையுடன் 1998-ல் தேர்வாகி காவல் பயிற்சிக்கு வருகிறார் அறிவு (விக்ரம் பிரபு).
ஈவு இரக்கமற்ற பயிற்சி அதிகாரியான ஈஸ்வரமூர்த்தி பயிற்சிக்கு வந்த வயதானவர்களை அவர் விரட்ட நினைக்கிறார்.இந்த அதிகார மோதலில் இருந்து அறிவு, அவரது குழுவினர் தப்பினரா, இல்லையா? என்பதை உச்சி வெயிலில் புழுதி பறக்க சொல்கிறது கதை.[3/5]
தொகுப்பு:செ.மனுவேந்தன்
0 comments:
Post a Comment