கடந்த வாரம் வெளியான திரைப்படங்கள் எப்படி?
'கூகுள் குட்டப்பா'' விமர்சனம்

 சபரி மற்றும் சரவணன் இணைந்து இயக்கும் திரைப்படம். இப்படத்தில் கே எஸ் ரவிக்குமார், பிக்பாஸ் புகழ் தர்ஷன் மற்றும் லாஸ்லியா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க,  ஜிப்ரான் இசையமைத்துள்ளார். மலையாளத்தில் ரதீஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியாகி பல  விருதுகள் பெற்றஆண்ட்ராய்டு குஞ்சப்பன்’.  என்ற படத்தின்  தமிழ் ரீமேக் தான் கூகுள் குட்டப்பா.

வெளிநாடு செல்லும் மகன் ஒரு நிறுவனம் மூலம் ஒரு ரோபோ வினை தந்தைக்கு உதவியாக விட்டுச் செல்கிறார்.ஆய்வு முடிந்ததால் நிறுவனம் ரோபோவை திருப்பிக் கேட்கிறது. தந்தை ரோபோவை தர மறுக்கிறார். இதை அறிந்த ஹீரோ அதனை மீட்க இந்தியா வருகிறார். இறுதியில் ரோபோ என்ன ஆனது? தந்தை விருப்பப்படி ரோபோ தந்தைக்கே சென்றதா? தந்தை தந்தையுடன் மகன் இணைந்தாரா? என்பது தான் படத்தின் மீதிக்கதை.

ஒரு வித்தியாசமான படம் (2.5/5)


''சாணிக் காயிதம்''விமர்சனம்

 அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், மற்றும் இயக்குனர் செல்வராகவன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இரத்தம் தெறிக்கும் அதிரடித்  திரைப்படம்.  சாம் சி எஸ் இசையமைத்துள்ளார்.

காவல் துறையில் பணிபுரியும் கீர்த்திசுரேஷை பாலியல் ரீதியாக துன்புறுத்துகின்றனர். மேலும் கீர்த்திசுரேஷின் கணவர் மற்றும் அவருடைய மகளை தீவைத்து எரித்து கொலை செய்கின்றனர்.

இதனையடுத்து கீர்த்தி சுரேஷ் தனது அண்ணன் செல்வ ராகவனுடன் சேர்ந்து குற்றவாளிகளை பழி வாங்க முடிவு செய்கிறார்கள். அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் என்ன என்பதுதான் படத்தின் கதை.

வன்முறை ,கொலை,பழிவாங்கல் எவ்வளவு காலம் தான் ரசிக்கலாம்.


''விசித்திரன்'' விமர்சனம்

  எம். பத்மகுமார் இயக்கத்தில் ஆர்.கே. சுரேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம். இப்படத்தினை  பாலா தயாரிக்க, ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். மலையாள சினிமாவில் 2018-ஆம் ஆண்டின் சூப்பர் ஹிட் கிரைம் திரைப்படமான 'ஜோசப்' திரைப்படத்தின் தமிழ் ரீமேக் படமாகும்.

போலீஸில்  ஓய்வு பெற்றுக்கொண்டு எந்நேரமும் குடியும் பீடியுமாக இருக்கிறார் நாயகன் ஆர்.கே சுரேஷ்.  தன் மனைவி பூர்ணா விபத்தில் இறந்ததை, கொலை என கண்டுபிடிக்கிறார். இதையடுத்து அந்த கொலையை துப்பறியும் அவர், இந்தக் கொலைக்குப் பின் ஒரு மிகப்பெரிய மெடிக்கல் மாஃபியா இருப்பதை கண்டுபிடிக்கிறார். இந்த அதிர்ச்சிகரமான உண்மையை அவர் எப்படி வெளி உலகுக்கு கொண்டு வருகிறார் என்பதே  படத்தின் மீதிக்கதை.

ஒரு நல்ல கிரைம் திரில்லர் படமாக இந்த விசித்திரன் இருக்கும்…(3/5)

 

தொகுப்பு: செமனுவேந்தன்

0 comments:

Post a Comment