சங்ககால இலக்கியங்களில், பதினெண் கீழ் கணக்கு நூல்களில் ஒன்றான 'நான்மணிக்கடிகை' என்பது நான்கு இரத்தினத் துண்டங்கள் என்னும் பொருளைத் தரும். ஒவ்வொரு பாடலிலும் நான்கு சிறந்த கருத்துக்களைக் கூறுவதால் 'நான்மணிக்கடிகை' எனப் பெயர் பெற்றது. இதனை இயற்றியவர் விளம்பி நாகனார்.இவரின் காலம் கி.பி. 200 க்கு முன்னர் ஆகும்.
தொடர்ச்சி..
56 -👇👇👇
மாண்டவர் மாண்ட வினை பெறுப; வேண்டாதார்
வேண்டா வினையும் பெறுபவே; யாண்டும்,
பிறப்பால் பிறப்பார் அறன் இன்புறுவர்;
துறப்பார், துறக்கத்தவர்.
அறிவாற் சிறந்தவர்கள் மாட்சிமைப்பட்ட செயல்களையே செய்வர். அறிவிற்குறைந்தவர்கள் தீவினையே செய்வர். உயர்ந்த குடியில் பிறந்தோர் இருமையிலும் (இம்மை, மறுமை) அறத்தையே விரும்பிச் செய்வர். பற்றற்றத் துறவிகள் வீட்டின்பத்தையே (சொர்க்கம்) விரும்புவர்.
57 -👇👇👇
என்றும் உளவாகும், நாளும், இரு சுடரும்;
என்றும், பிணியும், தொழில் ஒக்கும்; என்றும்
கொடுப்பாரும் கொள்வாரும் அன்னர்; பிறப்பாரும்
சாவாரும் என்றும் உளர்.
விண்மீன்களும், சந்திரனும், சூரியனும் என்றும் உள்ளன. நோயும் முயற்சியும் என்றும் உள்ளன. ஈவாரும், ஏற்பாரும் என்றும் உள்ளனர். பிறப்பாரும் இறப்பாரும் என்றும் உள்ளனர்.
58 -👇👇👇
இனிது உண்பான் என்பான் உயிர் கொல்லாது உண்பான்;
முனிதக்கான் என்பான் முகன் ஒழிந்து வாழ்வான்;
தனியன் எனப்படுவான் செய்த நன்று இல்லான்;
இனியன் எனப்படுவான் யார் யார்க்கேயானும்
முனியா ஒழுக்கத்தவன்.
ஓருயிரையும் கொல்லாமல் காய்கறி உணவுகளை உண்பவன் இனிதாக உண்பவனாவான்; முகமலர்ச்சியற்றவன் பிறரால் வெறுக்கப்படுபவன் ஆவான்; பிறர்க்கு உதவி செய்யாதவன் துணையில்லாதவன் ஆவான். எவராலும் வெறுக்கத்தகாத இயல்பை உடையவன் இனியவன் ஆவான்
59 -👇👇👇
ஈத்து உண்பான் என்பான் இசை நடுவான்; மற்ற அவன்
கைத்து உண்பான் காங்கி எனப்படுவான்; தெற்ற
நகை ஆகும் நண்ணார் முன் சேறல்; பகை ஆகும்,
பாடு அறியாதானை இரவு.
பிறருக்குக் கொடுத்துண்பவன் புகழுடையவனாவான். பிறருக்குக் கொடுத்துண்பவனது கைப்பொருளையே பறித்து உண்பவன் பேராசைமிக்கவனாவான். தன்னை விரும்பாதார் முன் தான் விரும்பிச் செல்லல் இகழ்ச்சிக்கு இடமாகும். தகுதியறியாதவனை ஒன்று வேண்டிச் செல்லல் பகைக்கு இடமாகும்.
60 -👇👇👇
நெய் விதிர்ப்ப, நந்தும், நெருப்பு அழல்; சேர்ந்து
வழுத்த, வரம் கொடுப்பர், நாகர்; தொழுத் திறந்து
கன்று ஊட்ட, நந்தும், கறவை; கலம் பரப்பி
நன்று ஊட்ட, நந்தும், விருந்து.
யாகத்தில் நெய்யைச் சொரிய நெருப்பு வளர்ந்து எரியும். வணங்கினால் தேவர் நன்மை தருவர். கன்றுகளை உண்பிக்க பசுவிற்குப் பால் பெருகும். இனிமையாய் விருந்தளித்தால் விருந்தினர் மகிழ்வர்.
நான்மணிக்கடிகை தொடரும்…..
Theebam.com: 'நான்மணிக்கடிகை' /01/வாழ்க்கை உண்மைகளை வெளிப்படு...
தேடல் தொடர்பான தகவல்கள்:
நான்மணிக்கடிகை - பதினெண் கீழ்க்கணக்கு, என்றும், உண்பான், இலக்கியங்கள், நான்மணிக்கடிகை, எனப்படுவான், நந்தும், ஆவான், என்பான், பதினெண், செய்வர், கீழ்க்கணக்கு, இடமாகும், செல்லல், உள்ளனர், நெருப்பு, ஊட்ட, பிறருக்குக், முன், நன்று, சங்க, உண்பவன், பிறப்பாரும், ஆகும், விரும்பிச்
From face book-
ReplyDeleteManu Sella
தன்னை விரும்பாதார் முன் தான் விரும்பிச் செல்லல் இகழ்ச்சிக்கு இடமாகும்.
Reply1d
Manu Sella
முகமலர்ச்சியற்றவன் பிறரால் வெறுக்கப்படுபவன் ஆவான்;
Reply1d
Manu Sella
உயர்ந்த குடியில் பிறந்தோர் அறத்தையே விரும்பிச் செய்வர்.
Reply1d
Sivamalar Yogesan
Manu Sella அதென்னங்ங உயர்ந்த குடி
Reply1d
Sivamalar Yogesan
சொல்லுங்ங
Reply1d
Atputhan Santhiya
👍அருமை மிக அருமை
Reply1d
Manu Sella
Atputhan Santhiya நன்றி,தொடர்வோம்
Reply1d
உருத்திரசிங்கம் நாகேஸ்வரி
மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் அண்ணா
Reply1d
Manu Sella
உருத்திரசிங்கம் நாகேஸ்வரி நன்றி,தொடர்வோம்
Reply1d
Ganesalingam Selvanayagam
👍அருமை
Reply1d
Manu Sella
Ganesalingam Selvanayagam நன்றி,தொடர்வோம்
Reply20h
Gowre Chandra
தமிழ் இனிது 👌
Reply1d
Manu Sella
Gowre Chandra நன்றி,தொடர்வோம்
Reply20h
Pathmanathan Ratnasingam
அருமையான பதிவு
Reply1d
Manu Sella
Pathmanathan Ratnasingam நன்றி,தொடர்வோம்
Reply20h
Parathakularani Shanmugaraja
Reply1d
Manu Sella
Parathakularani Shanmugarajaநன்றி,தொடர்வோம்
Reply20h
Khavi Khavi
நல்லொழுக்கமே உயர்குடி.மாறாக துர்குணம் தாழ்மை.சில/பலரின் பிறவி இயல்பாகின்றது..
Reply1d
Manu Sella
Khavi Khavi உண்மையே, நன்றி,தொடர்வோம்
Reply20h
Selva Uthayan
வாழ்த்த வேண்டிய பதிவும்
உணரவேண்டிய பதிவும்...
நிறைவான பதிவுக்கு மனதரா வாழ்த்க்கள்
May be an image of 1 person and text
Reply20h
Manu Sella
Selva Uthayan நன்றி,தொடர்வோம்
Reply20h
நித்தியம் சண்முகலிங்கம்
மிகவும் அருமையான பதிவுகள்
Reply20h
Manu Sella
நித்தியம் சண்முகலிங்கம் நன்றி,தொடர்வோம்
Reply20h
Denmark Shan Subramaniam
இனிய வாழ்த்துகள்
Reply16h
Manu Sella
Denmark Shan Subramaniam நன்றி,தொடர்வோம்
Reply10h
Kandiah Srithas
தன்னை
அறிந்து கொண்டு
தன்னைச்சார்ந்தோரை
புரிந்து கொண்டு
வாழப்பழகிக்கொள்பரே
வாழ்வில் உயர்ந்தவர்
Reply13h
Manu Sella
Kandiah Srithas நிச்சயமாக/நன்றி,தொடர்வோம்