இவ்வாரம் வெளியாகிய திரைப்படங்கள்

=சுருக்கமான பார்வை= ‘’யூகி ‘’ விமர்சனம்  (Cinema Tamil Movie 'Yogi' Review)

படம்: ஜாக் ஹாரிஸ் இயக்கத்தில் கதிர், நட்டி, நரேன், கயல் ஆனந்தி, ஆத்மீய, பவித்ரா என தமிழ் திரைப்பட முக்கிய நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் இப்படத்திற்கு, ரஞ்சின் ராஜ் இசையமைத்துள்ளார்.

கதை; கர்ப்பமாக இருக்கும் ஆனந்தி, மர்மமாக காணாமல் போகிறார். நட்டி தலைமைல்  ஒரு குழுவும், துப்பறிவாளர்  நரேன் தலைமையில் ஒரு குழுவும் ஆனந்தியைத் தேடுகிறார்கள். ஆனந்தி யார், அவரை ஏன் இரண்டு குழுக்களும் தேடுகின்றன? சினிமா நட்சத்திரமான ஜான் விஜய் ஏன் கொல்லப்படுகிறார்? அவருக்கும் ஆனந்திக்கும் என்ன தொடர்பு என விடை சொல்லும் படம்

முடிவு: ஏமாற்றம் என்று யூகிக்க முடிகிறது[2.5/5]

 📽...🎞...📽

‘’நான் மிருகமாய் மாற’’ விமர்சனம்  (Cinema Tamil Movie 'Naan Mirugamai Maara’ Review)

படம்: சத்யா சிவா இயக்கத்தில் சசிகுமார், ஹரிப்ரியா, விக்ராந்த் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரில்லர் திரைப்படம். சஞ்சய் குமார் தயாரிக்க, ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

கதை; தனது தம்பியை கொன்றவனை பழி வாங்க போகும் சசிகுமார் அங்கே எதிரிகளின் கூலிப்படை கும்பலில் சிக்கிக் கொள்கிறார். பிறகு என்னவானது சசிகுமார் தனது தம்பியை கொன்றவனை பழி வாங்கினாரா? அவர்களிடமிருந்து எப்படி தப்பித்தார் என்பது படத்தின் கதைக்களம்.

முடிவு: ஒரு குறுங்கதையால்  நீங்கள் மிருகமாக மாறாம தப்பினால் சரி. [2/5]

  📽...🎞...📽

‘’கழக தலைவன்’’ விமர்சனம்  (Cinema Tamil Movie 'Kalaga Thalaivan’ Review)

படம்: மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், நிதி அகர்வால் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம். உதயநிதி ஸ்டாலின் தனது 'ரெட் கெய்ன்ட் மூவிஸ்' என்னும் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் இப்படத்தினை தயாரிக்க, அரோள் கரோலி இசையமைத்துள்ளார்.

கதை; வாகன உற்பத்தி நிறுவனத்தின் புதியரக  வாகனம் ஒன்று, அதன் குறை மறைக்கப்பட்டு சந்தைக்கு வருகிறது. அக்குறையின் இரகசியம் வெளியே உதய நிதியால்  கசிந்துவிட ,அதனை அறியாமல் கசிய விட்டவனை தேடி இடம்பெறும் கொலைகள் மத்தியில், உதயநிதி அந்நிறுவனத்தினரால் கண்டுபிடிக்கப்பட்டாரா? உதயநிதி அவ்வாறு நடந்துகொண்டதன் காரணமென்ன? என்பதனை கூறும் படம்.

முடிவு: மொத்தத்தில் கலகத் தலைவன் – ஏமாற்றம்[2.5]

  📽...🎞...📽

‘’2323 தி பிகினிங் ‘’ விமர்சனம்  (Cinema Tamil Movie '2323 The begnning’ Review)

படம்: சதிஷ் ராமகிருஷ்ணன் தானே இயக்கி, நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்தினை மகேந்திர மாசனயன் தயாரிக்க, மகாராஜ் தேவர் இசையமைத்துள்ளார். மேலும் சாத்விகா அப்பையா, கிரிஸ்டல் இமேரா, மகேந்திர மாசனையன், சரவணன் ராதாகிருஷ்ணன், திருலோக சந்தர் எனப் பலர் நடித்துள்ளனர்.

கதை; அறிவியல் புனைகதைத் திரைப்படம். இயற்கையை ஆயுதமாக்கி பல்லாயிரம் உயிரை குடித்த இராட்சதனை எப்படி அழிக்கிறார்கள் என்பதே கதை.

முடிவு: தமிழிலும் இப்படி ஒரு திரைப்படம்.மகிழலாம்.[3.5/5]

தொகுப்பு:செ.மனுவேந்தன்

0 comments:

Post a Comment