சிரிக்க சில நிமிடம்

siri, kadi jokes, comedy, nakaichuvai 

நகைச்சுவை 


01.

ஒருவர் : கடி ஜோக் எல்லாம் எழுதுவாரே அவர் எங்கே வேலை செய்யுறார்?

மற்றவர் : பிளேடு கம்பெனியிலேங்க.....

 

02.

போலீஸ் : பஸ் எப்படி விபத்தில் சிக்கியது?

டிரைவர் : அதான் எனக்கும் புரியல சார்... நான் நல்ல தூக்கத்தில இருந்தேன்.

 

03.

தந்தை : டேய்! எப்பவுமே நம்மளைவிட வயசுல பெரியவங்ககிட்ட மரியாதையா நடந்துக்கணும் புரியுதா?

மகன் : ஏம்ப்பா! அம்மா உங்களைவிட வயசுல பெரியவங்களா?

 

04.

நோயாளி : நீங்க ஒரு பல் டாக்டரா?

டாக்டர் : இல்லை... முப்பதிரெண்டு பல்லுக்கும் டாக்டர்....

 

05.

வந்தவர் : என் மனைவிக்கு ‘வீசிங்’ ப்ராப்ளம் டாக்டர்

டாக்டர் : அதுக்காக ஏன் இவ்வளவு கவலைப்படறீங்க

வந்தவர் : பாத்திரங்களை ‘வீசி’ எறியறாளே என் மேல

டாக்டர் : ???

 

06.

ஒருத்தி : ஆபீஸ்ல நடந்த பார்ட்டில என்னோட வீட்டுக்காரர் சின்ன பிள்ளையாட்டம் புது சட்டைல காப்பிய கொட்டி கறையாக்கி அதோடு வீட்டுக்கு வந்தாரு!

மற்றொருத்தி : அடக் கடவுளே! நல்லா அடிச்சு துவைச்சியா?

ஒருத்தி : பின்னே.. விடுவேனா? ஆள் மூச்சு பேச்சில்லாம ஆஸ்பத்திரில கிடக்குறாருன்னா பார்த்துக்கோயேன்!

 

07.

ராமு : பல் ஆஸ்பத்திரிக்கு எப்படிப் போகணும்.

பாபு : சொத்தையோட போகணும்

 

08.

ஒருவர் : ஏன் அந்த கோழியை பிடிக்க பயப்படுறே?

மற்றவர் : நெருப்புக் கோழியாச்சே... அதான்.....

 

09.

இராமு : கோபம் வந்துட்டாஎன் மனைவி காளியாயிருவா….

நண்பன் : நீ என்னாவாய்???

இராமு : நான் காலியாயிடுவன்.

 

10.

காதலன் : எப்பவுமே உன்னோட நினைப்பாவே இருக்கு டார்லிங்.

காதலி : இப்போதானே நாம பேசி முடிச்சோம்?

காதலன் : அச்சச்சோ! மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!

 

11.

இராமு : அந்த டாக்டர் போலி என்று எப்படி கண்டு பிடிச்சீங்க?

நண்பன் : தையல் போடறதுக்கு Tailor கடைக்கு போக சொல்லுறாரு!

 

12.

ஒருவர் : இந்தச் சின்ன ஆபரேஷனுக்கு 10 ஆயிரம் ரூபாய் பீஸா? சரியான பகல் கொள்ளையாயிருக்கே! டாக்டர் யாரு?

மற்றவர் : தெரியலைங்களே! முகமுடி போட்டிருந்தாரு!

 

13.

ராமு : வரதட்சணை வாங்குவது தப்புன்னு முன்னாடி சொன்னீங்க. இப்ப சரின்னு சொல்றீங்களே, ஏன்?

சோமு : அப்ப என் பொண்ணுக்குக் கல்யாணம். இப்ப என் பையனுக்குக் கல்யாணம்.

 

14.

நோயாளி : டாக்டர், தூரத்துல உள்ளது தெரியமாட்டேங்குது டாக்டர்...

டாக்டர் : அப்படினா பக்கத்துல போயி பாக்க வேண்டியதுதானே.....

 

15.

ரேணு : அவங்க ரெண்டு பேருக்குள்ளே என்ன சண்டை.

பானு : அவங்களுக்குள்ளே ஆயிரம் இருக்கும்.

ரேணு : அப்ப ஆளுக்கு ஐநூறா பிரிச்சுக்க வேண்டியதுதானே!

 

16.

சர்தார் : தம்பி நீ என்ன படிச்சிருக்க?

பையன் : பி.எ.

சர்தார் : அடப்பாவி! படிச்சதே ரெண்டு எழுத்து! அதையும் தலை கீழா படிச்சிருக்கே!

 

17.

நபர் 1 : ப்ச் ! வர வர காய்கறி கடையில் நாம் தேடுவது கிடைக்க மாட்டேன் என்கிறது. டாக்டருங்க எதையாவது சொல்லி நம்ம உயிரை வாங்குறாங்க...

நபர் 2 : ஏன் என்ன ஆச்சு?

நபர் 1 : காரட்டை பச்சையா சாப்பிட்டால் கண்ணுக்கு நல்லது என்று சொல்லிட்டார்ந்க. நானும் கடை கடையா ஏறி இறங்குறேன். ஒரு கடையில கூட கிடைக்கல...

நபர் 2 : !!!!?????!!!!

 

18.

டாக்டர் : இனிமே....நீங்க குடியை ..சுத்தமா...நிறுத்தனும்....

நோயாளி : ஏன் ...டாக்டர், ரொம்பக்குடிச்சா, கிட்னி கெட்டுப் போயிடுமா?

டாக்டர் : ஆமா…எங்களுக்கு நல்ல ரேட் கிடைக்காது…!வாங்குரவனும்...நல்ல கிட்னியா குடுங்கன்னு...படுத்தி வெக்கிரானுங்க....

 

19.

ஒருவன் : மாட்டுக்கு பொங்கல் வைக்கும் போது மாடு ஏன் உன்னை முட்டுச்சு...

மற்றவன் : பொங்கலில் இருந்த முந்திரியை எடுத்து திண்ணுட்டேன்.

 

20.

கோல்ட் : உங்க மூணாவது பையனுக்கு பொண்ணு பாக்குறிங்களாமே, மருமகள் எப்படி இருக்கனும் ?

மாமன்னர் : என்னோட கூட்டணி அமைத்து என்னோட மூத்த மருமகள்களை வீட்டை விட்டு ஓரங்கட்டணும்...!

தொகுப்பு:செ .மனுவேந்தன்


0 comments:

Post a Comment