மே தினத்தின் வரலாறு

மேதினக் கொண்டாட்டமானது, ஐரோப்பிய மக்கள் பல தெய்வங்களை வணங்கி வந்த பேகன் ஐரோப்பியாவில்(Pagan Europe)ஏற்பட்டது. முதன் முதலில் அவர்கள் இளவேனிற் கால ஆரம்பத்தை ஒரு விழாவாகக் கொண்டாடினார்கள். ஆதிகால செல்ட்ஸ் மற்றும் சாக்சன்[Celts and Saxons ] நெருப்பின் தினமாக (the day of fire) மே 1ஆம் திகதியைக் கொண்டாடினார்கள்.சாக்சன் [Saxons ] ஏப்ரல் 30 மாலை /பின்னேரம்  விழாவைத் தொடங்குவர். ,கேளிக்கைகள்,மற்றும்  விருந்துடன் கூடிய விழா இந்த விழா, பனிக்காலம் முடிந்து இளவேனிற்காலம் வருவதை  வரவேற்பதற்காகக் கொண்டாடப்பட்டது. மற்றும், மேலும் இந்த நாள் ஒரு வருடத்தை சம பாதியாகப் பிரிக்கிறது என்று கருதினர் (மே 1முதல் அக்டோபர் முடிய 6 மாதம், நவம்பர் 1 முதல் ஏப்ரல் முடிய ஆறு மாதம்) இந்த விழாவை கத்தோலிக்க தேவாலயம்  சட்டத்தால் தடை செய்தது (outlawed by the Catholic church) என்றாலும் அங்கு வாழ்ந்த மக்கள்,இந்த விழாவை,1700 வரை கொண்டடிக் கொண்டுதான் இருந்தனர்.ரோமானியர்கள்[RomanS] பிரிட்டிஷ் தீவுகளுக்கு (British Isles) குடியேறியபொழுது, மே தினத்தை விமரிசையாகக் கொண்டாடினர். இந்த விழா பூக்களின் தேவதையான ஃப்லோராவிற்கான (Flora)  ஒரு வழிபாடு.து  ஏப்ரல் 28 முதல் மே 2 வரை  நடைபெறும்.காலக்கிரமத்தில் இந்த கொண்டாட்டம்   செல்ட்ஸ் மற்றும் சாக்சன்[Celts and ஸக்ஷொன்ச்] இனத்தாருடைய கொண்டாட்டத்திலும் சேர்த்துக்கொள்ளப்பட்டது.

நாம் தற்போது கொண்டாடும் மே தினம்,தொழிலாளர்கள் விடுமுறை தினமாகக்  ஏற்படக் காரணம் 1886ஆம் ஆண்டு மே 1ஆம் திகதி, அமெரிக்காவில் தொழிலார்கள்,எட்டு மணி நேர வேலை வேண்டி  நடத்திய போராட்டமே ஆகும். இந்த போராட்டம்  Haymarket என்ற இடத்தில் நடத்தியதின் நினைவாகவே தற்போது மே தினம் கொண்டாட்டப்படுகிறது. இந்தப் போரட்டம் Knights of Labour என்று அழைக்கப்பட்டது. கிட்டத்தட்ட 1600 போரட்டங்கள் நடந்ததாகவும் 600,000 தொழிலாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் தெரிகிறது. 1889ஆம் ஆண்டு பாரிஸ் மே 1ஆம் தேதியைத் தொழிலாளர்களின்  விடுமுறை நாளாக, ஹேமார்கெட் போராட்டத்தில் உயிர் துறந்தவர்களை கௌரவிக்கும் வகையில் (in commemoration of the Haymarket Martyrs) அனைத்துலக தொழிலாளர்களின் ஒன்றியம் (International Workingmen's Association) அல்லது முதலாவது அனைத்துலகம் (First International) அறிவித்தது.தொழிலாளர்கள்  சிந்திய குருதியின்  ஞாபகமாக சிகப்பு நிறக் கொடியை தேர்ந்து எடுத்து அதை  சின்னமாக்கினர்.

ஹவாயில் (Hawaii) மே தினம்,Lei ( garland or wreath) என்ற மரபு வழி வந்த விழாவுடன் இணைத்து கொண்டாடப்படுகிறது.லேய் என்பது மலர்களால் ஆனா ஒரு அல்லது நெக்லஸ் ஆகும்.இது கிட்டத்தட்ட 46 செ.மீ. நீளம் இருக்கும்.ஜெர்மனியில் முதல் முறையாக,1933ஆம் வருடம் தொழிலாளர் தினம் விடுமுறையாக அறிவிக்கப்பட்டது.போலண்ட் 1990ல் தொழிலாளர்கள் தினத்தை அரசாங்க விடுமுறையாக["State Holiday"] மாற்றியது 

மேலும் இன்று உலக நாடுகள் எல்லாம் பொதுவாக மே 1ஆம் திகதியை கோலாகலமாகக் கொண்டாடுகின்றனர். ஆஸ்திரேலியாவில், எல்லைக்கேற்ப, தொழிலாளர்கள் தினம் வெவ்வேறு நாட்களில், கொண்டாடப்படுகிறது.பல  பொதுவுடமை நாடுகளில்,மே தினம்  ஒரு முக்கியமான அரசாங்க விடுமுறை.அத்துடன் அங்கு, மிக விமர்சையாக ராணுவ அணிவகுப்பு காட்சியுடன் இது கொண்டாடப்படுகிறது. என்றாலும் நியூசிலாந்தில் [New Zealand ] தொழிலாளர் தினம் அக்டோபர் மாதம் நான்காவது திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது. இதற்கு மூல காரணமானவர் சாமுவேல்  டன்கன் பர்னெல் [ Samuel Duncan Parnell ] என்னும் தச்சு வேலை செய்பவர் ஆகும். இவர் 1840ல் 8 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்ய மறுத்ததுடன்,மற்ற தொழில் செய்பவர்களையும் அப்படி செய்யவேண்டாம் என தூண்டிவிட்டார்.அக்டோபர் 1840ல் தொழிலாளர்கள் கூட்டம்,ஒருநாளைக்கு 8 மணி நேர வேலை என்ற ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது.இதன் 50வது வருடத்தை,அக்டோபர் 28 1890ஆம் வருடம் ஒரு அணிவகுப்பின் மூலம் கொண்டாடியது.இதன் தொடர்ச்சியாக,இதன் பின் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் நான்காவது திங்கட்கிழமை கொண்ட்டாடுவது அங்கு வழமையானது.மேலும் 1899ல் அரசாங்கம், 1900 ஆண்டு முதல்,இந்த நாளைப் பொது விடுமுறையாக அறிவித்தது.இப்படியாக ஒவ்வொரு தேசமும் தமது மே தினத்தைக் கொண்டாடுகின்றன.

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

"ILANKAI'' ''[இலங்கை]"

The Tamil word for Sri Lanka is ILANKAI.The Tamil word "Ilankai" has its origin in another Tamil word "Ilanku". Ilanku means "be visible". Why did the name of an island come from the word Ilanku["இலங்கு"]?
Tamils are great seafarers in all known Tamil history.Tamil merchants sailed to Burma and Malaysia in the east and Greece and Rome in the west as far back as at least 2000 years.As ships sailed off from Tamil Nadu coasts or returned back home,sailors could see the large landmass of the island.It was clearly visible.So they called the island Ilankai from the word Ilanku.The island is also referred to as Ilankai in some of the oldest Tamil literature available today,for example,Sirupanattuppadai and Purananooru, both written about 2000 years ago.
The Tamil word Ilankai mutated to "Lanka" in Sinhalese.The prefix "Sri", indicating honor, respect or reverence, was added to it and the island is today called Sri Lanka.This term it is quite old.Cilapathikaram, the Tamil epic that deals with the history of the Kannaki,the Pattini venerated in the Sinhala Buddhist tradition,narrates how Gajabahu brought the Pattini cult to Sri Lanka.
The famous line in Cilapathikaram runs as follows 'Kadal chool illankai kayavahu venthan' and the word illankai is used here to refer to Sri Lanka. Cilapathikaram[சிலப்பதிகாரம்] today is generally taken as a work belonging to the second – third centuries CE Thus the term illankai, too, has been invoked to refer to the island
The eminent Sinhala historian and Cambridge scholar,Paul E. Pieris,In his book "Nagadipa and Buddhist Remains in Jaffna: Journal of Royal Asiatic Society, Ceylon Branch Vol.28 ",mentioned that-" ... it stands to reason that a country which was only thirty miles from India and which would have been seen by Indian fisherman every morning as they sailed out to catch their fish, would have been occupied as soon as the continent was peopled by men who understood how to sail .....".Also in the historical book, "The Mahavamsa or the Great Chronicle of Ceylon, Chapter XVIII, Colombo, 1960[By Geiger.W]"-The landing port of Sanghamitta is
mentioned as Jumbukolapatuna. Patuna is equivalent to pat’in’am, ‘coastal town’ in Tamil.This expression is peculiar to Dravidian speaking areas. So, this place must have been a predominantly Dravidian settlement.
[Kandiah Thillaivinayagalingam]

யார் ?யார்? யார்? யார்?



கேள்விக் கணைகள் .--ஆரியரா? அவர் அடிமைகளா? அல்லவே!அப்படியெனில்,
1. ஆடுமாடுகளை ஓட்டிக் கொண்டு நம் நாட்டிற்குப் பிழைக்க வந்தது யார்?
2. இராமலிங்கப் பெரியாரை வெட்டிப் பலியிட்டது யார்?
3. நந்தனாரை நெருப்பிலிட்டுக் கொன்றது யார்?
4. திருப்பாணாழ்வாரைத் தீயிலிட்டுக் கொன்றது யார்?
5. யாகத்தில் ஆடு, மாடு, குதிரை, பன்றி, இவைகளைச் சுட்டுத் தின்று சுரா பானமருந்தியது யார்?

6. வருணாச்சிரம தருமத்தை ஆதரிப்பவன் யார்?
7. மனுதர்ம சாத்திரம் எழுதி நம்மை ஏமாற்றி வந்த கூட்டம் எது?
8. புராண ஆபாசக்கதைகளை எழுதி நம்மை ஏய்த்து வந்தவன் யார்?
9. திருப்பதிக்குப் போய் மொட்டையடிக்காமல் திரும்பி வருபவன் யார்?
10. மோட்ச லோகத்துக்கு வழிகாட்டி டிக்கெட் கொடுப்பவன் யார்?

11. திவசம், திதி, கருமாதி, கலியாணம், சடங்குகள் நடத்தி வைப்பவன் யார்?
12. திராவிடன் கட்டிய கோவில்களில் அதிகாரம் செலுத்தபவன் யார்?
13. திராவிடன் கட்டிய சத்திரமானிய வருமானத்தில் உண்டு களிப்பவன் யார்?14. கஷ்டப்பட்டுக் கோயில் கட்டியது யார்? உள்ளே புகுந்து கொள்ளையடிப்பது யார்?
15. சத்திரம் கட்டியது யார்? மானிய சொத்தில், சாய்ந்து சாப்பிடுவது யார்?

16. பல சாதிகளை உண்டு பண்ணியது யார்?
17. உடன்கட்டை ஏறும்படிச் செய்து பெண்களை வஞ்சித்தது யார்?
18. திராவிடன் ஆசாரத்துடன் பக்தி பண்ணினால் கண்ணைத் தோண்டிக் காட்டில் விட்டவன் யார்?
19. திராவிடன் ஆரியப் பாஷையைப் பேசியதற்காக நாக்கை அறுத்தது யார்?
20. திராவிடனை அரக்கனாகவும், சூத்திரனாகவும், குரங்காகவும் எழுதிவைத்தவன் யார்?

21. திராவிட இனத்தவரை முன்னுக்கு வரவொட்டாமல் முட்டுக்கட்டை போடுவது யார்?
22. திராவிட நாட்டுப் பிரிவினையைக் கூடாதென்று கொக்கரிப்பவர் யார்?
23. உழைப்பின்றி ஊரார் உழைப்பில் உண்டுகளிப்பவன் யார்?
24. கடவுளைத் தரிசிக்கத் தரகனாக இருப்பவன் யார்?
25. தென்னாட்டானைச் சுரண்டுபவன் யார்?

26. மதவெறி பிடித்து மதிகெட்டுத் தகாத காரியம் செய்தலைபவன் யார்?
27. தர்ப்பைப் புல்லையும், பஞ்சாங்கத்தையும் காட்டி, இன்றும் ஏமாற்றுபவன் யார்?
28. நீ சுவாமி என்று கும்பிட்டால் இடதுகையை நீட்டி உன்னை அவமதிப்பவன் யார்?
29. பெண்களை ஆடல், பாடல் கற்பித்து சினிமாவில் சேர்த்துப் பணம் சம்பாதிப்பவன் யார்?
30. கெஞ்சிக் கூத்தாடி லஞ்சங் கேட்கும் பஞ்சாங்கம் யார்?

31. இந்திப் படிப்பைக் கட்டாயப் பாடமாகக் கொணர்ந்தது யார்?
32. நான்கு சாதிகளை உண்டு பண்ணியவன் யார்?
33. மதவெறி பிடித்தலையும், மடையனும், முட்டாளும் யார்?
34. முதல் சாதி என்று தன்னைச் சொல்லிக் கொள்பவன் யார்?
35. தொழிலாளி கூலி கேட்டதற்கு மலபார் போலீசை விட்டு அடித்தது யார்?

36. வில் வித்தை கற்ற ஏகலைவன் கட்டை விரலை நறுக்கிக் கொடுக்கும்படி கேட்டவன் யார்?
37. வேதம் ஓதிப் பாதகம் விளைவிப்பவன் யார்?
38. நாம் பிறந்தது முதல் இறக்கும் வரை நம்மிடம் வரி வாங்குபவன் யார்?
39. ஹரிஜன சகோதரரை அக்ரகாரத்துக்குள் விடாமல் தடுப்பவன் யார்?
40. சாதி வேறு, சமயம் வேறு, கலை வேறு என்பவன் யார்?

41. சாதியைக் கடவுள் படைத்தார் என்று சொல்லி தர்ப்பை ஏந்துங் கை வாளுமேந்தும் என்றவன் யார்?
42. உலகம் போற்றும் உத்தமர் காந்தியாரைச் சுட்டுக் கொன்றது யார்?
43. காந்தியார் இறந்த தினத்தன்று மிட்டாய் வழங்கியது யார்?
44. காந்தியாருக்கு ராம் தூன் பசனை பண்ணி ஓலமிட்டழுதது யார்?
45. காந்தியார் கொலை வழக்குகளை பிரசுரிக்கக் கூடாதென்பவன் யார்?

46. காந்தியாரைச் சுட்டுக் கொன்றதை இருட்டடிப்பு செய்துவிட்டது யார்?
47. காந்தியார் கொலைக்கு நியாயம் வழங்கும்படி கேட்ட கழகத்தவர்களைத் தடை உத்தரவு போட்டுச் சோதனையிட்டவன் யார்?
48. சரித்திர ஆதாரப்படி அன்றிலிருந்து கொலை செய்து வரும் கூட்டம் எது?
49. திராவிடனைத் தலையெடுக்கவொட்டாமல் தட்டி விட்டுக் கொண்டிருப்பவன் யார்?
50. திராவிடச் சம்புகன் தலையை வெட்டி ஆரியப் பிள்ளையைப் பிழைக்க வைத்தது யார்?

51. காந்தியாரைக் கொலை செய்த விநாயகக் கோட்சே கூட்டம் எது?
52. காந்தியார் சதியாலோசனை சம்பந்தப்பட்ட ரிக்கார்டுகளைக் களவாடியவன் யார்?
53. அடுத்துக் கெடுப்பதில் அசகாயசூரனாய், கூடியிருந்து குடி கெடுப்பவன் யார்?
54. தஞ்சை நாயக்கர் வம்சத்தை வேற்றரசரிடம் காட்டிக் கொடுத்தவன் யார்?
55. சமணர்களைக் கழுவேற்றியது யார்?

56. சந்திர குப்தனுக்கு சாம்ராச்சியம் கிடைக்கும்படி செய்தது யார்?
57. நவ நந்தர்களின் ஆட்சியை வேரறுத்தவன் யார்?
58. சிறுத்தொண்டனைப் பிள்ளைக்கறி சமைத்துக் கேட்டது யார்?
59. வல்லாள மகாராசாவின் மனைவியைப் பெண்டாளக் கேட்டது யார்?
60. அசோக வம்சத்தரசரை அழித்தவன் யார்?

61. சைவனுக்குக் கந்தபுராணமும், வைஷ்ணவனுக்கு இராம புராணமும் கட்டியது யார்?
62. தேவடியாள் வீட்டில் தரகனாக இருப்பவன் யார்?
63. தாசிகளுக்குப் பரதநாட்டியம் கற்றுக் கொடுப்பவன் யார்?
64. அரிச்சந்திரனைப் பொய் சொல்லும்படி படாதபாடு படுத்தியது யார்?
65. திராவிட மக்களை ஏமாற்றிப் பிழைக்க வந்த கூட்டம் எது?

66. பல காமாந்தகாரக் கடவுளர்களையுண்டு பண்ணி யது யார்?
67. நம்மைப் பல சாதிகளாக்கி மொழி, கலை, நாகரீகம், வாணிபம் ஆகிய பல துறைகளிலும் வீழ்ச்சியுறச் செய்தது யார்?
68. எண்ணத் தொலையாத கடவுளை உண்டாக்கி எழுதியது யார்?
69. கடவுளுக்கும் மனைவி, கூத்தி, பிள்ளை குட்டிகள் இருப்பதாக எழுதியவன் யார்?
70. எவ்விதத் தொடர்புமின்றிச் சாஸ்திர ரீதியாகப் பிரித்து வைத்தது யார்?
71. காந்தியார் கொலைக்கு முன் திருவுளச் சீட்டுப் போட்டு ஒத்திகை நடத்திய கூட்டம் எது? 

அனைத்துமே பார்ப்பனன், அனைத்துமே பார்ப்பனன்

அப்பன் எவ்வழி மகனும் அவ்வழி




காலம் கடந்தும் நிஜம் கூ றும் 2 நிமிட பதிவு.
-எப்படி சம்பாதித்தோம் என்று மற்றவர்கள் மதித்தது அந்தக் காலம்.எவ்வளவோ சம்பாத்திதோம் என மதிப்பது இந்தக்காலம்.

--இந்த மனிதர்கள் பக்திக்கு விஷமுள்ள நாகங்களை பூசிக்கிது.பசிக்கு அப்பாவி புறாக்களை புசிக்குது.

---தத்துவம் பேசுறவன் பித்துக்குளி,தர்ம உபதேசம் செய்யிறவன் பயந்தாங்கொள்ளி.

தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் தவிர்க்க வேண்டியவை!

கர்ப்பகாலத்தில் மட்டுமின்றி, தாய்ப்பால் கொடுக்கும் காலத்திலும் பெண்கள் உண்ணும் உணவுகளில் கவனமாக இருக்க வேண்டும்.
ஏனெனில்பிறந்த குழந்தைக்கு ஒரே உணவு தாய்ப்பால்தான். தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் எந்த உணவுகளைஉட்கொண்டாலும், அது தாய்ப்பாலுடன் கலந்துகுழந்தையை அடையும்.
எனவே உங்கள் குழந்தைக்கு எந்த ஒரு பிரச்சனையும் வராமல் இருக்க வேண்டுமானால்,தாய்ப்பால் கொடுப்பவர்கள் தங்களது உணவுகளில் கவனத்தைசெலுத்த வேண்டியது அவசியம்.
  • சிட்ரஸ் பழங்களில் உள்ள ஃப்ளேவர் தாய்ப்பாலில்கலந்து, குழந்தைக்கு வயிற்று உப்புசத்தை உண்டாக்கும்.எனவே தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் ஆரஞ்சு, திராட்சை,எலுமிச்சை போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.
  • ஸ்ட்ராபெர்ரி பழத்தை பெண்கள் அதிகம் சாப்பிட்டால், குழந்தைக்கு தீவிரமாக அழற்சி ஏற்படும் வாய்ப்புள்ளது.
  • மேலும்வாய்வுத் தொல்லை, வயிற்றுப்போக்கு, எரிச்சல் போன்றவையும், சில நேரங்களில் சருமத்தில் அரிப்புக்களும் ஏற்படும். எனவே தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் இவற்றைத் தவிர்ப்பது நல்லது.
  • அன்னாசியில் உள்ள அசிட்டிக் தன்மை, தாய்ப்பாலுடன் கலந்தால், அது தாய்ப்பாலை நாற்றமிக்கதாக மாற்றுவதோடு, குழந்தைக்கு அரிப்புக்களையும் உண்டாக்கும்.
  • கிவி பழத்தை தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது குழந்தைக்கு ஆரோக்கியமானதல்ல. இப்பழத்தில் உள்ள உட்பொருட்கள் குழந்தைக்கு வாய்வுத் தொல்லையை உண்டாக்கும்.
  • செர்ரிப்பழங்களை அதிகமாக தாய்ப்பால் கொடுக்கும்பெண்கள் உட்கொள்ளக்கூடாது.ஏனெனில் இதில் இயற்கையாகவே மளமிளக்கும் தன்மை உள்ளது. ஒருவேளை அதிகமாக உட்கொண்டால், குழந்தைக்கு வயிற்றுப்போக்கு ஏற்படும் அபாயம் உள்ளது.


வேதாளம்,தெறியை பின்தள்ளிய ரஜனியின் ''கபாலி'' லீசர்




80 களின் வித்தியாசமான தோற்றத்துடன்,ரஜனியின் வழமையான  ஸ்டைலுடன், வில்லன் நடிகர் கிஷோர்,கதையின் நாயகி ஆப்தே இவர்களுடன் வந்து போகும் லீசர் 66 செகண்டில் முடிவடைகிறது.இது யுடியுப் இல் வெளியிடப்பட்டு 5 நிமிடத்தில் 40000 பார்வையாளரைக் கடந்து சாதனை படைத்துள்ளது.
இயக்குனர் பா..ரஞ்சித்துக்கும், இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுக்கும் பாராட்டுக்கள் குவிந்தவண்ணம் இருக்கின்றன. 

உழைப்பே உயர்வு..[கவிதை ஆக்கம்:அகிலன் ,தமிழன்]


வாழ்வில் 
 மகிழ்ச்சியின்   மூலதனம்
  உழைப்பே
 உழைப்பின் மீது
 மோகம் கொண்டால்
தோல்வியும் 
வெறுப்பு கொண்டு 
வெற்றியை
 உன் வசம் மாக்கும்

சோம்பல் மீது
  விருப்பு க்கொண்டு 
உழைப்பின்  மீது 
 கவனம் இன்றி ப்போனால்
 தோல்வியும் 
விருப்பு கொண்டு 
 வெற்றியை  
வலுவிழக்க செய்யும் 

உழைப்பால்
 நீ உயர்ந்து 
வெற்றி படியை  த்தொட்டால் 
சமூகமும் 
தலை வணங்கும் 
உறவுகளும் 
பெருமை  கொள்வார் 

ஏழை எளியவன் ஆனாலும்
 உழைப்பின்   மீது 
 உணர்வு கொண்டால்  
வாழ்வில் 
உயர்வு உண்டாகும் 
பணக்காரன் ஆனாலும்
  உழைப்பின்   மீது 
உணர்வு  இல்லை எனின்
 தாழ்வு குடி கொள்ளும்  

சிலந்தியை போன்று 
உழைப்பில்  முயற்றி உடையவன் 
மனதில் புயல் வந்தாலும் 
வெற்றியை தன தாக்குகிறான்.

உலகத் தொழிலாளர் தினமாகிய -மே1-இனை ஒட்டி இக்கவிதை வெளியாகிறது.

புத்தாண்டு கதவை தட்டிய புதிய பெண்கள் [பறுவதம்பாட்டி]



அன்று சனிக்கிழமைகாலை பாடசாலைவிடுமுறை  ஆகையால் நிம்மதியாக என் அறையில் புரண்டு படுத்துக்கொண்டிருந்த நான் பாட்டியின் குரல்கேட்டு திடுக்கிட்டுக் கண்விழித்தபோது மாமாவீட்டில் வசிக்கும் அண்ணாமலைத் தாத்தாவுடன் ஸ்பீக்கர் ரெலிபோனில் பாட்டி அறுத்துக்கொண்டிருப்பதனை உணரமுடிந்தது.
''அப்ப புதுவருசம் எப்பிடிப் போச்சுது பறுவதம்'' 
''அத  ஏன் கேட்கிறியள்''
''என்ன பறுவதம், என்ன புதினம்?'' புதினம் ஒன்றும் இல்லாம இருந்த அண்ணாமலைத் தாத்தாவும் அதை அறிய அவசரப்பட்டுக்கொண்டார்.
''ரண்டு பேர் வந்து கதவை தட்டிச்சினம்,நானும் கதவை திறந்திட்டன்.''
''அது ஆர் ஆக்கள்''
''வேறென்ன உந்த சமயம் பரப்பிற ஆக்கள் தான்''
''அடக் கருமமே!''
''அப்ப நான் கறுமம் தான்.வரியம் பிறந்து இந்த தொல்லை வேற!''
''அப்பஎப்பிடி ஆட்களை சமாளிச்சு அனுப்பினனீ?''
''வரியம் பிறந்து வந்தவையை உடன கலைக்கிறதோ எண்டு நான் நினைக்க அவையளும் நீங்க  இந்து வோ எண்டு கேட்டுக்கொண்டு சோபாவிலை இருந்துவிட்டினம்.''
''ஓமோம் இந்துக்களைத்தானே சுகமாய் ஏமாற்றி மதம் மாற்றலாம். அண்டைக்கு ஒருநாள் என்னட்டை வரேக்கை நான் முஸ்லிம் எண்டு சொல்ல ஒரு கதையும் இல்லை போய்விட்டினம் பார்.''
''ஆனா இங்க பிள்ளையார் படமெல்லெ முன்னு கிடக்கிது.இனி ஏன் பொய் சொல்ல வேணும். நாங்கள் என்ன குறைச்சலே! அவையும் தங்கட வழமையான வசனங்களை வாசிச்சினம்.அத்தோட கடவுளை காண இயேசு உங்களை அழைக்கிறார் என்றார்கள்''
''அப்ப கடவுளை பாக்க நீ போகேல்லையே பறுவதம்'' தாத்தாவும்  கேலியாகக் 
கேட்டுக்கொண்டார்.
''அடக்  கேளுங்கோவன்.நானும் வியப்போட என்ன சொல்லுறியள் நான் கடவுளை எப்போ கண்டுவிட்டன். இதுக்கு மேல என்ன நீங்க காட்டப்போறியள் எண்டு கேட்டன்''
மறுமுனையில் தாத்தாவின் சிரிப்பொலி தாரளமாக இருந்தது.
''இந்த கட்டையோட இது சரிவராது எண்டு வேற வழிக்கெல்லெ வந்தவை.''
''அதென்ன பறுவதம்''
''நானும் நீங்களும் பிரிஞ்சு இருக்கிறது நாங்க  கவலையாய் இருப்பமாம்''
''ஆடு நனையுது எண்டு ஓநாய் அழுத கதை தான்'' தாத்தா குறுக்கிட்டுக் கொண்டார்.
''கேளுங்கோவன்.அதுக்காய் எங்களுக்காய் 'பிறே' பண்ணப்போகினமாம்.
ஆரம்பிக்க முன்  நானும் கேட்டன்''
''என்ன பறுவதம் கேட்டனி''
''பரம்பரை பரம்பரையாய் உங்கட சேர்ச் சுக்கு ஒழுங்காய் ஒவ்வொரு ஞாயிறும் வந்து வணங்குகிற எனது நண்பரைப் போல பலர் தீரா வியாதிகளில் கிடந்தது வருசக்கணக்காய் அவஸ்தைப் படுகிறார்கள். அவர்களைக் காப்பற்ற முடியாத நீங்கள் என்  சாதாரண கவலைகள் நீங்க நீங்கள் பிராத்தனை செய்யிற எண்டு  என்னை ஏன் ஏமாற்றுகிறீர்கள் எண்டு  கேட்டன்.அவர்களால் இன்னும் இங்க இருக்க முடியவில்லை.--உங்களுக்கு அம்மா விளங்கவில்லை இன்னொருநாளைக்கு ஆறுதலாய் வந்து விளங்கப் படுத்திறோம்.'--எண்டபடி போய் விட்டினம்.'''
''இப்ப மட்டும் என்ன அவசரமாய் வந்தவையே! நல்ல வேலை செய்தாய் பறுவதம். இனி உந்தப் பக்கம் தலை வச்சுக்கூடப்படுக்க மாட்டினம்.''
''வேறென்ன! மேள் குசினிப்பக்கம் வந்திட்டாள். ஏதன் கூட மாட ச்செய்ய வேணும் பிறகு கதைப்பம்.சரி.'' என்றவாறே தொலைபேசியினை துண்டித்துக் கொண்டார் பறுவதம் பாட்டி.

நானும் பாட்டியின் துணிச்சலை எண்ணிய வாறே மறுபக்கம் புரண்டு படுத்துக் கொண்டேன்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@







இன்றைய செய்திகளும் சண்டியன் சரவணையின் பதில்களும்.


செய்தி:தனித்தமிழ் ஈழம் அமைவதற்கும், தமிழர்கள் முழுமையான சுதந்திரத்துடனும், தன்மானத்துடனும் வாழ்வதற்கும் தொடர்ந்து பாடுபடப் போகிறேன்-ஜெயலலிதா 

சரவணை: தாயே இராசாத்தி,இலங்கைத் தமிழர் மறந்த கதையம்மா அது.இருந்த தமிழரில்பாதி யுத்தத்தால் மாண்டனர்.மீதியில் பாதி அகதியாக புலம் பெயர்ந்தனர்.அங்கு இருக்கும் மீதி படும் அவலம் வேறு.முதலில் தமிழ் நாட்டில் அவலப்படும் சிலோன் அகதிகளை முழுமையான சுதந்திரத்துடனும், தன்மானத்துடனும் வாழ்வதற்கும் ஒரு வழி செய்யம்மா! நாமல் உங்களை மறக்க மாட்டோம்!

செய்தி:சமஷ்டி நிர்வாக முறை இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை கெடுத்துவிடும்!-சிங்கள ஊடகம் 

சரவணை:இது வெள்ளைக்காரனின் கண்டுபிடிப்பல்ல!சமஷ்டி நிர்வாக முறை கொண்ட நாடுகளெல்லாம் இன்று வளர்ந்துவிட்ட நாடுகளாகவே விளங்குவது உலகறிந்த உண்மை.இன்னும் நாட்டினை குட்டிச் சுவராக்கவே பேரினவாதம் வாதிடுகிறது.

செய்தி:சண்டியராக மாறிய நாமல்! ஆட்சியை பிடித்து அட்டகாசம் செய்யப் போவதாக மிரட்டல்

சரவணை:எலும்பிலா நா தானே!நான்கூட இப்பிடி சொல்லலாம்.பத்திரிகைக் காரன்கள் போடமாட்டாங்களே!

செய்தி:மலையக மக்களின் அடிப்படை பிரச்சினையை தீர்க்க உதவுமாறு இந்திய உயர்ஸ்தானிகரிடம் கோரிக்கை

சரவணை:இந்தியா வாழ் மக்களையே ஆட்சிக்கு வந்தா இந்திய அரசு மறக்கிறது  வழமை. இதில தங்களுக்கு வாக்கு போட சந்தர்ப்பமில்லாத சனங்களைப் பற்றி இந்தியாவுக்கு என்ன கவலை?


செய்தி:கனடா நாட்டில் நடிகர் விஜய் நடித்த ’தெறி’ படம் திரையிடப்பட்ட திரையரங்குகளில் மர்ம நபர்கள் மிளகாய் பொடிகளை வீசியதால் படக்காட்சிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.

சரவணை:நம்மளப் பற்றி என்ன நினைச்சுக் கொண்டியள்..மீண்டும் மீண்டும் நாங்கள் தமிழரென் நிரூபிப்போம் .


செய்தி:தமிழீழ வைப்பகத்தின் தங்கநகை புதையல் மீட்கும் நடவடிக்கை ஆரம்பம்!

சரவணை:கிணறு வெட்டப் பூ தம் வந்த கதையாய் முடி யுமோ?
இதைவிட இராணுவ பக்கம் தோண்டினா நிறையக் கிடைக்குமே!

செய்தி:வேட்புமனு தாக்கல் செய்யும்போதே ஏன் உறுதிமொழி ஏற்கவேண்டும் என்று தேர்தல் அதிகாரியிடம் கேள்வி எழுப்பினார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.

சரவணை:திரைப்பட நடிகரில்லையா! உப்பிடி எத்தினை படத்தில எத்தினை கேள்விகளைக் கேட்டிருப்பாரு!
                                                                   




வைகோ அவர்களை நினைத்து நெகிழ்கிறது நெஞ்சம்

நன்றி:விளம்பரம் 
தேடல்சுட்டிகள்:தமிழ்நாடு,தேர்தல்,அம்மா,வைகோ,ஜெயலலிதா,வாக்கு,நாஞ்சில் சம்பத், விஜயகாந்த், நிவாரணம், அரசு, பருவமழை, தாலி, போட்டி, எ.தி.மு.க.,பணம், காங்கிரஸ், வெள்ளம், கோஷங்கள், நிவாரண பணி ,  அடுக்குமொழி, தொகை, ரூபாய், அரசு, கூட்டணி 

நீ வருவாய் என....! [ஆக்கம்:அகிலன் தமிழன்]


மனதின் வலியை
கண்கள் சொல்லும் அன்பே 
அது போல நீயும் 
எனக்கு புரிதலாக  வந்து 
என் ஏக்கங்களுக்கு
பதில் தந்தாய்!
என்  உணர்வும் 
என் இதயமும் உன்னிடத்தில்
எதிர்பார்ப்பைக்  கொண்டு
வழி துணையாக நீ வருவாய் என 
ஒரு வழி பாதையில் 
உன்னிடத்தில் மையல்  கொண்டேன்.
முகில்கள் கோபம்  கொண்டு
கலைந்து போனது போல 
நீயும் மனம் மாறி பிரிந்து போனதால் 
மையல்  கொண்ட என் 
 உணர்வுகள்   கரு கொள்ளமால் 

உருக்குலைந்து நிலை மாறி போனதடி


ஆக்கம்:அகிலன் தமிழன் 

முதலிடத்தைப் பிடித்த நயன்தாரா!!!

வயது ஏறஏற ஏறத்தான் ஹாலிவுட்டில் நடிகைகளுக்கு மதிப்பு. நயன்தாராவையும் ஹாலிவுட் நடிகை எனலாம். வயது ஏற ஏறத்தான் இவருக்கு மவுசு அதிகரிக்கிறது.

சமீபத்தில் ஆங்கில பத்திரிகை ஒன்று தென் இந்திய நடிகைகளில் யாருக்கு முதல் இடம் என்ற கருத்துக்கணிப்பை ரசிகர்களிடம் நடத்தியது. இதில் நயன்தாரா முதல் இடத்தை பிடித்துள்ளார்.

2013–ல் நடத்திய கருத்துக்கணிப்பில் தென் இந்திய நடிகைகளில் 7–வது இடத்தில் இருந்த நயன்தாரா இப்போது முதல் இடத்துக்கு வந்திருக்கிறார். அவரது அழகு, நடிப்பு, திறமை அனைத்தையும் விரும்புவதாக கருத்துக்கணிப்பில் பங்கேற்ற ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

2–வது இடம் ஸ்ருதிஹாசனுக்கு கிடைத்திருக்கிறது. 3–வது இடத்தை எமி ஜாக்சனும், 4–வது 5–வது இடங்களை அனுஷ்கா, தமன்னா ஆகியோரும் பிடித்திருக்கிறார்கள். அடுத்தடுத்த இடங்களில் திரிஷா, ஹன்சிகா உள்ளிட்ட மற்ற நாயகிகள் உள்ளனர்.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

என் இனம் சுமந்த வலிகள்- [தொடர்கதை] பாகம் —1

வெண்ணிலாவும் வழமை போல தன் தகப்பன் இல்லாத பிள்ளைகள் இரண்டையும் காப்பாற்றி அவர்களை நல்ல நிலைக்கு கொண்டு வந்துவிட வேணும் என நினைத்தவாறு கிளிநொச்சிக் கடை தெருக்களில் வேலை தேடி அலைந்து திரிந்து கொண்டிருந்தாள் . 

தனக்கு நன்கு தெரிந்தவர்களிடம் கூட வேலை கேட்கும் போது இவள் முன்னாள் புலியடா என்று அவர்கள் கூறும் சுடு வார்த்தைகளையும் ,திட்டுக்களையும் மனதில்தாங்கிக் கொண்டு , தனது வேலை தேடும் படலத்தை தொடர்ந்தபடியே இருந்தாள் . அப்பொழுது திடீர் என ஒரு குரல் “வெண்ணிலா , வெண்ணிலா” 

அவளுக்கு இந்த குரல் ஏற்கனவே பரிச்சயமான ஒன்றாகத் தான் இருந்தது. எனினும் யாராக இருக்கும் என்ற மன பயத்துடன் தனது துவிச்சக்கரவண்டியை மெல்ல நிறுத்தி விட்டு திரும்பிப் பார்த்தாள் அது வேற யாரும் இல்லை, மதி ,அவளும் என்னைப் போல ஒரு முன்னாள் போராளி தான் .அவளை கண்டவுடன் இனம் புரியாத சந்தோசத்துடன் “என்ன அக்கா , உங்களை இஞ்சாலைப் பக்கம் கண்டு கனநாள் ஆகுது ; எப்படி இருக்கிறீங்கள் , 
பிள்ளைகள் எல்லாம் எப்படி இருக்கிறார்கள்” என்று வெண்ணிலாவும் நலம் விசாரிக்க தொடங்கினாள். மதியும் கண் கலங்கியாவாறு வாய் விட்டு அழத் தொடங்கினாள் . “அக்கா நீங்கள் தான் எனக்கு உதவி செய்ய வேணும் , நானும் என்ர பிள்ளைகளும் சாப்பிட வழி இல்லமால் இருக்கிறோம் ,யாருமே வேலை தருகிறார்கள் இல்லை அக்கா” 
என்று சொல்லவும், வெண்ணிலாவும் “உன்னுடைய கணவனைத் தானே புனர்வாழ்வு கொடுத்து விட்டு இருக்கிறார்கள் அவர் வேலைக்குப் போகலாம் தானே” என்று சிறு உரிமையோடு கேட்கவும், மதி “அதை ஏன் அக்கா கேக்கிறீங்கள், பேருக்குத் தான் புனர்வாழ்வு அளித்து விட்டதெண்டு சொல்லி விட்டு விட்டு ,விட்ட கையோடை ஆமிக்காரன் வீட்டை வந்து நாங்கள் இருக்கிற வீடு புலியள் தந்த வீடு 
அந்த வீட்டை தங்கடை அதிகாரிக்கு எழுதி தரவேணும் என்று கட்டாயப்படுத்தினார்கள் .என்ர மனிசனும் உயிர் போனாலும் எழுதி தர மாட்டேன் என்று மறுத்தார் .அதுக்கு அவங்கள் உங்கள் புலி குணம் மாறவில்லை,உங்களுக்கு நாங்கள் யார் என்று காட்டுறோம் என்று கோவத்துடன் சொல்லிப் போட்டுப் போட்டாங்கள் . 
அதன் பிறகு ஒருநாள் இரவு சிவில் சீருடை தரித்து ஆயுதம் தாங்கிய சில பேர் வந்து என்ர புருஷனை விசாரிக்க வேணும் என்று சொன்னாங்கள் ,என் பிள்ளையளும் , நானும் அழத் தொடங்கினேன் . எங்களை தள்ளி விட்டு விட்டு இந்த சம்பவத்தை யாருக்கும் சொல்ல கூடாது, சொன்னால் குடும்பத்தோடை உங்களை அழிச்சுப்போடுவோம் என்று வெருட்டிப் போட்டு அவரைக் கொண்டு போனார்கள் .அதுக்குப் பிறகு நாங்களும் ஒவ்வொரு இடமும் தேடி அலைந்தோம் . 

ஆனால் எந்த ஒரு விவரமும் கிடைக்கவில்லை சில மாதம் கழித்து வந்த உயர் இராணுவ அதிகாரி ஒருத்தன் இது என்ர வீடு , இனி இது எனக்கு தான் சொந்தம் என்று உறுதி ஒன்றையும் காட்டி, நீயும் உன்ரை பிள்ளையளும் உயிரோடு இருக்க வேணும் என்றால் நாளைக்கே வீட்டை விட்டு போயிடணும் என்று எங்களை அச்சுறுத்தி வெளி யில் அனுப்பி விட்டார்கள் . இப்ப தெரிந்த அக்கா ஒருவர் தன்னுடைய வீட்டில ஒரு மூலையில கொட்டில் போட்டு இருங்கோ என்று இடம் தந்திருகிறா. அங்க தான் இருக்கிறோம்” என்று மனம் கலங்கியவாறு அழத் தொடங்கினாள் .
                                                         தொடரும் ......................கவி நிலவன் 

நாள் பார்த்து நகை வேண்டி......


அட்சய திருதியை நாளில் தங்கச் சங்கிலி வாங்கச் சென்ற அங்கம்மாளின்
கழுத்து நகை களவு போனது
என்ற செய்தி கடந்த சில ஆண்டுகளாகவே பத்திரிகைகளில் வருவது வழக்கமாகிவிட்டது. அங்கம்மாக்களின் பெயர்கள்தான் மாறுகின் றனவே அன்றி, செய்தி இன்னும் தொடரத்தான் செய்கிறது.

பழைய மூடநம்பிக்கைகள் காலாவதியாகிப் போக புதிய மூடநம்பிக்கைகள் உருவாக்கப் படுகின்றன. வளர்ந்துவிட்ட அறிவியல் ஊடகங்கள் காசு பண்ண இதனை மேலும் மேலும் வளர்த்துவிடுகின்றன. நாய் விற்ற காசு குரைப்பதில்லையே.

 நல்ல நாளில் தங்கம் வாங்கப்போகும் ஒருவித மூடநம்பிக்கை நம் சமூகத்தில் நீண்ட நாட்களாவே உண்டு. அதனால் செவ்வாய், சனிக்கிழமைகளில் நகைக்கடைகள் கூட்டமில் லாமல் இருக்கும். மக்கள் தொகை பெருகப் பெருக கடைகளும் அதிகரித்தன. அவர்கள் தமது வணிகத்தைப் பெருக்க நகைச்சீட்டு சேர்க்கும் திட்டம் போல சில கவர்ச்சித் திட்டங்களைக் கொண்டுவரத் தொடங்கினார்கள்.
பின்னர் திருமண சீசன் இல்லாத காலங்களில் வணிகம் செய்ய கிராமுக்கு இவ்வளவு குறைவு என்றோ, சில அன்பளிப்புகளை அளித்தோ வாடிக்கை யாளர்களை ஈர்த்தார்கள். சென்னையில் ஒரு புகழ் பெற்ற தங்க நகை அங்காடியின்  வார விடுமுறையே செவ்வாய்க் கிழமைதான்.
ஆனால், இன்று அந்தக் கடை பல கிளைகளைத் திறந்தும் கூட்டம் அலைமோத, வார விடுமுறை இல்லாமலேயே அந்தக் கடைகள் இயங்குகின்றன. வாடிக்கையாளர்களும் நாள் நட்சத்திரம் பார்க்காமல் நகை வாங்குகிறார்கள்.

இத்தகைய சூழலில்தான் 10 ஆண்டுகளுக்கு முன் அட்சய திருதியை என்ற ஒன்றைக் கொண்டு வந்தார்கள் தங்க வணிகர்கள். அந்த நாளில் நகை வாங்கினால் வீட்டில் வளம் கொழிக்கும் என்றெல்லாம் புரளி கிளப்பினார்கள். ஒரு குண்டுமணித் தங்கமாவது வாங்கிவிடுவது என பெண்கள் கூட்டம் குவியத் தொடங்கிவிட்டது. இப்போது முன் நாட்களிலேயே அட்வான்ஸ் புக்கிங்கில் போய்க்கொண்டிருக்கிறது.

ஒரு நாள் அட்சய திருதியை என்பது கடந்த சில ஆண்டுகளாக அட்சய திருதியை வாரமாகிவிட்டது. (எப்படி ஆனதோ?) அட்சய திருதியை ஆஃபரெல்லாம் வந்துவிட்டது.

நாளிதழ்களில் வெளியான ஒரு விளம்பரம் நம் கண்ணில் பட்டது. `கடவுளின் பெயரில் ஏமா(ற்)றலாமா? என்பது அதன் தலைப்பு. ``அட்சய திருதியை நாளை முன்னிட்டு கிராமுக்கு இவ்வளவு தள்ளுபடி, இலவசப் பரிசு, அட்சய திருதியை ஆஃபர் என்பதைக் கண்டு ஏமாறாதீர்கள். எங்கள் கடையில் அப்படியெல்லாம் இல்லை என்கிறது அந்த விளம்பரம்.

அட்சய திருதியையைப் பயன்படுத்தி நகைக்கடைகள் செய்யும் தில்லு முல்லுகளை ஒரு நகைக்கடையே போட்டுக் கொடுத்துவிட்டது.

 தங்கம் வாங்கும் போது அதன் தரத்தைப் பார்க்க வேண்டுமே தவிர, நல்ல நாள்,- நேரம்,-அட்சய திருதியை போன்றவற்றைப் பார்த்தால் மிஞ்சுவது ஏமாற்றம்தானே! நகை வாங்கும் போது எதைக் கவனிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார் இந்திய நுகர்வோர் அமைப்பின் துணை இயக்குநர் எம்.ஆர்.கிருஷ்ணா. அவர் 2013 மே 8 -10 நக்கீரனில் கூறியுள்ள தகவல்கள் இதோ:

காய்கறிக்காரரிடம் அடித்துப் பிடித்து சண்டை போட்டு கறாராக அய்ம்பது பைசா ஒரு ரூபாய் என விலை குறைத்து காய்கறிகள் வாங்கும் திறமை கொண்ட பெண்கள்... பல்லாயிரங்களைக் கொடுத்து, நகை வாங்குவதில் ஏமாந்துவிடுகிறார்கள். பலரும் நகை வாங்கும்போது... அதுல இந்திய தர நிர்ணய அமைப்பான பி.அய்.எஸ். (Berua of Indian Standard) நகைகளுக்கு வழங்கும் ஹால் மார்க் (Hall Mark) முத்திரை இருந்தாலே 24 கேரட் தங்கம் என்று தவறாகப் புரிந்துகொள்கிறார்கள்.

ஆனால், 24 கேரட் தங்கம் என்பது நகைகளாக வடிவமைக்கும்போது 22 கேரட்தான் இருக்கும். ஆக, ஹால் மார்க் முத்திரையிடப்பட்ட 22 கேரட் தங்க நகை 916 அளவு துல்லியம் இருக்கும். அதேபோல் 21 கேரட்- 875 துல்லியம். 18 கேரட் - 750 துல்லியம், 17 கேரட்-708 துல்லியம், 14 கேரட்- 585 துல்லியம் என குறைந்த க்வாலிட்டி நகைகளுக்கும் இந்திய தர நிர்ணய அமைப்பினரால் (பிஅய்.எஸ்.) ஹால் மார்க் முத்திரை வழங்கப்படுகிறது. ஆனால், இதைப் பலரும் கவனிப்பதில்லை. லென்ஸ் மூலம் கண்டிப்பாக கவனிக்க வேண்டும்.

விலை குறைய குறைய அந்த நகையின் துல்லியமும் குறைந்திருக்கும். அதனால்தான் ஒரு கடையில் வாங்கிய நகையை இன்னொரு கடைக்குக் கொண்டு போய் விற்கும்போது அதே ரேட்டுக்கு எடுத்துக் கொள்வதில்லை. அதனால் வெறும் ஹால்மார்க் முத்திரை மட்டும் இருக்கிறதா என்று பார்க்காமல் எவ்வளவு துல்லியம் என்பதையும் பார்க்க வேண்டும். அடுத்து நகைக்கடைக்காரர்களின் சேதாரம் என்ற சீட்டிங் என்று கூறியுள்ளார்.

பகுத்தறிவு என்பது நம் வாழ்வில் நிகழும் ஒவ்வொரு நிகழ்வின்போதும் உரசிப்பார்க்கும் உரைக்கல். பகுத்தறிவு என்றவுடன் கடவுள் மறுப்பு மட்டுமே பலரது நினைவுக்கு வருகிறது. கூட்டமில்லாத நாளில் கடைவீதிக்குச் சென்று பொருள் வாங்குவதுகூட பகுத்தறிவுதான். தங்கத் தின் மதிப்பை உலகம் உயர்த்தி வைத்துள்ளதால் அது சிறந்த முதலீடாகக் கருதப்படுகிறது.

அதனால், இப்போது ஆபரணத்துக்காக தங்கம் வாங்குவோரைவிட முதலீட்டுக்காக தங்கம் வாங்குவோர் அதிகமாகிவிட்டனர். இச்சூழலில் தான் அட்சய திருதியை போன்ற மூடநம்பிக்கை களை தங்க நகை வணிகம் செய்வோர் பயன் படுத்துகின்றனர்.

அட்சய திருதியை நாள் உருவாக்கப்பட்டதிலிருந்து நகைக் கடைக் காரர்களுக்கு வேண்டுமானால் பணம் குவியுமே தவிர நகை வாங்கியவனுக்குக் குவியுமா? கடந்த 10 ஆண்டுகளாக அட்சய திருதியை நாளில் நகை வாங்கியோரெல்லாம் கோடீசுவரர்கள் ஆகிவிட்டார்கள் என்று சொல்லமுடியுமா? அந்த நாளில் கூடிய கூட்டத்தில், உள்ள நகையையும் பறிகொடுத்தவர்களுக்கு அட்சய திருதியை அந்த நகையைத் திருப்பிக் கொடுக்குமா?

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த அட்சய திருதியை மூடநம்பிக்கை என்பது இல்லை. அப்போதும் மக்கள் நகை வாங்கிக் கொண்டுதானிருந்தார்கள். அவர்களுக்கு வளம் இல்லாமல்  போய்விட்டதா? அல்லது வளம் பெருகாமல் போய்விட்டதா?

தமிழகத்தின் பிரபல கோவில் பட்டர் ஒருவர் ஆருடம் கூறியிருக்கிறார். அட்சய திருதியை நாளில் குறிப்பிட்ட  3 மணிநேரத்தில் நகை வாங்கி ஆண்டவன் முன் வைத்து வணங்கி னால் வளம் பெருகுமாம். அந்த 3 மணி நேரம் தவிர மற்ற நேரங்களில் வாங்கினால் என்னாகும் என்று ஏனோ அவர் சொல்லவில்லை.

உழைப்புதான் மனிதனை உயர்த்தும்; அறிவுதான் மனிதனைக் காக்கும் என்பதை உணரும் காலம் வரும் வரை இந்த மூடநம்பிக்கைகளால் மக்கள் தமது செல்வத்தை இழந்துகொண்டுதான் இருப்பார்கள்.
 - அன்பன்