இலங்கை-சம்பில்துறையில் நடமாடும் ஐயனார் சித்தர்[சந்திப்பு:செல்வத்துரை ,சந்திரகாசன்]


ஊரில் நான் கண்ட அதிசய மனிதர்


மாதகல் சம்பில்துறையில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் சிவபெருமானின் 21 அடி உயரதியான திருச்சொரூபத்தையொட்டியிருக்கும் சம்புநாத ஈஸ்வரர் ஆலயத்தில் அமர்ந்திருந்துநம்பிவரும் பக்தர்களுக்கு அவர் மனம் தணிய நல்வாக்குகள் வழங்கிக் கொண்டிருக்கும்,''ஐயனார்'' என்று எல்லோராலும் அழைக்கப்படும் தவயோகி ஒருவரைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது


அவர்மற்றைய சுவாமிகளைப் போலல்லாது ஒரு வித்தியாசமான அணுகுமுறையில் கதைத்தது என்னை வெகுவாகவே கவர்ந்ததுஇவர் மழைக்குக்கூட பாடசாலையின் திண்ணையருகேதன்னும் ஒதுங்கியது கிடையாதுசிறு வயசிலிருந்தே மிகவும் கஷ்டமான வாழ்க்கை வாழ்ந்ததால் கல்வி என்பது இவருக்கு எட்டாத ஒன்றாய் விட்டது.

     ஆனால்இவரிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு மிகவும் அறிவு பூர்வமானதற்கால சமுதாயத்திற்கு ஏற்கப்படக்கூடியதான பதில்களைமிகவும் சரளமாக கவிதை நடையில் அளிப்பதில் மிகவும் வல்லுனராகக் காணப்பட்டார்இவரின் வசன நடைகள்,  வைரமுத்துவின் கவிதைகள்போல் வெளியில் பொழிந்தவண்ணமே இருந்தன.. (இவரை விளங்க இயலாதவர்கள் 'ஒரே அலம்புகின்றார்என்றுதான் கூறுவார்கள்உண்மையில் இவர் பேச்சை ஊன்றிக் கவனத்துடன் கேட்டால்பதிலில் உள்ள பொருத்தம்பொருட்செறிவுகருத்தாழம்சொல்லாண்மைதொடர்புடைமைஎதுகைமோனை எல்லாம் மிகவும் செறிந்து காணக்கூடியதாக இருந்தது. -எனது அறிவுக்கு எட்டியவரை!- இவருக்கு எழுதவோவாசிக்கவோ தெரியாது என்பதால் சமய நூல்களையோபுராண இதிகாசங்களையோ அல்லது இலக்கிய நூல்களையோ படித்தும் கேட்டும் அறியாதவருக்கு இத்தகைய இறவனைப் பற்றிய பேச்சு வல்லமை -அறிவு பூர்வமான பேச்சுஆகம அறிவு அல்ல!-எங்கிருந்து வந்தது என்பது புதிராகவே உள்ளது.

நான் சென்று " என்னைத் தெரியுமா?"என்று கேட்டேன். (50 வருடங்களுக்கு  முன்பு அயல் வீட்டில் இருந்தவர்தான்). அதற்கு அவர் தனது அடுக்குக் கடுந்தமிழில் பலவிதமானவித்தியாசமான சொற்களை தாராளமாக உபயோகித்து பெரும் கவிதையையே உதிர்த்து விட்டார். (இந்த யுக்திதான் சாத்திரிமாரும்சாமிமாரும் பிரயோகிப்பது)  அவர் கூறியதிலிருந்து மேலெழுந்த வாரியாக எனக்குப் புலப்பட்ட விளக்கம்  ' நீ மிகவும் மனபணக் கஷ்டத்தினால் துடிக்கும் சிவபக்தன்விடிவு தேடி இந்தச் சிவனிடம் சரணடைந்து எனக்கு பக்க பலமாய் (பக்கச்சாவியாய்நிற்கவே வந்துள்ளாய்என்பதேநான் சொன்னேன், " நீங்கள் சொன்னது எல்லாம் வெறும் பிழைநான் கஷ்டமும் படவில்லைகடவுளையும் நம்பி வரவில்லைநீங்கள் அபரிதமான பேச்சுவன்மை கொண்டவர் என்பதை ஒத்துக்கொள்ளுகிறேன்அந்தக் காரணத்தினால் உங்களை ஒரு சுவாமி என்று ஒருபோதும் ஏற்றுக் கொள்ளவும் மாட்டேன்உங்கள் கடவுள் பணிகளுக்கு எந்த உதவியும் செய்யவும் (பக்கச்சாவி?) மாட்டேன்கடவுள்தான் எனக்குப் பணம் தருபவரே ஒழியஅவருக்கு  உதவி செய்ய நான் யார்என்னிடம் உதெல்லாம் அவியாதுஎன்று.

அவரோஎன்னை யாரென்று சுதாரித்ததால்தன் கூற்றில் உண்மையில் வேறு ஒரு கருத்து ஒளிந்திருப்பதாகக்  கூறி (ஐயையோசொல்ல வந்ததை நேராகச் சொல்லாமல் ஏன் இந்த சுத்து மாத்து?) சாதுரியமாக வேறு விளக்கம் தந்துமாறி அடித்து நான் பக்கத்து வீட்டு (பக்கச் சாவியாம்!) வாத்தியாரின் மகன் என்றார்.

இவரின் தனித்துவம் இவரின் வார்த்தை ஜாலம்தான்ஒரு நீண்ட கவிதைவாக்கிலே ஒரு நூறு வார்த்தைகளைப் பரவலாக வீசிவிட்டால்அவற்றினுள் ஓர் ஐந்து சொற்களாவது ஆறுதல் தேடி வந்தவரின் பிரச்சனையோடு ஒத்துப் போகக்கூடியதாக் ஆங்காங்கு இருக்கும்இவை மட்டுமே அவரின் காதுக்குள் நுழைவதால்உடனே பரவசத்தில் மயங்கி 'ஆஹாஇவர் அப்படியே சொல்லிப்போட்டார்என்று முழு விடயத்தையும் தாங்களாயே கக்கி விடுவார்அதை வைத்து இவரும் பிரச்சனைக்கான பரிகாரங்களை வழங்குவார்மனதார நம்புவர்களுக்கு மன அமைதி கிடைக்கிறது.

இவர் கூறியதில் இரண்டு விடயங்கள் எனக்குப் பிடித்திருந்தனஒன்று கடவுள் பற்றியதுமற்றது பாவ/புண்ணியம் பற்றியது.

அவர் (எனக்காக?) கூறியதாவது:
"முதலில்கடவுள் என்று ஒன்று இல்லைஅப்படி ஒன்றை வணங்கவும் தேவை இல்லைகடவுள் என்றால் நாங்கள்தான்நம் உள்ளம்தான்நமக்குள் இருக்கும் ஆன்மாதான் உண்மையான கடவுள் ஆகும்கடவுள் என்று எண்ணிக்கொண்டு சிலைகளையும்கற்களையும் கும்பிட்டு எனக்கு அதைத்தாஇதைத்தா என்று கேட்பதில் அர்த்தம் இல்லை"அடுத்துபாவ பலன் பற்றிப் பிரஸ்தாபித்தபோது நான் கேட்டேன், "முற்பிறப்பில் யாரோஎதுவோ செய்த பாவத்திற்கு எம்மைத் தண்டிப்பது படு அநியாயம் அல்லவோ?' என்றுஅதற்கு அவர் சொன்னார்:
"முற்பிறப்புமறு பிறப்பு என்று ஒன்றுமே இல்லைஎல்லாம் இப்பிறப்பில்மனிதன் பேராசை நிமித்தம் செய்யும் பாவச் செயல்கள்தான் அவனைத் தண்டிக்கின்றனஎன்று.

ஆத்மீக வாதிகளும்சமய அறிஞர்களும் குதர்க்கமாகவும்குதம்பலாகவும்  விளக்கும் விடயங்களை இவர் எனது சிந்தனைக்கு ஏற்றவாறு ஒத்துப் போகக்கூடிய கருத்துகளை உரைத்தது இவரின் பேச்சு சாமர்த்தியம் என்றுதான் கூறுவேன்.

அந்த இடத்தில்,கடவுளே கதிஇந்தச் சாமிதான் வழிகாட்டி என்று நான் போய் இருந்தேனேயானால் , அவரின் சம்பாஷனை வேறு விதமாக அமைந்திருக்கும்இவரின் வார்த்தை ஜாலங்களினால் கவரப்பட்டுசெல்பவர்கள் தங்கள் பிரச்சனைகள் எல்லாவற்றையும் எடுத்துக் கூறிஅருள் வாக்குப் பெற்றுஅதன் பின்னர் உயர்ந்தவர்கள் பலரில்இவரால்தான் தாம் பிழைத்தோம் என்று ஆயிரம்ஆயிரமாகக்கொடுப்பவர்களும்  இருக்கின்றார்கள்இவர் வழங்கும் நேரிய சிந்தனை பற்றிய அறிவுரையாலேயே பலர் சீர்வாழ்வு அடைந்துள்ளனர்.

இவர் கடந்த 50,60 வருடங்களாக 'ஐயனார்ஆக இருந்து வருகிறார்சில நம்ப முடியாத அற்புதங்களையும் புரிதிருக்கிறார்.

இவரின் ஆரம்ப காலத்தில் மறியலில் இருந்திருக்கிறார்ஒருநாள் தன் ஜெயில் அதிகாரியை அழைத்து "உன் மகன் வீட்டில் ஆபத்தான நிலையில் சாகக் கிடக்கிறான்நீ இங்கை சும்மா நிக்கிறாய்வீட்டை ஓடுஎன்று தனது ஞான திருஷ்டியினால் கூறினாராம்அவர் அங்கு போனால் இவர் சொன்ன மாதிரியே அவர் மகன் கிணற்றுனுள் தவறி விழுந்து ஆபத்தான நிலையில் இருந்தான்உடனடி சிகிச்சையினால் உயிர் தப்பினானாம்அதனால்அவ்வதிகாரிஇவர் இருக்க ஒரு சிறிய வீடும் கட்டிக் கொடுத்தார்.

இவரிடம் எதோ ஒரு சக்தி காணப்படுகிறது என்பது மறுக்க
முடியாத உண்மைஇவரை நம்பியவருக்கு இவர் நல்ல ஒரு வழிகாட்டியாகத்தான் இதுவரை இருந்து வருகிறார்
------------------------------------------------------  
                                                                                

7 comments:

  1. அவரை நாடிச் செல்வோர் அவரிடம் சிறு தொகை கொடுத்து பெரும் பலனை அடைய முடியாதா என்ற ஆதங்கத்துடனே பேராசையுடன் செல்வர்.ஆனால் உங்கள் சந்திப்பு வித்தியாசமானது.அவர் புகழ் பாடியதுடன் கூறியத்தை அப்படியே வெளிக்கொணர் ந்து ள்ளீர்கள்.

    ReplyDelete

  2. உங்கள் கட்டுரை ஊருக்கு போனால் சம்பில்துறை செல்லும் ஆவலை கொடுத்துள்ளது.

    ReplyDelete
  3. முதலில், கடவுள் என்று ஒன்று இல்லை; அப்படி ஒன்றை வணங்கவும் தேவை இல்லை. கடவுள் என்றால் நாங்கள்தான்; நம் உள்ளம்தான். நமக்குள் இருக்கும் ஆன்மாதான் உண்மையான கடவுள் ஆகும். கடவுள் என்று எண்ணிக்கொண்டு சிலைகளையும், கற்களையும் கும்பிட்டு எனக்கு அதைத்தா, இதைத்தா என்று கேட்பதில் அர்த்தம் இல்லை"


    ஆஹா என்னா மனுஷன் -என்னா துணிச்சல்

    ReplyDelete
  4. பிறேம் உஷா அபிMonday, November 17, 2014

    வணக்கம் ஐயா சித்தரின் பெருமை கூறும் தங்களிடம் ஒரு சந்தேகம் இதிகாசங்கள் புராணங்கள் கூறும் விடயம் பொய்யா? அல்லது சித்தர் கூறுவது பொய்யா? கடவுள் இருப்பது உண்மையா? அப்படியானால் அது கல்லா? சிலையா? அல்லது பயமா? விளக்கம் தரவும் நன்றி

    ReplyDelete
    Replies
    1. தீபத்தில் இதுவரையில் வந்த ஆன்மீக கட்டுரைகளை வாசித்தால் உங்கள் கேள்விக்கு விடை கிடைக்கும்.வரவிருக்கும் இன்னும் பல விடயங்கள் இது தொடர்பாகவே இருக்கும்

      Delete
    2. சந்திரகாசன்Monday, November 17, 2014

      வாருங்கள்.
      கடவுள் இருப்பது உண்மையா? இல்லையா?
      இருந்தால் இருந்துவிட்டுப் போகட்டுமே? இருந்தால் நமக்கு என்ன நன்மை; இல்லாவிட்டால்தான் என்னே நட்டம்?

      நாம் கும்பிட்டால் அவரின் உச்சி குளிரும்; அள்ளித் தருவார் என்று நினைத்தால் அது எவ்வளவுக்கு கடவுளை இழிமைப் படுத்தும் ஒரு விடயமாய் இருக்கும்!

      இந்த அண்ட சராசரங்கள், ஜீவன்கள் எல்லாவற்றையும் படைத்துக் காப்பவர் அவர்தான் என்று சொன்னாலும், நீங்கள் அவரைக் கும்பிடாமல் விட்டு விட்டால்போல அவர் அத்தொழிலைச் செய்வதை உடனே நிற்பாட்டப் போவதுமில்லை.

      அவரை 24 மணி நேரமும் விழுந்தது, விழுந்து வணங்குபவர்களுக்கும் சரி, நித்தமும் நிந்திப்பவர்களுக்கும் சரி ஒரேமாதிரியான நனமைகளும், தீமைகளும் தானே வருகின்றதே!

      அவர் இருந்தால், அவருக்குத் தெரியும் என்ன செய்ய வேண்டும் என்று. நாம் அவருக்குச் சொல்லிக் கொடுக்கத் தேவை இல்லை!

      மகாசோனி என்ற ஊரின் மண் ஒழுங்கையில் உள்ள மாப்பிள் மரப் பட்டைக்குள் இருக்கும் ஒரு சில் வண்டு பற்றி நாம் எப்போதாவது கவலைப் பட்டுள்ளோமா? அதுபோலத்தான் இதுவும்!

      Delete
  5. வணக்கம்
    கடவுள் என்பவர் ஒரு எப்படி என்று கேட்கிற்களா
    (ஏலியன் )சித்தர் வின்னில் இருந்து வந்தவர்கள் அவர்கள் மனிதர்களை படைக்கும்பொழுது
    அவர்கள் உலகில் உள்ளவர்கள் அனைவரும் நம்மலை போன்றவர்கள் அல்ல முகம் உடல் அனைத்தும்
    கரடுமுரடாக இருந்தது மேலும் பல குறைகள் இருந்தது இவைகளை நிவர்த்தி செய்து உருவாக்கப்பட்டது தான் நம் உடல் எப்படி என்று கேட்கிற்களா ஒரு சிரிய உதாரணம் நம் உடலையும் மற்ற அனைத்து உயிர்களையும் ஒப்பிடுகையில் உங்களுக்கே. புரியும் .... அவர்களுக்கு எப்படி சக்தி கிடைத்தது என்ற சந்தேகம் முப்பது நாட்கள் நீங்கள் உங்கள் மனதை ஒரு நிலை படுத்தி தியானம் செய்து பாருங்கள் உங்களுக்கு புரியும் காலை 6 மணிக்குள் 20 நிமிடம் ....அல்லா .ஏசு ்.கிருஷ்ணர்.சிவன்.புத்தர். அனைவரும் நம்மலை போன்றவர்கள் தான் அப்புரம் எப்படி ்நம்மலை படைத்தார்கள் ்உங்களிடம் ஓர் கேள்வி மனிதன் உயிர்களை படைக்கிறானா்.ஆம் . என்பது பதில் என்றால் மனிதன் கடவுள் தானே தற்போது கடவுள் எப்படி படைத்தான் என்பதற்க்கு ஆதாரம் இருக்கு மனிதனில் ஜாதி்மதம் என எந்த வேறுபாடும் இல்லை இது நமக்கு நாமே உருவாக்கபட்டது ஒவ்வொரு கடவுளும் (சித்தர்) ஏலியன் )மூன்றும் ஒன்றே ஒவ்வொரு சிந்தனை கொண்டுள்ளார்கள் அவர்கள் தங்கள் கருத்துக்களை தான் கூரிணார்கள் நாம் தான் தனிதனி என்று புரிந்து கொண்டொம் ஆனால்

    ReplyDelete