பண்டைய தமிழரின் சமயம்-பகுதி 07:

[ஆக்கம்:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]




மாணிக்கவாசகரின் "சிவ புராணம்" ஒரு பக்தி பாடல்கள் . அத்துடன் தமிழ் சைவ சித்தாந்தம் ஒரு புராணம்(Sanskrit : पुराण purāṇa, "of ancient times") அல்ல.ஆகவே சமஸ்கிரத சிவ  புராணத்துடன்   இதை  குழப்பவேண்டாம்.

"எங்கு அன்பு உள்ளதோ அங்கு வாழ்வு உண்டு"

பெரும்பாலான சைவர்கள் மாணிக்கவாசகரின் வரலாற்றில் இருந்தும் அவரின் போதனையில் இருந்தும்  தெய்வீக உத்வேகத்தை  எடுக்கிறார்கள் .அவரின் சிவ புராணம் -துதி பாடும் மந்திரமாக பயன் படுத்துகிறார்கள் ."நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க"என திரும்ப திரும்ப ஒலிக்கும் எளிதில் மறக்க முடியாத  அடியை முதல் அடியாக கொண்டு அது தொடங்கிறது


சிவபுராணம் என்பது கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் வாழ்ந்த மாணிக்கவாசகரால்  இயற்றப்பட்ட திருவாசகம்  என்னும் சைவத் தமிழ் நூலின் ஒரு பகுதி ஆகும். திருவாசகத்திற்கு உருகாதார் ஓர் வாசகத்திற்கும் உருகார் என்று போற்றப்படும் சிறப்புப் பெற்ற இந் நூலின் முதற் பகுதியாகச் சிவபுராணம் அமைந்துள்ளது. 95 அடிகளைக் கொண்டு கலிவெண்பாப்  பாடல் வடிவில் அமைந்துள்ள இது சைவர்களின் முதன்மைக் கடவுளான சிவபெருமானின்  தோற்றத்தையும், இயல்புகளையும் விபரித்துப் போற்றுகிறது. அத்துடன், உயிர்கள் இறைவனை அடைவதற்கான வழிமுறைகளையும் சைவசித்தாந்தத்  தத்துவ நோக்கில் எடுத்துக்கூறுகின்றது

"நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க "


" ந ம சி வா ய "என்ற ஐந்து எழுத்துக்களாலானதுமான இந்த மந்திரம் சைவ பரம்பரை வழக்கம் / மரபின் படி ஒரு மிகவும் புனிதமான அஞ்செழுத்து மந்திரம்  ஆகும் .இதை முறைப்படியாக குருவிடம் இருந்து பெற்று,ஒழுங்காக  மீண்டும் மீண்டும் திருப்பிச் சொன்னால் ,இது தெய்வீக வாழ்வை நிறைவடைய செய்யும் .இதன் கருத்து நான் சிவனுக்கு தலை வணங்குகிறேன் . 

 இது காறும் கூறியவற்றால் நாம் அறிந்தது :-
ஆங்கில அறிஞர் சர் ஜான் மார்ஷல் முயற்சியால் சிந்து சம வெளி நாகரீகம்  அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டுசிந்து சமவெளி மக்கள் திராவிடர்கள்  என்றும், இவர்களது மொழி பழந்தமிழ் எனவும், ஹரப்பாமொகஞ்ச தாரோவில் தோண்டி எடுக்கப்பட்ட புதைப் பொருட்களின் ஆராய்ச்சியில்  5000 ஆண்டு களுக்கு முன்னரே ஆதிமுன்னோரைச் சார்ந்த ஒரு வித[மூல] "தாய்"[சக்தி ] , சிவ வழிபாடு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.அத்துடன் லிங்க ,யோனி வழிபாடும் அங்கு இருந்ததும் தெரிய வருகிறது.அத்துடன் அரசமரம்  புனித மரமாக கருத்பட்டுள்ளது .ஆனால் அங்கு கோயில்  இருந்ததிற்க்கான  ஆதாரங்கள் இது வரை கிடைக்கவில்லை.

தொல்காப்பிய தமிழர்களிடையே தெய்வ வணக்கம் இருந்தது. ஆனால் கடவுள் நம்பிக்கையோ சமயமோ இருக்கவில்லை.தெய்வம் நமக்குள், நம்மோடு இருப்பது. கடவுள் நம்மைக் கடந்து இருப்பது[உள்ளது].உதாரணமாக கடவுள் என்னும் சொல் திருக்குறளில் இல்லை. தெய்வம் என்னும் சொல் திருக்குறளில் ஆறு இடங்களில் பயன்றுவருகிறது...தெய்வம் எனப் போற்றப்படுபவர் துறவிகள்,கணவன்......தொல்காப்பியம் மாயோன், சேயோன், வேந்தன், வருணன் என்னும் தெய்வங்களை நானிலத் தெய்வங்களாகக் காட்டுகிறது.
மேலும் மிகவும் விரும்பிய தெய்வமாக முருகன் இருந்தார்.போரில் வீரச் சாவு அடைந்த வீரர்கள் உயர்வாக மதிக்கப் பட்டனர் . இந்த வீரர்கள் புதைத்த இடத்தில் நடு கல்கள்  நாட்டப்பட்டன என சங்க பாடல்கள்  குறிப்பாகத் தெரிவித்துள்ளன .இப்படி நடு கல்  கட்டி எழுப்பும் வழக்கம் ,சங்க காலத்திற்கும் பிறகும் ,நீண்ட காலத்திற்கு பதினோராவது  நுற்றாண்டு வரை தொடர்ந்து உள்ளது .போரில் வெற்றி வேண்டி ,நடு கல் வணக்கம் செய்வது ஒரு வழமையாக இருந்ததுள்ளது .சங்க காலத்து கோவில்கள் அழிந்து போகக்கூடிய .பொருட்களால் கட்டப்பட்டதால் ,இன்று அவற்றின் சிறு அடையாளங்களே  காணக் கூடியதாக உள்ளது.

 தொடரும்....
ஆரம்பத்திலிருந்து படிக்க அழுத்துங்கள்:- Theebam.com: பண்டைய தமிழரின் சமயம் /பகுதி 01



2 comments:

  1. போரில் வீரச் சாவு அடைந்த வீரர்கள் உயர்வாக மதிக்கப் பட்டனர்.
    அதாவது தெய்வமாக மதிக்கப்பட்டனர்.அவர்ககளுக்கு நாட்டப்பட கல் வணக்கத்துக்குரியதாக இருந்தது.காலங்கள் கழிய அவ்விடத்தில் ஆலயங்கள் எழுந்தன.மறைந்த அவர்கள் கடவுளாக திரிபுபடுத்தப்பட்டனர்.

    ReplyDelete
  2. ஆனால் இன்று மக்களுக்காக கடவுள் என்ற நிலை மாறி கடவுளுக்காக மக்கள் வாழுகின்ற மையும், கடவுளுக்காக மக்கள் வழிபாடு செய்வதையும் காணும்பொழுது, அவை இறைவழிபாடு என்பது சிரிப்புக்கிடமாக சென்றுவிட்டது

    ReplyDelete