ஒளிர்வு-(29)பங்குனித்திங்கள்-2013



உண்மைகள்உரைக்கப்படும்தளம்-தீபம், மூடநம்பிக்கைகளின்முடிவிடம்.
தினசரி புதிய தகவல்களுடன் தீபம் இணைய சஞ்சிகை 
                        உங்கள்படைப்பைசமர்ப்பிக்க: manuventhan@hotmail.com
சிந்தனைஒளி
*  இறைவன்ஒவ்வொருஉயிரினோடும்
உடன்பிறக்கமுடியாதுஎன்பதற்காக
தாயைத்தன்பிரதிநிதியாகஅனுப்புகிறான்.
      * மனைவியும்கொம்பியூட்டரும்பயன்பாட்டில்ஒன்று.
புரிந்துகொண்டால்சொர்க்கம். இல்லைஎன்றால்நரகம்!
*  பணிவுஎன்பதுதாழ்மையின்சின்னமல்ல.
உயர்ந்தபண்பின்அறிகுறி!
*  எல்லோரிடத்திலும்தெய்வம்உண்டு!
ஆனால்எல்லோரும்தெய்வத்திடம்இல்லை!
*  முட்டாள்கள்மௌனமாகஇருப்பதுபுத்திசாலித்தனம்
புத்திசாலிகள்மௌனமாகஇருப்பதுமுட்டாள்தனம்!

2 comments:

  1. கந்தையா தில்லைவிநாயகலிங்கம்Sunday, March 17, 2013

    "பணிவு என்பது தாழ்மையின் சின்ன மல்ல.
    உயர்ந்த பண்பின் அறி குறி!"

    முதற்கண்[முதலில்] தாழ்மை பற்றிய சொல்லின் பொருளை பார்ப்போம். lowliness of mind , humility , பணிவு 2 . inferiority of rank ; கீழ்மை 3 . poverty , எளிமை .இப்படி வரும்.

    ஆகவே தாழ்மை என்பது கோழைத்தனம் அல்ல. தாழ்மை என்பது தன்னை உயர்த்தி கொள்ளும் ஏணி படியாகும்..!அதாவது தாழ்மை என்பது ‘பிறர் நம்மை விட முக்கியமானவர்கள்’ என்ற சிந்தனையை மனதில் கொண்டிருப்பது.இது நம்முடைய திறமைகளைக் குறைத்து மதிப்பிடுவது என்று பொருள்படாது. ஆணவத்தை அல்லது ‘நான்’ என்கின்ற சிந்தனையை அடக்குவதே என பொருள் கொள்ளலாம்.

    ‘நாம் வாழ்க்கையில் சிறந்தவர்களாக வேண்டு மெனில் தாழ்மையில் சிறந்தவர்களாக இருக்க வேண்டும்’ என்கிறார் ரவீந்திரநாத் தாகூர். தாழ்மையைப் பற்றி சமயங்கள் என்ன கூறுகின்றது என்று பாருங்கள்

    'தங்களது பிரார்த்தனையில் தாழ்மையாய் இருக்கும் மக்களையே வெற்றிகள் வந்து சேரும்' - இஸ்லாம்.
    'கடவுளுக்கு முன்பாக தனது ஒன்றுமில்லாமையைக் குறித்து அழுது புலம்பி வேண்டினால் கடவுளைக் காணலாம்' - அமெரிக்காவின் பூர்வீகக் குடிகளின் மதம்.
    'தாழ்மையாய் இருங்கள், யாருக்கும் தீங்கு செய்யாதிருங்கள், நேர்மையாய் இருங்கள், குருவுக்கு முழுமையாய்க் கீழ்ப்படியுங்கள், தன்னலத்தை விட்டொழியுங்கள்' -பகவத் கீதை.
    தன்னை உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான். - (மத்தேயு 23:11-12)
    'கர்வத்தைத் தாழ்மையால் வெல்லுங்கள்'- சமண மதம்.

    இப்படி எல்லா சமயங்களும் கற்பிக்கும் தாழ்மை, எமது மனதில் இருந்தால் வாழ்க்கையில் வருகின்ற எல்லா தடைகளையும் குறைகளையும் இலகுவாக வென்று விடலாம் என்பதே உண்மை.

    “மனைவி யுயர்வுங் கிழவோன் பணிவும்
    நினையுங் காலைப் புலவியுள் உரிய”
    என்பது தொல்காப்பிய நூற்பா.(பொருளியல்33)
    இல்லறம் நிகழும்போது, மனைவி தலைவனிடத்தில் காரணம் பற்றியோ அல்லது காரணத்தைக் கற்பித்துக் கொண்டோ ஊடுதலும், ஊடலைத் தணிக்க நாயகன், தன்னுடைய தலைமைப் பண்புக்கு மாறாக, அவளடியில் பணிதலும்[தாழ்தலும்], அவன் அவ்வாறு பணிந்த[தாழ்ந்த]போது, நாயகி அச்சமும் நாணமுமின்றி நாயகனின் பணிதலை[தாழ்தலை] ஏற்றுக் கொள்வதும் தலைவன் தலைவி இருவர்க்கும் உரிய என்பது இந்நூற்பாவின் கருத்து.

    "முட்டாள்கள் மௌனமாக இருப்பது புத்திசாலித்தனம்
    புத்திசாலிகள் மௌனமாக இருப்பது முட்டாள்தனம்!"

    இரண்டாயிரம் ஆண்டுகளிற்கு முன் வாழ்ந்த திருவள்ளுவர் என்ன கூறினார் என பார்ப்போமா ?
    குறள் 403:
    "கல்லா தவரும் நனி நல்லர் கற்றார் முன்
    சொல்லா திருக்கப் பெறின்."

    கற்றவரின் முன்னிலையில் ஒன்றையும் சொல்லாமல் அமைதியாக இருக்கப் பெற்றால் கல்லாதவர்களும் மிகவும் நல்லவரே ஆவார்.

    பொதுவாக "புத்திசாலிகள் வாய் மனதில் இருக்கும்; ,முட்டாள்கள் மனம் வாயில் இருக்கும்."ஆகவே புத்திசாலிகள் மௌனமாக இருக்கக் கூடாது என்பது வெளிப்படையே! அது போலவே "பூ மலர்ந்து கெட்டது,வாய் விரிந்து கெட்டது." ஆகவே முட்டாள்கள் மௌனமாய் இருப்பது நல்லது!!

    இப்ப நான் படித்த ஒரு கதையை தருகிறேன்.

    மன்னர் புருஷோத்தமனுடைய மைத்துனன் மனோகரன் ஓர் அஞ்சா நெஞ்சன். தன் மனதில் தோன்றுவதை மறைக்காமல் எடுத்துரைப்பவன். மன்னரின் கருத்துக்கு எதிரான கருத்துக்களைக் கூற மற்றவர்கள் தயங்கும் போது, மனோகரன் அது தவறெனத் தோன்றினால் அவரை எதிர்த்து பேச தயங்க மாட்டான்.
    ஒருநாள் சபையில் புருஷோத்தமன் தனது அரசாட்சியில் இளைஞர்களின் வேலையில்லாத் திண்டாட்டத்தைப் பற்றி அமைச்சர்களுடன் விவாதித்தார். அப்போது, "வேலையற்ற இளைஞர்களுக்கு மாதம் 30 வராகன்கள் உதவித்தொகை அளிக்கலாம் என்று நினைக்கிறேன்" என்றார்.
    அமைச்சர்கள் அதைக் கேட்டு "ஆகா, அற்புதமான யோசனை" என்று பாராட்டினார்கள். ஆனால் மனோகரன் மட்டும், " இது மதியற்ற செயல். உதவித்தொகை அளிப்பதால் அந்த இளைஞர்கள் சோம்பேறி ஆகிவிடுவார்கள். இதை விடுத்து, அவர்களுடைய நிரந்தர வருமானம் தரும் வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும்" என்று மன்னரின் கருத்துக்கு எதிர்மாறான கருத்தைக் கூறினான்.

    சபையில் நடந்ததைக் கேட்டு சினமுற்ற ராணி தன் சகோதரனைப் பார்த்து, "மன்னனை விமர்சிக்க உனக்கு என்ன தைரியம்? இந்த ராஜ்யத்தை விட்டு இப்போதே வெளியேறு" என சீறி விழுந்தாள்.ஆனால் அவளைத் தடுத்த மன்னர், "அவனைக் கோபிக்காதே ராணி. அவன் மனதில் பட்டதைக் கூறுகிறான். தன் கருத்துப்படி தான் மற்றவர்கள் நடக்கவேண்டும் என்று மன்னன் நினைப்பது தவறு. புத்திசாலிகள் கூறும் ஆலோசனைகளை பரிசீலித்து மக்களுக்கான திட்டங்களை வகுக்க வேண்டும். மனோகரன் புத்திசாலி. பொறுமையாக அவன் கூறுவதைக் கேட்போம்" என்றார்.

    அவர் பொறுமையிழக்காமல் மனோகரனின் நலத்திட்டங்களைக் கேட்டு, அதை அப்படியே நடைமுறைப்படுத்தினார். அது முதல் நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் முற்றிலும் ஒழிந்தது.

    ReplyDelete
  2. முட்டாளுகளுக்கு மத்தியில் புத்திசாலிகள் மௌனமாக இருப்பதே புத்திசாலித்தனம்.

    ReplyDelete