விமர்சனம்

2013-02-27      ஆதி பகவன்
கதை : தாய்லாந்தில் தாதாவாக இருக்கும் ஆதி என்ற ஜெயம்ரவியைக் காதலிப்பதுபோல் நடித்து அவரை மும்பைக்கு அழைத்து வருகிறார் நீத்து சந்திரா. இங்கே ஆள் மாறாட்டத்திள் தள்ளி ஆதியைக் கொலை செய்ய முயற்சி நடக்க.. அதில் இருந்து அவர் எப்படி தப்பிக்கிறார் என்பதுதான் கதை..!
நடிகர்கள் : ஜெயம் ரவி, நீத்து சந்திரா, பாபு ஆன்டனி, சுதா சந்திரன்
கருத்து : 'பருத்தி வீரன்' என்னும் கதையில் கிடைத்த பெருமையை, இப்படம் நிச்சயம் அமீருக்குச் சம்பாதித்து கொடுக்காது
புள்ளிகள்:45
2013-02-27          ஹரிதாஸ்
கதை : இன்றைய உலகில் பெரும்பாலான குழைந்தைகள் ஆட்டிசம் எண்ணும் நோயால் பாதிக்கப்படுகின்றனர். ஆட்டிசம் என்பது மூளை சம்பந்தப்பட்ட ஒரு குறைபாடு.
அப்படி ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுவன்தான் ஹரிதாஸ்.
நடிகர்கள் : கிஷோர் , சினேகா.
கருத்து : நிச்சயம் ஒரு முறையாவது பார்க்க வேண்டிய படம்..!
புள்ளிகள்:55
2013-02-12      டேவிட்
கதை.: கோவா கடற்கரையில் வாழும் டேவிட் எனும் மீனவர் விக்ரமின் காதல் கலாட்டாக்களும் மும்பையில் கிறிஸ்தவ பாதிரியார் நாசரின் மகனாக கிடாரிஸ்ட்டாக டேவிட் எனும் 2013-02-12          டேவிட்
ஜீவா பண்ணும் சேட்டைகளும், படும்வேதனைகளும் தான் "டேவிட்"
நடிகர்கள் : விக்ரம், ஜீவாதபு, லாரா தத்தா
கருத்து : விக்ரமின் வரலாற்றில் இப்படி ஒரு சொதப்பல் படம் வந்ததேயில்லை
புள்ளிகள்:35
2013-02-08          கடல்
கதை : கல்லூரிக்கு வரும் அரவிந்தசாமி, அங்கே உடன் படிக்கும் அர்ஜூனின் அஜால்குஜால் வேலையை ஒரு நாள் பார்த்துவிட்டு மேலிடத்தில் பற்ற வைத்துவிட அர்ஜூன் வெளியேற்றப்படுகிறார். இதனால் கடுப்பான அர்ஜூன் பின்னாளில் அரவிந்த்சாமியையும் இதே போன்ற ஒரு வில்லங்கத்தில் சிக்க வைத்து பழி வாங்குகிறார். தொடர்ந்து இவர்களது ஆட்டம் என்ன ஆனது என்பதுதான் மிச்சம், மீதிக் கதை..!
நடிகர்கள் :கௌதம், துளசி நாயர், அர்ஜூன்.
கருத்து : மணிரத்தினத்தைப் பொறுத்தவரையில் பல உலகப் பட விழாக்களில் பங்கேற்க முழுத் தகுதியுடைய படம் இது
புள்ளிகள்:50
திரையுள்..
தமிழ் சினிமாவின் முடிசூடா நகைச்சுவை மன்னன் வடிவேலு..!
நீண்ட நாட்களாகவே வடிவேலு பற்றி எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன்.
 கடந்த பொங்கல் கொண்டாட்டங்கள் என்ன கூத்து நடக்கிறது என்று சேனல்கள் பக்கம் சும்மா ஒரு ரவுண்ட் வந்தேன்.. எனக்குத் தெரிந்து வடிவேலு எந்த டிவியிலும் காட்டப்படவில்லை. இதே ஒரு காலத்தில் எந்தச் சேனலை திருப்பினாலும் வடிவேலுவின் பேட்டிகள் தான் ஓடிக்கொண்டிருக்கும்.
 ஆனால் இன்று எந்தப் பட வாய்ப்பும் வழங்கக்கூடாது என்ற மறைமுக மிரட்டலில் திரைத்துறை திட்டமிட்டு ஒரு நல்ல நடிகனை புறக்கணிக்கிறது என்பது எவ்வளவு கொடுமையானது.
  தமிழ் சினிமா உலகம் என்.எஸ்.கே., சந்திரபாபு.. சுருளி ராஜன், டி.எஸ்.பாலையா, வி.கே.ராமசாமி, நாகேஷ், கவுண்டமணி.. செந்தில் எனப் பல நகைச்சுவை நடிகர்களைக் கண்டிருக்கிறது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு காலத்தில் கொடிகட்டி பறந்திருக்கிறார்கள்.

ஆனால் சமகாலத்தில் என்னை மிகவும் கவர்ந்த நகைச்சுவை நடிகர் வடிவேலு தான்.
 கலைகளில் மிக முக்கியமானது நகைச்சுவை. ஒருவனை எளிதில் அழவோ கோபமோ பட வைத்துவிட முடியும். ஆனால் சிரிக்க வைப்பது அத்தனை எளிதல்ல. கதாநாயகர்களை விட நகைச்சுவை நடிகர்களுக்கு உடல்மொழியும் முகபாவனையும் மிக முக்கியம். இவ்விரண்டையும் தனது நகைச்சுவையில் வெகு இயல்பாக பயன்படுத்தியவர் வடிவேலு.
 முக்கியமாக முற்போக்கு என்ற பெயரில் ஊளைச்சத்தம் போடுபவர்களுக்கு மத்தியில் வடிவேலுவின் நகைச்சுவைப்பாணி தனித்துவமானது.
 கவுண்டமணி செந்திலிடம் உதைவாங்கி நடித்தது உட்பட வடிவேலுவின் ஆரம்பகாலத் துக்கடா நகைச்சுவை காட்சிகளிலும் அவர் தனது தனித்தன்மையுடனே இருந்திருக்கிறார் என்பதைக் காணமுடியும்.
 விவேக்கின் நகைச்சுவையில் ஊருக்கு புத்தி சொல்கிறேன் என்ற பெயரில் வெறும் சவுண்ட் மட்டுமே இருக்கும். பார்வையாளர்களை மட்டம் தட்டுவார். மிமிக்ரி செய்வதற்கு முயற்சி செய்யும் ஒரு மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட்டுக்கான தன்மையே அவரது நடிப்பில் இருக்கும். எம்.ஆர்.ராதா, சுருளி குரலில் பேசியே ஒப்பேத்துவார். உடல்மொழி சுத்தம்.
 விவேக்கிற்குப் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டபோது..
`அப்துல் கலாம் ஐயா.. அப்துல் கலாம் ஐயா..’ என்று கூவியதுக்குத் தான் இந்த விருது என்று பலருக்கும் தெரியும். கூடவே அவர் செய்யும் நுட்பமான சாதி அரசியல் அவருக்குப் பக்கபலமாக இருந்தது.
  வடிவேலு அப்படியான எதையும் நம்பி இயங்காமல் தனது நகைச்சுவையை மட்டுமே நம்பி நடித்தார்.. இன்றைக்கு வடிவேலுவின் காமெடியை நம்பியே பல நகைச்சுவை சேனல்கள் வாழ்கின்றன. ஒவ்வொரு குழந்தைக்கும் வடிவேலுவின் வசனம் அத்துப்படி. இதை விட ஒரு நகைச்சுவை நடிகனுக்கு வேறு என்ன விருது பெருமை அளித்துவிட முடியும்.

``உங்களுக்கு வந்தா ரத்தம்.. எங்களுக்கு வந்தா தக்காளிச்சட்னியா..” என்ற வடிவேலுவின் நகைச்சுவை வசனம் தான் எவ்வளவு பெரிய அரசியல் தத்துவத்தைச் சொல்கிறது..
 வடிவேலுவுக்கும் விஜயகாந்துக்குமான மோதல் வெகுசாதாரணமாக முடிந்திருக்க வேண்டியது. ஆனால் வடிவேலுவை தனது கட்சி பிரச்சாரத்திற்காகப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் அது பெரிதாக்கப்பட்டது. வடிவேலுவும் விஜயகாந்தை எதிர்க்க விரும்பி திமுகவுக்குப் பிரச்சாரம் செய்தார். ஆனால் இன்று அவ்விரு கட்சிகளும் கூட்டணி பேச்சு நடத்துகிறதாம்..
 ஆனால் கருணாவை நம்பி போன வடிவேலு இன்று..?
 ராஜதந்திரத்தைக் கரைத்துக்குடிக்க நீங்கள் அரசியல்வாதியல்ல இம்சை அரசனே.. புரிந்து கொண்டு மீண்டு வாருங்கள்..
 காத்திருக்கிறோம்..
 நகைச்சுவை அரசனுக்காக..!

நன்றி - கார்ட்டூனிஸ்ட்.பாலா

0 comments:

Post a Comment