புனே வாரியர்ஸ் அணிக்கு இலங்கையின் மாத்யூஸ் கேப்டன் Angelo Mathews Lead Pune Warriors Ipl 6
டெல்லி: ஐபிஎல் 6வது தொடரில், புனே வாரியர்ஸ் அணிக்கு இலங்கையின் ஏஞ்சலோ மாத்யூஸ் கேப்டனாக இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 3ம் தேதி 6வது ஐபிஎல் தொடர் தொடங்குகிறது. இதில் புனே வாரியர்ஸ் அணியின் கேப்டனாக மாத்யூஸ் அறிவிக்கப்பட்டுள்ளார்.
அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஆலன் டொனால்ட் செயல்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. உதவி பயிற்சியாளராக ராப் வால்டர்ஸ் இருப்பார். பிரவீன் ஆம்ரே இன்னொரு உதவி பயிற்சியாளர்.
மாத்யூஸ் கேப்டனாக அறிவிக்கப்பட்டாலும் கூட சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவர் விளையாட மாட்டார். காரணம் போட்டி சென்னையில் நடைபெறுவதால்.
கடந்த 2 ஆண்டுகளாக மாத்யூஸ்,புனே வாரியர்ஸ் அணிக்காக ஆடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment