தெனாலிராமன், கிருஷ்ணதேவராயர் என இரட்டை வேடத்தில் கலக்கும் வடிவேல்!


vadivelஒருவழியாக நடிகர் வடிவேலுவின் வனவாசம் முடிவுக்கு வருகிறது. விஜயகாந்த் மீது கொண்ட பகையால் அரசியல் களத்தில் புகுந்த வடிவேலுவுக்கு சினிமாவில் பலத்த அடி. இரண்டு வருடமாக சினிமா வாய்ப்பு இன்றி தவித்த வடிவேலு புலிகேசி இரண்டாம் பாகத்தில் நடிக்கிறார், தெனாலிராமன் கதையில் நடிக்கிறார், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் படத்தில் நடிக்கிறார் என பல தகவல்கள் வெளியாகின. ஆனால் வடிவேலுவை வைத்து படம் தயாரிப்பாளர் யாரும் முன்வரவில்லை. இதற்கிடையே இம்சை அரசன் புலிகேசி பார்ட்-2வில் வடிவேலு நடிக்க இருந்த நிலையில், கதையில் சில மாற்றங்கள் செய்ய சொன்னார். ஆனால் அதற்கு டைரக்டர் சிம்புதேவன் உடன்படவில்லை. அதனால் அப்படத்திலிருந்து விலகினார் சிம்புதேவன்.
இந்நிலையில் வடிவேலு தெனாலிராமன் படத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது. போட்டா போட்டி படத்தை இயக்கிய யுவராஜ் இயக்கும் கஜ புஜ கஜ தெனாலிராமனும் கிருஷ்ணதேவராயரும்” என்ற படத்தில் நடிக்கிறார். இதில் வடிவேலு தெனாலிராமன், கிருஷ்ணதேவராயர் என இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இமான் இசையமைக்கிறார். ஏ.ஜி.எஸ்., நிறுவனம் தயாரிக்கிறது. தற்போது தனது மகள் கல்யாணத்தில் பிஸியாக இருக்கும் வடிவேலு, மகள் கல்யாணத்தை முடித்த பிறகு தெனாலிராமன் படத்தில் நடிக்க போகிறார். ஆக வடிவேலுவின் வனவாசம் முடிவுக்கு வருகிறது.

0 comments:

Post a Comment