புதிய வெளியீடும் ,ஒரு குறும்படமும்


-இவ்வாரம் புதிய வெளியீடுகள்-  



படம்: 'தேன்' விமர்சனம்
நடிகர்: தருண் குமார், அபர்ணதி, அருள்தாஸ்
இயக்குனர்: கணேஷ் விநாயகன்
சுருக்கமான விமர்சனம்: பெற்றோரும் ,ஊரும் ஒதுக்கி வைத்தும் ,திருமண பந்தத்தில் இணைந்த ஒரு காதல் ஜோடியின் வாழ்வில் ,நாயகியின் நோயினையும் , ஊரின் ஒதுக்கலையும் முறியடித்த இனிமையான கதை.
வெளியீடு: 19 மார்ச் 2021
புள்ளி: 3/5

↠↠↠↠↠↠↠↠↠↠↠↠↠↠↠↠

படம்: 'நம்ம ஊருக்கு என்ன தான் ஆச்சு'
நடிகர்:மகேந்திரன்
இயக்குனர்: நல். செந்தில் குமார்
சுருக்கமான விமர்சனம்: திருவிழாவை தடுத்தவர் இறந்து ஆவியாக வந்து ஒரு கிராமத்தினை பயமுறுத்துவத்தின் காரணம் என்ன என்பதனை கண்டு பிடிக்கும் ஒரு நாயகனின் கதை. சுவாரஸ்யம் குறைவு.
வெளியீடு: 19 மார்ச் 2021
புள்ளி: 2/5

↠↠↠↠↠↠↠↠↠↠↠↠↠↠↠↠

மொசகள்ளு விமர்சனம்
படம்: 'மொசகள்ளு'
நடிகர்:மன்சு விஷ்ணு, காஜல் அகர்வால்
இயக்குனர்: மன்சு விஷ்ணு, ஜெஃப்ரே ஜீ சின்
சுருக்கமான விமர்சனம்:பணம் சம்பாதிக்கவேண்டும் என்ற கனவுகளுடன் அமெரிக்கா சென்று பெரும் பணம் மோசடிகளை மேற்கொண்ட இரு சகோதரர்கள் வெற்றி கொண்டார்களா என்பதே படத்தின் கதை. பெரும்பாலான கதாபாத்திரங்கள்  ஆளுமை இல்லாதவை.
வெளியீடு:19 மார்ச் 2021
புள்ளி:2/5


📽📽📽📽📽📽📽📽📽📽📽📽📽📽📽📽📽📽

-கொடுமை அது -குறும் படம் -பசி-




உணவை அதிகமா சமைத்து உண்ண முடியாமல் திண்டாடும் மனிதர் கூட்டம் ஒருபுறம், ஒருவேளை சோற்றுக்கு வழியில்லாம திண்டாடும் மனிதர் இன்னொருபுறம். இதனை விளக்கும்  8 நிமிடங்களேயான ஒரு குறும்படம். 

👉தொகுப்பு:செமனுவேந்தன் 


0 comments:

Post a Comment