புதிய வெளியீடுகளும், ஈழத்து குறும் படமும்


இவ்வாரம் திரைக்கு வந்த படங்கள்:


படம்: எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா

நடிகர்: அகில், இஷாரா நாயர், யோகி பாபு, மனோபாலா, மனிஷா, மொட்டை ராஜேந்திரன்

இயக்கம் : கெவின்

விமர்சனம் சுருக்கம்:சினிமாவில் ஹீரோவாக வேண்டும் என்ற லட்சியத்தோடு பயணிக்கும் நாயகன் அகில், வாழ்க்கையில் வரும் காதல், அவருடைய லட்சியத்திற்கே  எமனாக உருவெடுக்க, அவற்றினை எதிர்கொண்டு வெற்றிபெறும் நகைச்சுவைப் படம்.

வெளியீடு: 26 மார்ச்  2021

மதிப்பு: 2.5/5

 

படம்:காடன்

நடிகர்: விஷ்ணு விஷால், ரானா டகுபதி

இயக்கம் : பிரபு சாலமன்

விமர்சனம் சுருக்கம்: காடும்  ,விலங்குகளும்  வாழ்ந்தால்தான் நாடும் மனிதரும் வாழலாம் என நிரூபிக்கும் ஒரு நாயகன் கதை

வெளியீடு:26 மார்ச் 2021

மதிப்பு: 2.5/5அஞ்சனம் -குறும்படம் 


வாழ்வின் பிறப்பானது
அதுவும் மனிதப் பிறப்பானது கடவுள் தந்த நற்கொடை என்பார்கள்
அந்த நற்கொடையின் ஓர் பகுதியாக நற்சுகம் என்பதாகும்
மனிதனையும் படைத்து, மனங்களையும் படைத்து
மரணத்தையும் கொடுக்கும் கடவுள், வாழ்வின் இடையில்
இன்பங்களோடு வருத்தம் துன்பங்களையும் வாழ்வில் அளித்து
மனதை வேதனைக்குள் ஆழ்த்தி நிற்பதோ விந்தையானது.
அந்த விந்தை வாழ்வின் சோகத்தை எடுத்துச்சொல்லும்
இந்தக் குறும்படம் அனைவரும் கண்டுகொள்ள வேண்டிய காணொளி[நன்றி:sts]

2 comments:

  1. ஐயையே ஊமைப்படம் போய் பேசும்படம் வந்து 90 ஆண்டுகளாகிவிட்டன.இன்னும் நாம் அந்தக்காலத்திலேயே நிற்கிறோம்.கூற வந்த விடையம் என்ன?,பாத்திரங்கள் என்ன எனப் புரிந்துகொள்ள பல நிமிடங்கள் சென்றது.இவ்வவசர உலகில் இக்காலத்திற்கு இம்முறை ஒத்து வராது.முயற்சிக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. சந்திரகாசன்Monday, November 24, 2014

    (தேவையான) கருணைக் கொலையை ஆதரித்து வருங்கால வைத்தியர்கள் நடித்துக் காட்டியுள்ளனர். கொஞ்சம் slow என்றாலும், அவகளின் படிப்புப் பளுவினுள்ளும் இப்படி ஒரு முயற்சி பாராட்டப் படவேண்டியதே!

    ReplyDelete