இராவணன் நல்லவனா?..கேள்வி(25--31)

கேள்வி(25):-தேவர்கள் நல்லவர்கள் என்று நீங்கள் ஒத்துக் கொள்வீர்களா?

 

நல்லவர்கள் என  எழுதியவர்களும் ,அதனை நம்பியவர்களும்தான்  தான் அதற்குப்  பொறுப்பாளிகள்.

 

கேள்வி(26):-சீதையை நெருப்பில் தள்ளியது கெளரவமா? என்னங்க? கெளரவத்திற்காக ஒரு புள்ளத்தாச்சியை நெருப்பில் தள்ளியவன் ஆண்மகனா? நண்பரே!!

 

ராமன் கண்ட குற்றத்தை தவிர சீதையில் வேறு எந்த குற்றமும் வால்மீகி இராமாயணத்தில் குறிக்கப்படவில்லை. ஆனால்   ஒரு நாட்டு மக்கள் மத்தியில், யாரோ ஒரே ஒரு குடிகாரன் தண்ணியைப் போட்டுவிட்டு பிசத்தினான் என்பதற்காக, சீதை மேல் கடவுள் ராமன் கொண்ட சந்தேகமா? இல்லை, மக்கள், ராமனை அவதூறு சொல்லுவார்களே! இவ்வளவு பெரிய இழப்புகளுடன் போர் செய்து சீதையை சந்தேகத்துடன் விட்டு விட்டு சென்றால் ராமனின் கௌரவம் என்னாவது.. (என்றும் கூறி சமாளிக்கமுடியாது ,ஏனெனில் ஒரு புள்ளைத்தாய்ச்சியை காட்டுக்குள் விடும்போது மட்டும் அந்தக் கெளரவம் எங்கே போனது?)

 

கேள்வி(27):-கெளரவம் பார்க்கும் இராமன் செருப்பு அமர்ந்த இடத்தில் ஆட்சி செய்யலாமா?

 

அது ராமனின் செருப்பு.. பின்பு செருக்கு.

 

கேள்வி(28):-வாலியை மறைந்து நின்று எந்த ரத்த இழப்பும் இல்லாமல் கொன்ற இராமன், இராவணனையும் அவ்வாறே கொன்றிருக்கலாமே!!!

செல்வரே வாலி, இராவணனைவிட வலிமையானவன் என்று  இராமாயணம் கூறி நிலைமையினை இராமன் பக்கம் நியாயப்படுத்தியிருந்தாலும்  ,அப்படியான வலிமையான வாலியை இராமன் பயன்படுத்தவே எண்ணியிருப்பானே ஒழிய அழித்திருக்க மாட்டான்.வீர பரம்பரையில் வந்தவர்கள் இச்செயலை கோழைத்தனம் என்றும் கூறுவர்.நான் சொல்லவில்லை. 

 

கேள்வி(29):-சூர்பனகை என்ன தவறு செய்தாள்? இராமனைக் காதலித்தது ஒரு தவறா? ஓர் அரக்கி ஷத்திரியனைக் காதலிக்கக் கூடாதா? அல்லது இராம இலக்குவ, சீதைக்கு ஏதும் பிரச்சனை செய்தாளா? அப்படியென்றால் ஏன் பீமன் ஓர் அரக்கியைக் கலியாணம் செய்யவேண்டும் ( இடும்பி என்று நினைக்கிறேன் )?

 

ராமன் அதைத் தவறென்று சொல்லவில்லை. நானும் சொல்லவில்லை. ராவணனும் சொல்லவில்லை..

சூர்பனைகையை இராமன் சமாதனம் செய்து அனுப்பியிருக்கலாமே! மூக்கை அறுப்பது கோழச் செயல்.. அதை விடுத்து, நீ அரக்கி, நான் அரசகுமாரன் என்று வீர வசனம் பேசி சாதியை வளர்க்கலாமா? மேலும் இராமன் ஜாதி வெறி பிடித்தவன் என்பதனை இராமாயணக் கதைகளே சான்று

 

கேள்வி(30):-ராமன் பத்தில் ஒரு அவதாரமென்று வால்மீகி, கம்பர், துளசிதாசர் ஆகிய யாவரு, சொல்லுகிறார்களே!! அது பொய்யா? அவதாரமெடுத்தால் தான் கடவுள் என்று மறந்து மனிதனாக மாறிவிடுவானோ? கிருஷ்ணன் விசயத்தில் இது பொருந்தவில்லை

 

பத்தில் ஒன்று என்று வால்மீகி சொல்லவில்லை.. கிரூஷ்ணனைப் பற்றி வால்மீகி சொல்லவில்லை.. காமெடியாய் பார்த்தால் பரிணாம வளர்ச்சியின் படி கிருஷ்ணன் ராமனை விட பல காலம் பிந்திப்பிறந்தவன். அறிவு வளர்ச்சி அதிகமாய்த்தானே இருக்கும்.

 

கேள்வி(31):-கொடூரனைப் படைத்து மக்களைத் துன்புறுத்தி கொடூரனை அழித்து மக்களைக் காப்பாற்றி நான் கடவுள் என்று சொல்லிக்கொள்ள கடவுள் என்ன சாடிஸ்ட்டா?

 

எவ்விதத்தில் ஓட்டை? கடவுளுக்கு இப்படிச் செய்வதால்தான் மனிதர்கள் மத்தியில் புகழா? கடவுள் தீயவர்களை அழித்தார் என்பது கதைக்கு மட்டுமே பொருத்தமான வாதம் அல்ல. நல்லவர்களையும் கடவுள்தான் படைக்கிறார். கெட்டவர்களையும் கடவுள்தான் படைக்கிறார். தான் படைத்த படைப்பை தான் படைத்த படைப்பால் துன்புறுத்தி தான் படைத்த படைப்பை தானே அழித்து தான் படைத்தவர்களிடம் நான் நல்லவன் என்று நிரூபிக்க அவருக்கு அவசியம் என்ன? கடவுளை அறிந்தோர் யாருளர்.

 

பிறகு ஏன் ஒவ்வொருமுறையும் ஒரு அரக்கனோ அசுரனோ தலையெடுக்கும்போது விஷ்ணுவையோ சிவனையோ நாடுகிறார்கள்... நாட்டில் வீரமான அரசர்களே இல்லையா?

அரசர்கள் ராவணனைப் பற்றிக் கவலைப்பட்டதாக தெரியவில்லை.

 

காப்பாற்றினால்தானே கடவுள்,,, அவர் சாடிஸ்ட் என்று நீங்கள் சொல்வது பொருந்தாது... ( நான் ஆன்மீகவாதியல்ல.. முழுவதுமாய் கடவுள் இருக்கு என்று சொல்ல... அதேசமயம் ஒரு கடவுள் என்ற உணர்வு கண்டிப்பாக இருக்கு என்று சொல்லுவேன் )

 

கடவுள் தீயவர்களை அழித்தார் என்பது இவர்கள் கதைக்கு மட்டுமே பொருத்தமான வாதம் .

 

நல்லவர்களையும் கடவுள்தான் படைக்கிறார். கெட்டவர்களையும் கடவுள்தான் படைக்கிறார்.

 

தான் படைத்த படைப்பை தான் படைத்த படைப்பால் துன்புறுத்தி

தான் படைத்த படைப்பை தானே அழித்து

தான் படைத்தவர்களிடம் நான் நல்லவன் என்று நிரூபிக்க அவருக்கு அவசியம் என்ன?

 

கடவுளை அறிந்தோர் யாருளர்.

இது கடவுளைப் பற்றிய மக்களின் எண்ணமே தவிர கடவுளின் உண்மையான உண்மை இல்லை...

 

துன்பப் படுவோர் இறைபக்தி உள்ளவரா இல்லாதவரா என்று கடவுள் பார்க்கவேண்டுமா? அப்படி இல்லையே!

 

தன்னைத் துதிப்பவனை மட்டுமே காக்கக் கூடியவர் கடவுள் அல்லவே..

 

இவையெல்லாம் ஆரியர்கள் கடவுளுக்கு  கற்பனை செய்திருக்கும் வடிவமே மட்டுமல்ல,  தாம் செய்த எல்லாவற்றையும் கடவுள் செயலாக மக்கள் முன் விதைத்த சாமர்த்தியம் தந்திரமானது. கடவுளின் பண்பு நமக்கு விளங்காத விஷயமென்று எண்ணுகிறேன்.. கடவுளை விட்டு கதாபாத்திரங்களை மட்டும் அலசுவோம்

தொடரும்...........-தாமரை செல்வன்

0 comments:

Post a Comment