வர்ணத்திரைக்காக இவ்வாரம் ...

 


பூமிகா’

ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘பூமிகா’. இதில் அவர் மனநோய் மருத்துவராக நடித்து இருக்கிறார். ‘இது வேதாளம் சொல்லும் கதை’ படத்தை இயக்கிய ரதீந்திரன் ஆர்.பிரசாத் இப்படத்தை இயக்கி உள்ளார். ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் சார்பில் கார்த்திக் சுப்புராஜ், சுதன் ஆகிய இருவரும் தயாரிக்கிறார்கள். சசாரா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு பிரித்வி சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.

 

சூர்ப்பனகை’

ரெஜினா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘சூர்ப்பனகை’. கார்த்திக் ராஜு இயக்கி இருக்கும் இந்த படத்தில் மன்சூர் அலிகான், கிஷோர், அக்‌ஷரா கவுடா, ஜெய பிரகாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சரித்திர காலத்து கதையம்சத்தில் திகில் படமாக தயாராகி உள்ளது. தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் இப்படம் தயாராகி உள்ளது. நடிகை ரெஜினா இப்படத்தில் தொல் பொருள் ஆய்வாளராக நடித்துள்ளார்.

 

'யூகி'

அறிமுக இயக்குனர் ஜாக் ஹாரிஸ் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் 'யூகி'. இப்படத்தில் கதிர், நரேன், நட்டி, பவித்ரா லட்சுமி, கயல் ஆனந்தி மற்றும் ஆத்மியா ராஜன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். தென்னிந்திய நடசத்திர நடிகர்களான, பிரதாப் போத்தன், ஜான் விஜய், முனீஷ் காந்த், சினில் சைனுதீன், வினோதினி, அஞ்சலி ராவ் மற்றும் பிந்து சஞ்சீவ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

 

 கோப்ரா’

டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற வெற்றி படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து, அடுத்ததாக ’கோப்ரா’  படத்தை இயக்கி வருகிறார். விக்ரம் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்து வருகிறார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், வியாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

இப்படத்தில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் வில்லன் வேடத்தில் நடித்து வருகிறார். ஆக்‌ஷன், திரில்லர் என முற்றிலும் மாறுபட்ட கதை அம்சத்தோடு மிகப் பிரம்மாண்டமாக தயாராகும் இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகி வருகிறது. இப்படத்தில் விக்ரம் பல்வேறு கெட்டப்புகளில் நடித்துள்ளார்.

 

கொற்றவை’

சிவி குமார் இயக்கத்தில் ராஜேஷ் கனகசபை, சந்தனா நடிப்பில் உருவாகி இருக்கும்  படம் ‘கொற்றவை’.இந்த திரைப்படம் பாண்டியர்களின் வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. பிரமாண்ட பொருட்செலவில் மூன்று பாகங்களாக தயாராகி வரும் இப்படம் குறிப்பிட்ட இடைவெளியில் ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகவுள்ளது. ‘கொற்றவை: தி லெகசி’ என்று முதற் பாகம் பெயரிடப்பட்டுள்ளது. புதையல் வேட்டை தொடர்பான கதையாக அமைந்துள்ள கொற்றவையில், 2000 வருடங்களுக்கு முன் மறைக்கப்பட்ட புதையலை கண்டறிய நாயகன் எடுக்கும் சாகச முயற்சிகள் மெய்சிலிர்க்கும் வகையில் படமாக்கப்பட்டுள்ளன.

 

மாயன்’

ராஜேஷ் கண்ணா இயக்கத்தில்  தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய 4 மொழிகளில், ‘மாயன்’ என்ற பிரமாண்டமான திகில் படம் உருவாகி இருக்கிறது. ஆஸ்திரேலிய ஆங்கில படத்திலும், மலேசிய தமிழ் படத்திலும் நடித்த வினோத் கதாநாயகனாக நடிக்க, பிந்து மாதவி, பிரியங்கா மோகன் ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

ஜான் விஜய், தினா, கஞ்சா கருப்பு, ஆடுகளம் நரேன், கே.கே.மேனன் ஆகியோரும் நடித்து இருக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார், ராஜேஷ் கண்ணா.

 

'லாக்டவுன்'

அங்கிதா புரொடக்ஷன் சார்பில் எஸ்.முரளி தயாரிப்பில் இயக்குனர் ஜாலி பாஸ்டியன் இயக்கத்தில் அமித் ஜாலி கதாநாயகனாக அறிமுகமாகும் படம் லாக்டவுன். இப்படத்தில் கதாநாயகியாக கீதா (சஹானா) அறிமுகமாகிறார். மேலும் இப்படத்தில் சுந்தரம் மாஸ்டர், பிரகாஷ் ராஜ், நேஹா சக்சேனா, துளசி, மொட்டை ராஜேந்திரன், இமான் அண்ணாச்சி மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடிக்க உள்ளனர்.

தொகுப்பு:செமனுவேந்தன்

0 comments:

Post a Comment