இவ்வாரம் வர்ணத்திரைக்காக .....

ஷாருக்கான்- நயன்தாரா

இயக்குனர் அட்லீ  பாலிவுட் படம் ஒன்றை இயக்கி வருகிறார். ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.இந்நிலையில், படத்தில்  நடிகர் யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

பிளான் பண்ணி பண்ணனும்’.

பாசிடிவ் பிரிண்ட் ஸ்டுடியோஸ் சார்பில் ராஜேஷ் குமார் மற்றும் எல்.சிந்தன் இருவரும் இணைந்து தயாரித்துள்ள படம் ‘பிளான் பண்ணி பண்ணனும்’. இப்படத்தை ‘பானா காத்தாடி’ புகழ் பத்ரி வெங்கடேஷ் இயக்கி உள்ளார். இப்படத்தில் பிக்பாஸ் பிரபலம் ரியோ நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார். மேலும் பால சரவணன், ரோபோ ஷங்கர், தங்கதுரை ஆகியோர் காமெடி வேடங்களில் நடித்துள்ளனர்.

 

நட்சத்திரம் நகர்கிறது’

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதையடுத்து அவர் ‘நட்சத்திரம் நகர்கிறது’ என்கிற படத்தை இயக்க உள்ளார். இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஹீரோவாக ஜெயராம் மகன் காளிதாஸ் மற்றும் ஹீரோயினியாக சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்திருந்த துஷாரா விஜயன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

பொன்னியின் செல்வன்’

கல்கியின் சரித்திர நாவலான ‘பொன்னியின் செல்வன்’ அதே பெயரில் திரைப்படமாக எடுக்கப்படுகிறது. இந்த படத்தை மணிரத்னம் இயக்குகிறார். இப்படம் 2 பாகங்களாக தயாராகிறது.

இப்படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், ஜெயராம், பிரபு,பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

 

'வலிமை'

அஜித்குமார் நடிக்கும் வலிமை படத்தின் இறுதிகட்ட காட்சிகள் ரஷ்யாவில்  படமாக்கப்படுகிறது. படத்தை வினோத் இயக்குகிறார். நாயகியாக கியூமா குரோஷி நடிக்கிறார். போனிகபூர் தயாரிக்கிறார்.

மேலும் கார்த்திகேய ,அச்யுத் குமார், யோகி பாபு, பாவெல் நவகீதன், மனோபாலா, சிவாஜி குருவாயூர்

சுமித்ரா, புகழ், சங்கீதா நடிகர்கள் தோன்றுகிறார்கள்.

 

பிக்கப்

பவர் ஸ்டார் சீனிவாசன் மிக நீண்ட இடைவெளிக்குப்பின், ஒரு படத்தை இயக்கி நடிக்கிறார். அவருக்கு ஜோடி, வனிதா விஜயகுமார். படத்தின் பெயர், ‘பிக்கப்.’

 

 வீரப்பனின் கஜானா’

காடுகளையும், அதன் அழகையும் எடுத்துக் காட்டும் விதமாக, ‘வீரப்பனின் கஜானா’ என்ற படம் தயாராகி வந்தது. படத்தின் பெயரை மாற்றும்படி சந்தன கடத்தல் மன்னன் வீரப்பனின் குடும்பத்தினர், படக்குழுவினரிடம் கேட்டுக்கொண்டார்கள். அதற்கு படக்குழுவினரும் சம்மதித்து இருக்கிறார்கள்.படத்தில் யோகி பாபு முக்கிய வேடத்தில் நடிக்க, அவருடன் மொட்டை ராஜேந்திரன் இணைந்து நடிக்கிறார். யாசின் டைரக்டு செய் கிறார். பிரபாதீஸ் சாம்ஸ் தயாரிக்கிறார்.

 

ஆல்ஃபா அடிமை

நடிகர்கள்: ஈஸ்வர், கல்கி, வினோத் வர்மா, அருண் நாகராஜ், ஜினோவி; ஒளிப்பதிவு: மணிகண்டன் மூர்த்தி; இசை: சத்யா & ஜென்; இயக்கம்: ஜினோவி. பிரம்மாண்டமான திரைப்படங்களுக்கு மத்தியில் வெளியாகும் சில சிறிய பட்ஜெட் படங்கள் தங்கள் திரைக்கதையின் வலிமையால் ரசிகர்களை கவர்ந்துவிடும். அப்படி ஒரு திரைப்படம்தான் இந்த ஆல்ஃபா அடிமை.

 

 ''தத்வமசி''

அத்வைதம் என்ற ஹிந்தி நூலின் ''தத்வமசி''என்ற வாக்கியத்தின் பெயரில் தமிழ் ,தெலுங்கு,ஹிந்தி மொழிகளில் தயாராகும் திரைப்படத்தில், நடிகர்களாக இஷான் , வரலட்சுசுமி சரத்குமார், பிரகாஷ்ராஜ் ,ஹரிஷ் உத்தமன் முதலானோர் தோன்ற ரமணா இயக்குனராக அறிமுகமாகிறார்.

தொகுப்பு:செ.மனுவேந்தன் – Tamil Cinema news  

0 comments:

Post a Comment