மாரித் தவளைகள் [குட்டிக்கதை:ஆக்கம்-அகிலன் தமிழன் ]

                                                                                                                                                      
www.theebam.com
அன்று நடு இரவுப்பொழுது . வழமை போல  ரவியும்  மெய் மறந்து தூங்கி கொண்டு இருந்தான்  . அப்பொழுது  கைபேசிக்கு ஒரு அழைப்பு  மணி ஒலிக்க இந்த நேரம் யாராக இருக்கும் என்று படபடப்புடன் ஹலோ என்றான்.  எதிர் முனையில் இருந்து நலிந்த குரலில்  சிவாவின் உறவினர் ஒருவன் சிவாவுக்கு கடுமையாம்,  வைத்தியசாலைக்கு கொண்டு போய் இருக்கிறார்கள்   என்று சொல்லி விட்டு தொலைபேசிய துண்டித்து கொண்டான். இந்த செய்திய கேட்ட  . ரவியால் நித்திரைகொள்ள முடியவில்லை.கண்களை மூடி மூடிபடுத்துப் பார்த்தான்.(ரவி ) எவ்வளவுதான் முயன்றாலும் சிவாவிற்கு என்ன நடந்திருக்கும் என்ற யோசனைகளுடன் கடிகாரத்தை  பார்ப்பதும் புரண்டு படுப்பதுமாக மன குழப்பத்தோடு  இருந்த ரவி, ஒரு முடிவிற்கு வந்தவனாக உடைகளை மாற்றி  வைத்தியசாலைக்கு விரைவாகச் சென்று அடைந்து இருந்தான்.
கனடா டொராண்டோ அமைந்து உள்ள வைத்தியசாலையின் அவசர பிரிவு அன்றும் வழமை போல விறுவிறுப்பாக இயங்கி கொண்டு இருந்தது இரவு சில நிமிடங்களில் சிவாவின் ஆன்மா உடலை விட்டு பிரிக்க போகிறது  என்று டாக்டர் கூறியதாக செய்தி அறிந்து உறவினர்களும் நண்பர்களும் ஒன்று கூடி இருந்தனர் அதில் சிலர் தன்னில் அமைதி இழந்து அங்கலாய்த்தும் கொண்டு இருந்தனர் ஒருசிலருக்குஅழுகையும் வரதொடங்கியது மறுபக்கம் பெரியோர்களின் அனுதாபஅலைகள் வீசி கொண்டு இருக்க சிவாவின் நினைவால் ஆழ்ந்த சிந்தனையில் முழ்கி இருந்த அவனின் பாடசாலை இருந்து நெருங்கிய பழகிய தோழன் ரவிக்கு சிவாவின் பிரிவு செய்தி இடி விழுந்தது போல இருந்தது. அதனால் தன் நிலை மாறினான், எனினும் சுதாகரித்து கொண்ட அவனுக்கு சிவாவின் வாழ்கை பற்றிய சம்பவங்கள் கண்ணில் நிழலாக ஓட ஆரம்பித்தன.
 30 வருடங்களுக்கு முன்பு யாழ்ப்பாணத்தில் இடம் பெற்ற சண்டைக்கு பயந்து மனைவி பிள்ளைகளையும் பிரிந்து தனது வீட்டை ஈடு வைத்து அந்த பணம் மூலம் கனடா வந்தவனில் இவனும் ஒருவன். தன் மனைவி பிள்ளைகளையும் கனடா வரவழைக்க வேண்டும் வட்டி கட்டி வீட்டை மீட்டுவிட வேண்டும் என்ற சிந்தனையும் தலை தூக்க தன் அறிவு திறன் கனவுகளை புதைத்து விட்டு அவனும் கடிமையாக உழைக்க தொடங்கினான். உழைத்த பயன் அவன் குடும்பமும் வந்து சேர்ந்தனர். கனடாவுக்கு சில வருடங்கள் சந்தோசமாக போய்கொண்டு இருந்த சிவாவின் வாழ்வில் விதி விளையாட தொடங்கியது. என்னவோ மனைவிக்கு வீடு வாங்கவேண்டும் என்ற ஆசை வர எவ்வித யோசனையும் இன்றி
 ''என்னப்பா நீங்களும் ஒரு வேலை செய்து விட்டு சும்மா தானே வீட்டில் இருக்கிறிங்கள். உங்களுக்கு பிறகு வந்த மூர்த்தியை பாருங்கோ. அவன் வீடும் வாங்கி என்ன வசதியாக வாழ்கிறான். நீங்களும் இன்னும் ஒரு வேலை போனால் என்ன?'' என்று அவளின்  நச்சுஅரிப்புகள் அதிகமாக கொண்டு போக மனைவியோடு முரண்பட்டு குடும்பத்தில் குழப்பத்தை உருவாக்க விருப்பம் இன்மையோ என்னவோ தனக்கு வந்து போகும் முதுகு வலியையும் பொருட்படுத்தாது, வேறு வழி இன்றி மீண்டும் இரண்டு வேலை செய்ய தொடங்கினான். இதனால் காசும் வந்து சேர கடனுக்கு வீட்டையும் வாங்கி குடி புகுந்தான் இந்த சந்தோசமும் அவனுக்கு நெடுநாள் நிலைத்து நிக்க வில்லை. வாழ்கை செலவு அதிகமாக பிள்ளைகளின் கல்வி செலவு சுமையும் அதிகரிக்க இன்னொரு வேலை செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளபட்டான். இதனால் பாவபட்ட மனிதனுக்கு வேண்டின வீட்டில குந்தி இருக்கவோ சாப்பிடவோ  நேரம் கிடைபதில்லை. அவ்வப்போது தொலைபேசியில் சுகம் கேட்பதும் எவ்வளவு வலி இருந்தாலும் மனதில் அதை காட்டாது நானும் நல்ல இருக்குறேன் நீ எப்படி இருக் கிறாய் என்ற சம்பாசனைகளுடன் குறிகிய வட்டத்தில் தன் வாழ்கையை சுருக்கி கொண்டு உறைபனிகாலத்தில்லும் குளிரை பொருப்படுத்தாது ஓய்வின்று ஓடி உழைத்து பிள்ளைகளையும் கல்வி செலவுக்கு உதவி செய்தான். இதனால் பிள்ளைகளின் படிப்பை தடை இன்றி நிறைவு செய்தான். பிள்ளைகளும் பிள்ளைகளும் படிப்பு முடித்து விட்டார்கள் இனி நான் ஓய்வு எடுத்து கொள்ளாலாம் என்று எண்ணிய  மனிதனுக்கு உடன்பின் எலும்புகள் தேய்ந்ததால் இலகுவாக நோய்அரக்கனும் பிடித்துகொண்டான். அதன் பிறகு அவன் வாழ்கையும் மருந்தும் வைத்தியசாலையுமாக தினம்தினம் கழிந்து கொண்டு இருந்தான். அவ்வப்போது தனது பிள்ளைகளை உதவி கேட்பதும் அவர்கள் வெறுத்து கொண்டு (iambusy)அம்மாவை கேளுங்கள் என்பதும், திருப்பி திருப்பி கேடால் இழிவான வார்த்தைகள் சொல்வதும் வாடிக்கையாக போய்கொண்டு இருந்தது. இப்படியான ஒரு நிலைமை தனக்கு வரும் என்று அவனும் சிறிதும் எதிர்பார்கவில்லை. உழைக்கும் போது தங்களின் உதவிக்கு அப்பா அப்பா என்று என்னை வட்டம் விட்டு வந்த பிள்ளைகள்,இன்று  பட்ட மரமாகி இயலாமையாக போனதால் மனதை நோகடித்து வெறுப்பது ஏன் என்ற வினாவும்? அடிக்கடி அவன்மனதில் தோன்றி மறையும். பாசம் ஊட்ட வேண்டிய வயதில் பாசத்தை காட்டாது பணத்தை தேட முப்பட்டதால் பாசம் தெரியாமல் போய்என் பிள்ளைகளுக்கு என்மேல்  பிடிப்பு விட்டு போய்விட்டதா?  இது என் தவறா?  அல்லது என் காலத்தின் விதியா? என்று கண்களில் இருந்து கண்ணீர் கசிய அவ்வபோது மனம் நொந்து கொள்வான். இப்படி வேலை வேலை என்று ஓடின மனிதன் நோயால் இன்று பிரியப்   போகுறான் என்ற செய்தி மனதுக்கு மிகவும் கசப்பாய் இருந்தாலும் மாரி  கால தவளைகள் கத்தி கத்தி சாவது தான் தலைவிதி போல இப்படி தான் இப்பவும் மனைவிமார்களின் ஆசைகளை நிறைவேற்ற  கணவன்மார் பலர் வேலை வேலை என்று சுத்திச் சுத்தி அலைந்து வாழ்க்கையின்  எவ்வித சுகமும் அனுபவிக்கமால் இறந்துகொண்டு இருக்கிறார்கள்.

 தன்னில் நொந்து கொண்டு கண்ணில் நீர் வர துடைத்து கொண்டு மறு பக்கம் சென்றான் ரவி. அங்கே கேட்ட சத்தம் ( உங்கட அப்பா இன்சூரன்ஸ் செய்து இருப்பரோ அதை பற்றிய விவாதம் போய்கொண்டு இருக்க ) எங்கயோ கேட்ட குரலாய் இருக்குது என்று சத்தம் வந்த திசையை நோக்கினான் ரவி. ரவி பார்ப்பதை அவதானித்த சிவாவின் பிள்ளைகள் கதைய மழுப்பி
 ''டாட் நல்ல மனிதன் நாங்கள் மிஸ் பன்னிவிட்டோம் நல்ல ஹெல்ப்  செய்தவர்''
என்று  எவ்வித கவலைகளும் இன்றி தங்கள் அந்தரங்கா நண்பர்களுடன் அரட்டை அடித்து கொண்டு இருந்தனர். இதை கேட்ட ரவியும் நெஞ்சில் ''ஈரம் இல்லாத இவர்களுக்காகவே இந்த மனிதன் தான் வாழ்கிற வயதில் தான் வாழாமல் வாழ்க்கையை தொலைத்து நோயை வாங்கி உயிரை விட்டான்'', என்ற வேதனை மேலோங்க வலி தாங்க முடியாமல் நடைப்பிணமாக, அவனுக்காக செய்யவேண்டிய இறுதிக்கடமைகளை எண்ணியபடியே  அவ்விடத்தை விட்டு வெளியேறினான் ரவி.
                                                                                                                                       

6 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. மனுவேந்தன்Thursday, February 11, 2016

    நெஞ்சை தொட்ட நிஜமான கதை.இப்படியாக சுத்திச் சுத்தி வேலை செய்து தாம் வாழாது மடிந்து கொண்டிருப்போர் கத்திக் கத்தி தான் வாழாது இறந்துவிடும் மாரித் தவளைகளுக்கு சமம்.

    ReplyDelete
  3. நாடுவிட்டு நாடுவந்து உறவுகளுக்காக உழைத்து ஓடாய் போன இப்படியான ஆண்கள் எங்கள் மத்தியில் ஏராளம்.

    ReplyDelete
  4. உழைத்தவர்களில், கொடுத்தும் அவ் உறவுகளை இழந்து ஏமாந்தவர்கள் பலர்.

    ReplyDelete
  5. உழைத்தவர்களில், கொடுத்தும் அவ் உறவுகளை இழந்து ஏமாந்தவர்கள் பலர்.

    ReplyDelete
  6. நாடுவிட்டு நாடுவந்து உறவுகளுக்காக உழைத்து ஓடாய் போன இப்படியான ஆண்கள் எங்கள் மத்தியில் ஏராளம்.

    ReplyDelete