தமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-07

superstitious beliefs of tamils::Dreams:
[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.Compiled by: Kandiah Thillaivinayagalingam]

கனவுகள்:

கனவு என்பது நமக்கு வரும் நன்மையையும் கேட்டையும் உணர்த்த கடவுள் அனுப்பும் முன்னெச்சரிக்கை யாகவே (Prenomination) நம் மக்கள் நீண்டகாலமாக நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.தமிழில் முதல் காப்பியம் படைத்த இளங்கோவடிகள் இதே நம்பிக்கையில்,சிலப்பதிகாரத்தில் கோவலன் கண்ணகியின் கனவை[5 புகார்க்காண்டம்/9 கனாத்திறம் உரைத்த கதை] விரிவாக தந்திருப்பதுடன்,பாண்டிய அரசன் நெடுஞ் செழியனிடம் அரசி கோப்பெருந்தேவி தான் கண்ட கனவின் சகுனத்தைப் பற்றி கூறும் போது,அது உண்மை ஆவது போல அப்பொழுது அங்கு ஒரு கால் சலங்கையுடன் கண்ணகி முறையிட வந்தாள் என்கிறார்.

நம் நாட்டில் அறிவுக்குக் கொடுக்கும் இடத்தைவிட,உணர்வுக்கே மிகுதியான இடம் தருகின்றனர்.உதாரணமாக குடும்பத்தில் ஒரு பெண் சொல்லுகிறாள்:

"மாமி ! இரவு விடியற்காலம் எனக்குக் கனவு ஒன்று வந்தது.நம் வீடு திடீரெனத் தீப்பிடித்து எரிந்தது!"
இதற்கு மாமி  கூறுகிறாள்:

"அடி,விவரம் கெட்டவளே, சீக்கிரம் உன் மகள் பூப்பு[பெண்மை]அடைந்து அமர்வாள்!அதிலும் நீ விடியற் காலையில் கண்ட கனவு! இன்னும் இரண்டொரு நாளில் நடக்கும்!"

மேலும் ஒரு உதாரணமாக பேரன் தன் பாட்டனிடம் சொல்லுகிறான்:

"தாத்தா எனக்குப் புதையல் கிடைத்தது,நான் பணத்தில் புரள்வதைப் போல் கனவு கண்டேன்;விழித்துப் பார்த்தால் நான் பழைய கிழிந்து போன பாயில்தான் புரண்டு கொண்டிருந்தேன்."

தாத்தா சொல்லுகிறார்:

"உனக்கு நோய் வரும் என தெரிகிறது."

மேலும் சில கனவு பற்றிய நம்பிக்கையை பார்ப்போம்: 

"கனவு (dream) என்பது ஒருவர் தூங்கும் பொழுது அவரது மனத்தில் எழும் மனப் படிமங்கள்,காட்சிகள்,ஓசைகள், உணர்வுகள்,நிகழ்வுகளைக் குறிக்கிறது."கனவு என்பது மனிதனின் தூக்கத்தில் உலாவரும் உள்மன வெளிப்பாடாகும்.

வேடிக்கை என்னவென்றால் கனவில் நல்லது நிகழ்ந்தால் வாழ்க்கையில் அதற்கு நேர்மாறாகத் தீயது நடக்கும் என நம்புகிறார்கள்.ஆகவே கனவில் தீயது நிகழ்ந்தால் வாழ்க்கையில் நல்லது நடக்கும் என நம்புகிறார்கள்.இது கனவு நம்பிக்கைகளுக்கு மட்டுமே உரிய சிறப்புத் தன்மையாகும்.அதாவது மரணம் வருவது போன்று கனவு கண்டால் வீட்டில் நல்லகாரியம் நடக்கும் என்றும் திருமணம் நிகழ்வது போன்று கனவு கண்டால் அவ்வீட்டில் துன்பம் ஏற்படும் என்றும் நம்புகின்றனர்.அதிகாலையில் கனவு கண்டால் பலிக்குமெனவும்,பகலில் கனவு கண்டால் பலிக்காது எனவும் நம்புகின்றனர். 

அகநானூறு 141, நக்கீரர், பாலை திணை – தலைவி தோழியிடம் சொன்னது

"அம்ம வாழி, தோழி ! கைம்மிகக்
கனவும் கங்குல் தோறு இனிய: நனவும்
புனை வினை நல்இல் புள்ளும் பாங்கின!
நெஞ்சும் நனி புகன்று உறையும்; எஞ்சாது"

என் தோழியே உன்னை வாழ்த்துகிறேன்,என் இரவு இனிய கனவுகளுடன் கழிந்தது,எனது பகலும் எமது 
அலங்காரிக்கப்பட்ட வீட்டில் நல்ல சகுனத்துடன் கழிந்தது,எனது நெஞ்சும் மிகவும் மகிழ்ச்சியுள்ளது.என் தலைவன் வருவானா? இப்படி ஒரு சங்க தலைவி கேட்கிறாள் .

ஆனால் உண்மையில் கனவு என்பது நாம் அனுபவிப்பது,உணர்வது,நினைவுகள்,கோட்பாடுகள்,மற்றும் விருப்பங்கள் ஆகும்.கனவில் நடப்பவைகள் அப்போது உண்மையாகவே நிகழ்வதைப் போலத் தோன்றுகின்றன.நமக்கு அல்லது நம்மைச் சுற்றிய நிகழ்வுகளைத் தான் பெரும்பாலும் கனவு காண்கிறோம்.அவை நமது மனதுக்குள் தானாக அரங்கேறும் சின்ன நாடகங்கள் தான்!

இதைத்தான் கிழே குறிப்பிட்ட சங்க கால உரையாடல் ஒன்றும் எடுத்து காட்டுகிறது.

"கேட்டிசின் வாழி தோழி யல்கற்
பொய்வ லாளன் மெய்யுற மரீஇ
வாய்த்தகைப் பொய்க்கனா மருட்ட வேற்றெழுந்
தமளி தைவந் தனனே குவளை
வண்டுபடு மலரிற் சாஅய்த்
தமியேன் மன்ற வளியேன் யானே"
[குறுந்தொகை 30]

தோழி[தலைவியை.பார்த்து ]:
"அவன்தான் உன்னைத் திருமணம் செய்துகொள்ள வருகிறேன் என்று சொல்லிவிட்டுச் சென்றானே. அப்படியிருக்கும்போது நீ பொறுமையாக இல்லாமல் துடிப்பது ஏன்? "

தலைமகள் [தோழியிடம்]:
"தோழி! இதனைக் கேள்.அவன் நாள்தோறும் பொய் சொல்வதில் வல்லவன்.அவன் என் கனவில் வந்தான். என்னை ஆரத் தழுவினான்.மகிழ்ச்சியோடு அவனைத் தழுவினேன்.விழித்துப் பார்த்தபோது நான் படுத்திருந்த மெத்தையைத் தடவிக்கொண்டிருந்தேன்.வண்டு உண்டபின் குவளை மலர் உணர்ச்சி இழந்து/சாய்ந்து ஏக்கத்தோடு கிடப்பது போலத் தனித்தவளாய்க் கிடந்தேன்" என்கிறாள் 

இயற்கையாக மரணமடைந்தவர்கள் கனவில் வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும் என்று கனவுகள் தொடர்பான நூல்களில் கூறப்பட்டுள்ளது.ஆனால் துர்மரணம் அடைந்தவர்கள் கனவில் வந்தால் சில இடர்பாடுகள் ஏற்படும்.உடல் நலம் குறையலாம்.விபத்து,குடும்பத்தில் வாக்குவாதம்,பிரிவு உள்ளிட்டவை ஏற்படக் கூடும்.கனவில் மலத்தைக் கண்டால் பணவரவாம்!மாங்கல்யத்தைக் கண்டால் துன்பம் சூழுமாம்!உடலின் மேல் பாம்பு ஊர்ந்து செல்வது நல்லது.சங்க காலத்தில் வாழ்ந்த வேடுவர்கள் இதனை ஒரு வழக்கமாகவே வைத்திருந்தனர்.எனவே, பாம்பு ஒருவர் மீது ஊர்ந்து செல்வது போல் கனவு கண்டால்,அவருக்கு இருந்த கண்டம் அல்லது கெட்ட நேரம் விலகிச் சென்று விட்டதாகக் கருதலாம்.

எது எப்படியாயினும்,இப்படியும் சில சோதிடர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.பல்லி விழுந்தாலும் அவர்கள் பலன் சொல்வார்கள்!பல்லு விழுந்தாலும் அவர்கள் பலன் சொல்வார்கள்.ஆனால் தங்கள் பலனை மட்டும் எப்பவும் பார்க்க மாட்டார்கள்.அப்படி பார்த்திருந்தால் இப்படி வெற்றிலைப்பாக்குக்கும்,பழந்துணிக்கும்,கால்படி அரிசிக்கும் வாசலில் வந்து நம் தூக்கத்தை கலைக்க மாட்டார்கள்? 

பகுதி/Part 08:" சோதிடம் / Astrology" அடுத்த வாரம் தொடரும் 

4 comments:

  1. மனுவேந்தன்Friday, November 15, 2013

    கண்ட கனவு பலித்திடுமோ எண்டு பட்டினி இருந்தே அதன் பலன் என நம்பப்படுவதைப் பலிக்கச் செய்யும் பலசாலிகளும் எம்மத்தியில் உண்டு.

    ReplyDelete
  2. கந்தையா தில்லைவிநாயகலிங்கம்Monday, November 25, 2013

    சங்கசேனன் என்ற மன்னன், அவர் காணும் கனவுகள் எல்லாம் அப்படியே பலித்து விடும் என்ற மூடநம்பிக்கை கொண்டிருந்தான்.

    மந்திரியும், "அப்படி நினைப்பது சரியல்ல என எவ்வளவு கூறியும்' அவர் அதனை ஏற்கவில்லை.

    ஓரிரவில் அறையில் பாம்பு வந்தது போலவும், காவல் காத்த வீரன் கண்டு கொன்று விட்டது போலவும் கனவுக் கண்டான். கனவை அவன் மந்திரியிடமும் சேனாதிபதியிடமும் கூறி அந்தக் கனவு பலிக்குமே என்று கவலைப்பட்டார்.

    மன்னன்கூறிக் கொண்டிருந்தபோது மல்லப்பன் என்ற காவலாளி கேட்டுக் கொண்டிருந்தான். அவன் மன்னரின் தயவைப் பெற அக்கனவை உபயோகப்படுத்திக் கொள்ள நினைத்தான்.

    இதற்காக ஒரு பாம்பையும் பிடித்து வைத்திருந்தான். அவன் மன்னனின் படுக்கை அறையைக் காவல் புரியச் சென்றபோது அந்தப் பாம்பைப் படுக்கை அறைக்குள் விட்டான்.

    ஒரு பாம்பு தங்கள் படுக்கை அறைக்குள் புகுந்ததைப் பார்த்தேன் எனக் கூறி தான் விட்ட அதை அவன் அடித்துக் கொன்றான். மன்னனும் அவனைப் பாராட்டி முத்து மாலையைப் பரிசாக அளித்தான்.மன்னன் தான் கண்ட கனவு பலித்ததை மந்திரிக்கும், சேனாதிபதிக்கும் விவரமாகக் கூறினான்.

    அவர்கள் இருவருக்கும் மல்லப்பன் செய்த ஏமாற்று வேலை அது என்பது தெரிந்து விட்டது. அதனால் அவர்கள் மன்னனிடம் எதுவும் பேசவில்லை.

    சேனாதிபதி அவனை மிரட்டி, அடிஅடி என அடித்த பிறகே மல்லப்பன் உண்மையைக் கக்கினான்.

    மந்திரியும் இந்த முறை உன்னை விட்டுவிடுகிறேன் எனக் கூறி எச்சரித்து அனுப்பினான்.

    தன்னை அடித்த சேனாதிபதியைப் பழிக்குப் பழி வாங்க தீர்மானித்துக் கொண்டான்.

    ஒரு வாரத்திற்குப் பின் மன்னன் மந்திரியிடமும், சேனாதிபதியிடமும் நான் நேற்று ஒரு கனவு கண்டேன். அதில் யாரோ ஒரு வீரன் என்னைக் குத்தியது போல இருந்தது. அந்த வீரனின் முகம் சரியாகத் தெரியவில்லை. என் கனவுப்படி நடந்து விட்டால் என்ன செய்வது என்றான்.

    மல்லப்பன் மன்னன் கூறியதைக் கேட்டுக் கொண்டிருந்தான். சேனாதிபதியை ஒழிக்க அவன்திட்டம் போட்டான். அன்றிரவு ஒரு மந்திரவாதியை ஊர் மயானத்தில் காளி உபாசனை செய்யச் சொன்னான்.

    மல்லப்பன் மன்னனிடம் போய்,அரசே! தங்களைக் கொல்ல முயல்பவர் யாரென்று தெரிந்து விட்டது. நம் சேனாதிபதிதான் நீங்கள் கனவில் கண்ட வீரன், நான் மயானம் பக்கம் போனேன். அப்போது நம் சேனாதிபதியும், மந்திரவாதியும் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டேன். வந்து பாருங்கள் என்றான்.

    மல்லப்பன் வற்புறுத்தியதன் பேரில் அவனோடு சென்றான். அங்கு மந்திரவாதி காளி பூஜை செய்வதையும், தன்னுடைய பெயரைப் பல தடவைகள் கூறுவதையும் கேட்டான். உடனே அவன் அரண்மனைக்கு வந்து சேனாதிபதியைக் கைது செய்து சிறையில் அடைக்குபடிச் கட்டளை இட்டான்.

    நல்லவேளையாக இந்த மல்லப்பன்தான் சேனாபதியைக் கண்டுப்பிடித்துச் சொன்னான். தக்க சமயத்தில் போய் அவனைக் கையும் மெய்யுமாகப் பிடித்தேன்,'' என்றான்.

    மந்திரி அப்போதும் எதுவும் பேசவில்லை.

    இது மல்லப்பன் சூழ்ச்சி என உணர்ந்த மந்திரி அவனை அழைத்து,மல்லப்பா! ஆரம்பித்து விட்டாயா உன் வேலையை என்று கேட்டான்.

    இதற்குச் சில நாட்களுக்குப் பின் மன்னன் ஒரு கனவு கண்டான். அதில் மல்லப்பன் தன் எதிரியான ஒரு மன்னனோடு சேர்ந்து தன்னைக் கொல்வது போல கண்டான். உடனே மல்லப்பனைக் பிடித்து சிறையில் அடைக்குமாறு கட்டளை இட்டான்.

    மல்லப்பன் மந்திரியைக் கண்டு உங்கள் எச்சரிக்கையைப் பொருட்படுத்தாததால் இப்போது எனக்கே ஆபத்து வந்து விட்டது. என்னைக் காப்பாற்றுங்கள் என்றான்.

    மந்திரியும் காப்பாற்றுகிறேன்.நீ செய்த ஏமாற்று வேலைகளை மன்னனிடம் கூறி ஒப்புக் கொள்ள வேண்டும் என்றான்.

    மல்லப்பனும் அதற்குச் சம்மதித்தான்.

    ஒருநாள் மந்திரிஅரசே! மல்லப்பன் தன் ஊரில் பாம்புக் கடியால் இறந்து விட்டான்' என்றான்.

    மன்னனும் இனி மல்லப்பன் வருவான் என்ற பயம் இல்லை. நிம்மதியாக இருக்கலாம்' என்றான்

    ஒருவாரம் சென்ற பின் மந்திரி மன்னனிடம் மல்லப்பன் இப்போது உங்கள் கனவில் வருகிறானா எனக் கேட்டான். மன்னனும் சிரித்தவாறே இறந்தவன் எப்படி வருவான் எனக் கேட்டான்.

    மந்திரியும் மல்லப்பன் இறக்கவில்லை. உயிருடன்தான் இருக்கிறான். அவனை நான் பிடித்து அடைத்து வைத்திருக்கிறேன். நீங்கள் கனவுப்படி நடக்கும் என நினைத்தது தவறு என்றான்.

    மன்னனும் அப்படியானால் முன் இரண்டு கனவுகளின்படி நடந்ததற்கு என்ன சொல்கிறீர் என்று கேட்டான்.

    மந்திரியும் அது மல்லப்பன் செய்த ஏமாற்று வேலை எனக் கூறி மல்லப்பனை அழைத்து வரச் சொன்னான்.

    மல்லப்பன் மன்னனின் கால்களில் விழுந்து தான் செய்த ஏமாற்று வேலைகளுக்காகத் தன்னை மன்னிக்கும்படி வேண்டினான்.

    மன்னன் அவனை மன்னித்து, சேனாதிபதியை விடுதலை செய்ய உத்தரவிட்டான். அதன் பின் கனவுகள் அப்படியே பலிக்கும் என்ற மூடநம்பிக்கையை மன்னர் விட்டு விட்டார்.

    ReplyDelete
  3. கந்தையா தில்லைவிநாயகலிங்கம்Monday, November 25, 2013

  4. கந்தையா தில்லைவிநாயகலிங்கம்Tuesday, November 26, 2013

    [நன்றி: தினமலர்]

    ReplyDelete