"ஒதுங்கி மூலையில் மலர்ந்த ரோசா"

 

"ஒதுங்கி மூலையில் மலர்ந்த ரோசா

ஒளியில் மிளிர்ந்து அழகை காட்டி  

ஒலி எழுப்பும் வண்டை பார்த்து

ஒய்யாரி கேட்குது நீ யார் ?"

 

"துள்ளி பாயும் காட்டு மான்

துணையுடன் மறைவில் ஒளிந்து இருந்து

துரத்தி வந்த புலியை பார்த்து

துணிந்து கேட்குது நீ யார் ?"

 

"வாமச் சொரூப கோழிக் குஞ்சு

வாட்டம் கொண்டு நிழலில் பதுங்கி

வானத்தில் வட்டமிடும் கழுகை பார்த்து

வாக்குவாதம் செய்யுது நீ யார் ?"

 

"மாணவி ஒருவள் கண்ணீர் வடிய

மாதா வாக்கிய குருவை நொந்து

மாழை மடபெண் வெட்கத்தை விட்டு 

மாசுபடுத்தியவனை கேட்குது நீ யார் ?"


-கந்தையா தில்லைவிநாயகலிங்கம் (வாமச் சொரூப - அழகு மேனி
மாழை மட பெண் - இளமையும், மடமையும் உள்ள பெண்)

0 comments:

Post a Comment