திரை தந்த மறக்க முடியாத பாடல்கள்

 முத்துக்கு முத்தாக Muthukku Muthaga Lyrics in Tamil from Anbu Sagodharargal (1973)


முத்துக்கு முத்தாக
சொத்துக்கு சொத்தாக
அண்ணன் தம்பி பிறந்து வந்தோம்
கண்ணுக்கு கண்ணாக
அன்பாலே இணைந்து வந்தோம்
ஒண்ணுக்குள் ஒண்ணாக (2)

தாயாரும் படித்ததில்லை
தந்தை முகம் பார்த்ததில்லை
தாலாட்டு கேட்டதன்றி
ஓர் பாட்டும் அறிந்ததில்லை (2)

தானாக படித்து வந்தான்
தங்கமென வளர்ந்த தம்பி (2)

தள்ளாத வயதினில் நான்
வாழுகிறேன் அவனை நம்பி

முத்துக்கு முத்தாக
சொத்துக்கு சொத்தாக
அண்ணன் தம்பி பிறந்து வந்தோம்
கண்ணுக்கு கண்ணாக
அன்பாலே இணைந்து வந்தோம்
ஒண்ணுக்குள் ஒண்ணாக

அண்ணன் சொல்லும் வார்த்தை எல்லாம்
வேதமெனும் தம்பியுள்ளம் (2)

அன்னையென வந்த உள்ளம்
தெய்வமெனக் காவல் கொள்ளும் (2)
சின்னத்தம்பி கடைசித்தம்பி
செல்லமாய் வளர்ந்த பிள்ளை (2)

ஒன்றுப்பட்ட இதயத்திலே
ஒரு நாளும் பிரிவு இல்லை

முத்துக்கு முத்தாக
சொத்துக்கு சொத்தாக
அண்ணன் தம்பி பிறந்து வந்தோம்
கண்ணுக்கு கண்ணாக
அன்பாலே இணைந்து வந்தோம்
ஒண்ணுக்குள் ஒண்ணாக

ராஜாக்கள் மாளிகையும்
காணாத இன்பமடா
நாலுகால் மண்டபம்போல்
நாங்கள் கொண்ட சொந்தமடா (2)

ரோஜாவின் இதழ்களைப் போல்
தீராத வாசமடா (2)

நூறாண்டு வாழவைக்கும்
மாறாத பாசமடா

முத்துக்கு முத்தாக
சொத்துக்கு சொத்தாக
அண்ணன் தம்பி பிறந்து வந்தோம்
கண்ணுக்கு கண்ணாக
அன்பாலே இணைந்து வந்தோம்
ஒண்ணுக்குள் ஒண்ணாக

👱👱👱👱👱👱👱👱👱👱👱👱👱

0 comments:

Post a Comment