வர்ணத்திரையில் இவ்வாரம்....அண்ணாத்த விமர்சனம்

 ரஜினிகாந்த், கீர்த்தி சுரேஷ் நயன்தாரா, குஷ்பூ, மீனா, பிரகாஷ்ராஜ் என தமிழ் திரைப்பட முன்னணி நடிகை, நடிகர்கள் பலர் இணைந்து நடித்திருக்கும் குடும்பம் மற்றும் அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் கலாநிதி மாறன் தனது சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் இப்படத்தினை தயாரிக்க, இசையமைப்பாளர் டி. இமான் இசையமைத்துள்ளார்.

பொத்திப் பொத்தி வளர்த்த தங்கை, சந்திக்கும் பிரச்னைகளும் அதற்கு அரிவாள் தூக்கும் அண்ணன் கதை.ரசிகர்களை கட்டிப் போட முயற்சி செய்திருக்கிறார்கள். தேவையற்ற காட்சிகள் படத்திற்கு பலவீனமாக அமைந்திருக்கிறது. மொத்தத்தில் 'அண்ணாத்த' ரசிகர்களுக்கு ஏமாற்றம்.

📽📽📽📽📽📽📽📽📽📽📽

 

எம் ஜி ஆர் மகன் விமர்சனம்

எம் ஜி ஆர் மகன் இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் சசிகுமார், சத்யராஜ், மிருணாளினி ரவி, சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி மொட்டை ராஜேந்திரன் என தமிழ் சினிமா நட்சத்திரங்கள் பலர் இணைந்து நடித்திருக்கும் நகைச்சுவை - அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்தினை 'ஸ்கிரீன் சீன் மீடியா என்டேர்டைன்மெண்ட்' தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க, இசையமைப்பாளர் அந்தோணி தாசன் இசையமைத்துள்ளார்.

வழக்கம்போல் தந்தைக்கும் மகனுக்கு இடையே நடக்கும் பிரச்சனை, வாக்குவாதம், கடைசியில் தந்தைக்காக மகன் போராடுவது என்று பல படங்களில் பார்த்த கதையை கொஞ்சம் கூட மாற்றாமல் இயக்கியிருக்கிறார். தந்தை - மகன் பாச கதையாக இருந்தாலும் திரைக்கதையில் வித்தியாசம் காண்பித்து இருக்கலாம்.அந்தோனி தாசன் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். வினோத் ரத்தினசாமியின் ஒளிப்பதிவை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.

மொத்தத்தில் ‘எம்.ஜி.ஆர்.மகன்’ பழமையானவன்.

📽📽📽📽📽📽📽📽📽📽📽

 

எனிமி விமர்சனம்

எனிமி இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஷால், ஆர்யா, மிருணாளினி ரவி, பிரகாஷ் ராஜ் ,தம்பி ராமையா என தமிழ் சினிமா நட்சத்திரங்கள் பலர் இணைந்து நடித்திருக்கும் அதிரடி - திரில்லர் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் வினோத் குமார் தயாரிக்க, இசையமைப்பாளர் தமன் மற்றும் சாம் சி.எஸ் இணைந்து இசையமைத்துள்ளனர்.

ஆர்யா புத்திசாலி, விஷால் அதிபுத்திசாலி. விஷாலைப் பார்த்து ஆர்யாவுக்குப் பொறாமை. அதனால் பள்ளிப்பருவத்தில் தொடங்கும் போட்டி இளைஞர்களான பின்பும் நீடிப்பதுதான் எனிமி.

தயாரிப்பாளர்- ரசிகர்கள் - தியேட்டர்களை ஏமாற்றியிருக்கிறது எனிமி,

📽📽📽📽📽📽📽📽📽📽📽

 

ஆபரேஷன் ஜூஜூபி விமர்சனம்

ஆபரேஷன் ஜூஜூபி இயக்குனர் அருண்காந்த் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும், இசையமைப்பாளராக பணியாற்றி இயக்கியுள்ள திரைப்படம். இப்படத்தில் தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர் சாம்ஸ், வினோதினி, வையாபுரி, மனோபாலா, சந்தான பாரதி எனப்  பலர் நடித்துள்ளனர்.

'ஆபரேஷன் ஜுஜுபி' என்ற மாயாஜால மாஸ்டர் பிளானைப் பயன்படுத்தி தேசத்தை மகிழ்ச்சியாக வாழும் இடமாக மாற்றும் ஒரு சாமானியனின் கனவான கனவுதான் திரையின் கதை

📽தொகுப்பு:செமனுவேந்தன்

0 comments:

Post a Comment