சிரிக்க சில நிமிடம்

 


01

மகன் : அப்பா விண்ணப்ப படிவத்தில 'தாய் மொழி'  எண்டு கேட்டிருக்கு.எப்பிடியப்பா  எழுதுறது?

தந்தை: ரொம்ப, ரொம்ப நீளம் எண்டு எழுது.

 

02

லீலா: அந்த டாக்டருக்கு சொந்தம் எண்டு சொல்லிக் கொள்ள  யாருமே இல்லையாமே?

மாலா: எப்பிடி இருப்பார்கள்? சொந்தங்கள் எல்லாருக்கும் கொரோனாத் தடுப்பூசி போட்டது இவர்தானே!!

 

03

போலீஸ்:உங்க மனைவியை கடத்தியவர்களிடம் இருந்து போன் வந்ததா? என்ன சொன்னார்கள்?

வந்தவர்: இரவு ஒரு மணிக்குள்ள சொன்ன பணத்தை, சொன்ன இடத்தில கொண்டுவந்து தராட்டில் , என் பொண்டாட்டியை என் வீட்டிலையே கொண்டுவந்து விட்டிடுவோம் என்று மிரட்டுறாங்கள் சேர்.

 

04

செந்தில்: .போலீசுக்காரர்  வீட்டிலதான் கபாலி திருடப் போவான் அண்ணை!!

கவுண்டன்: அட மடையன். மாட்டிக்குவானே!

செந்தில்: அதுதான் இல்லையே!!, அங்கதான் மாட்டிக்கிட்டாலும், மாமூல் தர வந்தான் எண்டு சமாளிச்சுவிடுவானே!!

 

05

டாக்டர் : உங்க மாமி உயிரோட இருக்கிறதே ஆச்சரியமான விஷயம்.

மருமகள் : அதான் இப்ப உங்க கிட்ட வந்துட்டோமே.

 

06

தந்தை: என்னடா மார்க் ஷீட்டல 1 மார்க் வாங்கிட்டு வந்திருக்க?

மகன்: விலை வாசி ஏறிப் போச்சுப்பா... எதையுமே வாங்க முடியல...

 

07

தந்தை: என்ன ராஸ்கல்... பாடத்தைப் படிக்காம சினிமா பாட்ட பாடிக்கிட்டு இருக்க...

மகன்: தமிழ் வாத்தியார் தான்பா பத்துப் பாட்டை மனப்பாடம் பண்ணிட்டு வரச் சொன்னாரு.

 

09

ஆசிரியை: ஏன் சார் அந்தப் பையன அப்படிப் போட்டு அடிக்கிறீங்க?

ஆசிரியர்: பின்ன என்னங்க ... கட்டபொம்மனை எங்கே தூக்கில் போட்டாங்கன்னு கேட்டா... கழுத்தில்தான்னு சொல்றான்.

 

10

நர்ஸ் : டாக்டர் அந்த பேஷண்டோட ரத்த அழுத்தம் குறைந்து கொண்டே போகிறது. என்ன மருந்து கொடுப்பது என்றேத் தெரியவில்லை.

டாக்டர் : மருந்தெல்லாம் ஒண்ணும் வேண்டாம். அவரோட பீஸ் பில்லைக் காட்டுங்கள் போதும்.

 

11

ஆசிரியர்1: ரௌடியோட பையன ஸ்கூல்ல சேர்த்தது தப்பா போச்சு!

ஆசிரியர் 2: ஏன்?

ஆசிரியர்1:தலைய சீவிகிட்டு வாடான்னா யார் தலையன்னு கேக்கறான்.

 

12

அ‌ம்மா : செ‌ல்‌வி மீன் தொட்டிக்கு தண்ணி விடு.

செ‌ல்‌வி : நேத்திக்கு ஊத்துன தண்ணியையே அது இன்னும் குடிக்கல‌ம்மா.

 

13

ஆசிரியர் : உன் பக்கத்தில தூங்கறவனை எழுப்பு

மாணவன் : நீங்க தானே தூங்க வெச்சிங்க. நீங்களே எழுப்புங்க.

 

14

சோமு : அ‌ந்த டா‌க்ட‌ர் ரா‌சியான டா‌க்ட‌ர்னு எ‌ப்படி சொ‌ல்ற?

பாபு : எ‌ங்க தா‌த்தாவை அ‌ந்த டா‌க்ட‌ரிட‌ம் அ‌ட்‌மி‌ட் செ‌ய்த மூ‌ன்று நா‌ளி‌ல் அவரோட சொ‌த்து எ‌ல்லா‌ம் எ‌ங்க அ‌ப்பாவு‌க்கு வ‌ந்து‌வி‌ட்டதே.

 

15

மயூரி: இ‌வ்வளவு பெ‌ரிய க‌ப் வா‌ங்‌கி இரு‌க்‌கியே? எ‌ந்த போ‌ட்டி‌க்காக?

கியூரி: பா‌ட்டு‌ப் போ‌ட்டி‌யில

மயூரி: வெ‌ரி கு‌ட்... ந‌ல்லா பாடு‌வியா?

கியூரி: இ‌ல்ல.... நா‌ன் பாடினத ‌நிறு‌த்த‌த்தா‌ன் இ‌ந்தக்  க‌‌ப்பே‌ கொடு‌த்தா‌ங்க.

 

16

மாணவன்1 : இது ஏதோ கழுதை போட்ட கணக்குப் போல இருக்கு!!

மாணவன்2 :ஏன் அப்படி சொல்ற!

மாணவன்1:நிறைய இடத்தில் ஒதைக்குது.

 

 [tamil- jokes, comedy, sirippu, nakaichchuvai] 

தொகுப்பு:செ.மனுவேந்தன்

0 comments:

Post a Comment