மன நிம்மதிக்கு நாம் பின்பற்ற வேண்டியவை.உளவியல் உண்மைகள்


மகிழ்ச்சியான மனநிலையை உருவாக்குவது கடினமானதல்ல.. ரொம்பச் சுலபமானதுதான். எது தேவை, எது தேவையில்லை எனத் தீர்மானியுங்கள்.

 

நம்மைச் சுற்றி நல்லவர்களும், மோசமானவர்களும் இருப்பார்கள். ஆனால், நண்பரை போல நட்பு போல அக்கறை இருப்பது போல நடிப்பவர்கள்தான் உண்மையில் மிக மோசமானவர்கள். பல உளவியல் உண்மைகள், நம்மையும் நம்மைச் சுற்றி இருப்பவர்களையும் பற்றியும் புரிந்துகொள்ள, தெரிந்துகொள்ளப் பல சூழல்கள் மூலம் அவர்களின் நிஜ பகுதியைக் காட்டும். நாம்தான் அவர்கள் நல்லவர் என நினைத்து தவறான உறவு முறையில் இருப்போம். இப்படியான அன்றாடம் நாம் சந்திக்கும் பல உளவியல் உண்மைகளைத் தெரிந்துகொண்டு, முடிந்தவரை நல்ல சூழலை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். மகிழ்ச்சியான மனநிலையை உருவாக்குவது கடினமானதல்ல.. ரொம்பச் சுலபமானதுதான். எது தேவை, எது தேவையில்லை எனத் தீர்மானியுங்கள்.

 

தரமான அறிவுரை’ தரும்தரும் நபர்

யார் உங்களுக்கு பெஸ்ட்டான அறிவுரைகளைச் சொல்கிறார்களோ, அவர்கள் அந்த விஷயத்தில் ஏற்கெனவே அதிகப் பிரச்சனைகளை அனுபவித்தவர்களாக இருக்கலாம். பெஸ்ட் அட்வைஸ் எங்குக் கிடைக்கிறதோ, அங்கு அனுபவம் அதிகம் இருக்கும். பெஸ்ட் அட்வைஸ் வழங்குபவர்களின், வார்த்தையைப் பிடித்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு ஏதாவது சில சூழ்நிலைகளில் உதவக்கூடும். உங்களின் வாழ்க்கையின் திருப்புமுனையாகக் கூட அது மாறலாம்.

 

சிந்தித்துத் திட்டமிடக்கூடிய மனிதர்

யார் மிகப் புத்திசாலியாக இருக்கிறார்களோ, அவர்கள் அவ்வளவு வேகமாகச் சிந்திக்கவும் செய்வார்கள். அவர்களின் கையெழுத்துக் கொஞ்சம் மோசமாகவே இருக்கும். உங்கள் நட்பு சூழலில் இப்படி எவரேனும் இருந்தால் அவர்களிடம் நல்ல ஐடியாக்களைப் பெற முடியும். வாழ்க்கைக்கோ வேலை தொடர்பானதுக்கோ ஐடியாக்களை அவர்களிடம் இருந்து பெற்றுக் கொள்ளுங்கள்.

 

குணாதிசியம் வெளிப்படும்

ஏதாவது ரெஸ்டாரண்ட் போன்ற உணவகங்களுக்குச் செல்லும் போது, உங்களுடன் வரும் நபரோ அல்லது நீங்களோ, உணவக ஊழியரை எப்படி நடத்துகிறீர்கள் எனக் கவனியுங்கள். அதில் குணாதிசியம் வெளிப்படும். நீங்களோ அல்லது உங்களுடன் வந்திருப்பவரின் குணாதிசியம் தெரியவரும்.

 

விசேஷ நபர்

நாம் குட் மார்னிங், குட் நைட் குறுஞ்செய்தி அனுப்புகிறோம். நாமாக விருப்பப்பட்டுச் சிலருக்கு அனுப்புவோம். அது மூளையில் மகிழ்ச்சிக்கான ஒரு பகுதியை ஆக்டிவேட் செய்கிறது. நீங்கள் குட் மார்னிங், குட் நைட் அனுப்பும் அந்த விசேஷ நபர் யார் எனக் கண்டுபிடியுங்கள்.

 

நல்லவர் பட்டம் தேவையில்லை

நான் நல்லவன் எனக்கு எல்லோருடையும் செட் ஆகும் எனப் பலர் சொல்லி பெருமைப்பட்டுக்கொள்வார்கள். ஆனால், உளவியல் ரீதியாக அவர்கள்தான் முடிவில் தனிமையில் தள்ளப்படுவார்கள். எனவே ஜாக்கிரதை, பிடிக்காதவர்களிடம் இருந்து விலகி செல்லுங்கள். தவறில்லை உங்களுக்கு ஸ்ட்ரெஸ் கொடுப்பவர்களிடம் இருந்து, தள்ளி இருங்கள். இது உங்கள் மனநிலைக்கும் வாழ்க்கை நலத்துக்கும் நல்லது. என்ன தான் ஒரு நபரை விரும்பி இருந்தாலோ, நட்பாக இருந்தாலோ அவர்களால் உங்களுக்கு ஸ்ட்ரெஸ் வருகிறது என்றால் ஒதுக்கி வைப்பதே உங்களுக்கு நீங்கள் தரும் முதல் மனநல சிகிச்சை.

 

தூக்கம் போதும் மகிழ்ச்சியானவரை கண்டுபிடிக்க

நம்முடைய மகிழ்ச்சிக்கும் தூக்கத்துக்கும் கடல் அளவு தொடர்பு உண்டு. நாம் மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்றால், நமக்குக் குறைவான தூக்கமே போதுமானது. உடலே அந்தத் தூக்கத்தைத் தீர்மானிக்கும். அலாரம் அல்ல துக்கம், கவலை, ஸ்ட்ரெஸ் இருப்பவர்களுக்கு, சற்று அதிகத் தூக்கம் தேவைப்படலாம். உங்கள் உடல் அதைத் தீர்மானிக்கட்டும். நீங்கள் அனுமதித்தால் மட்டும் போதும்.

 

 

கவலையைக் குறைக்கும் நபர்

நீங்கள் நேசிப்பவரின் கையைப் பிடிக்கும்போது, உங்களது வலிகள் குறையும். வலி குறைந்ததாகவே உணர்வீர்கள். மேலும், கவலையும் குறையும்.

 

புத்திசாலிகளின் தந்திரம்

எனக்கு நட்பு வட்டாரம் அதிகம் என நிறையப் பெருமை பேசுபவர்களைக் கவனித்துத் தேவையில்லாத நட்பை அமைத்துக் கொள்ளாதீர்கள். புத்திசாலிகளுக்கு நண்பர்கள் குறைவாக இருப்பார்கள். சராசரி மனிதனைவிடப் புத்திசாலியான நபர், மிகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவராக மாறி விடுவர். நல்ல நட்பு ஒன்றோ இரண்டோ இருந்தால்கூடப் போதும். அதிக அளவில் இருக்க வேண்டிய அவசியமில்லை.

 

சிறந்த நண்பர்

உங்களின் சிறந்த நண்பரை திருமணம் செய்துகொள்வது 70% விவாகரத்து வாய்ப்பினை தவிர்க்கிறது. விவாகரத்துப் பிரச்சனை பெரும்பாலும் இருக்காது. நண்பரை திருமணம் செய்துகொண்டால், அந்தத் திருமணம் வாழ்நாள் முழுக்க நீடிக்கும் வாய்ப்புகள் அதிகம்.

 

சிகரெட்டும் தனிமையும்

நீண்ட நேரம் தனியாக இருப்பது என்பது ஆரோக்கியமற்றது. உங்கள் மனநிலையை மோசமாக்கும். ஒரு நாளைக்கு 15 சிகரெட்டுகள் பிடிப்பதற்கான விளைவை ஏற்படுத்துகிறது. குடும்பம், குழந்தைகள், பிடித்தவர்கள், நட்பு, செல்ல பிராணிகள் என யாராவது உடன் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.

 

பயணம்

நீங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு பயணம் மேற்கொள்கிறீர்களோ, அது உங்களின் மூளையை ஆரோக்கியப்படுத்தும். மனநிலையை மேம்படுத்தும். அடிக்கடி பயணம் மேற்கொள்ளும் நபருக்கு, மாரடைப்பு, மனச்சோர்வு போன்ற ஆபத்துகள் வருவது குறைகிறது.

 

 கவரக்கூடிய நபர்

யார் ஒருவர் தனக்குப் பிடித்தமான, விருப்பமான விஷயங்களைப் பற்றிப் பேசுகிறார்களோ, அவர்களைக் கவனித்துப் பார்த்தால் அவர்கள் பேசும்போது மிகக் கவர்ச்சிகரமாகத் தெரிவார்கள். அவர்களிடம் ஒரு ஈர்ப்பு சக்தி தென்படும். உங்களுக்கு மகிழ்ச்சி தரும் பிடித்தமான விஷயங்களைப் பற்றி அதிகம் பேசுங்கள்.

 

கால்கள் சொல்லும்

இரண்டு நபர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பேசும்போது ஒருவரின் கால், சற்று விலகி திரும்பி காணப்பட்டால் அவர்களுக்கு அந்தக் கருத்தில் வேறுபாடு உள்ளது என்பதற்கான வலுவான அடையாளம் அது. மேலும், மீண்டும் மீண்டும் அந்தக் கால்கள் விலகினால், அவர்கள் இந்தப் பேச்சில் இருந்து வெளியேற விரும்புகிறார்கள் என அர்த்தம்.

 

பொய்யா, உண்மையா கண்டுபிடிப்பது எப்படி?

ஒரு பொய்யை சொல்லும்போது மக்கள் இயல்பைவிடக் குறைவாகவே கண் சிமிட்டுவார்கள். அவர்கள் பொய் சொன்ன பிறகு, வழக்கத்தைவிட எட்டு மடங்கு கண்களை வேகமாகச் சிமிட்டுவார்கள். இதை வைத்து அவர்கள் சொன்னது பொய்யா, உண்மையா எனக் கண்டுபிடித்து விடலாம்.

 

:மினு ப்ரீத்தி

 

0 comments:

Post a Comment