பிராய்லர் கோழியை எப்படி வளர்க்கிறார்கள்?

 அது உடலுக்கு நல்லதா, கெட்டதா?


இந்தியாவின் பெரும்பகுதி மக்கள் கோழி இறைச்சியை தங்களது முக்கிய உணவாக சேர்த்துகொள்கின்றனர். ஆனால் அவர்கள் உண்ணும் கோழி உண்மையில் எந்த வேதிப்பொருளும் கலக்காத , நச்சுத்தன்மை இல்லாத ஒன்று என எப்படி கண்டுபிடிப்பது?

 

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிக பிராய்லர் கோழிகள் உற்பத்தி செய்யப்படுவதாக மத்திய அரசின் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகத்தின் 2019ஆம் ஆண்டு தரவுகள் கூறுகிறது.

 

இந்திய கோழிவளர்ப்புத் துறையின் மதிப்பு 204900 கோடி என்று கோழி விவசாயிகள் ஒழுங்குமுறைக் குழுவின் (PFRC) இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

ஜெர்மனியை சேர்ந்த தரவுகளை கையாளும் ‘Statista’ நிறுவனத்தின் தரவுகளின்படி 2023இல் இந்தியாவில் மட்டும் 4,407.24 மெட்ரிக் டன் பிராய்லர் இறைச்சி உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

 

இருப்பினும், பல ஆண்டுகளாகவே தமிழகத்தில் இந்த பிராய்லர் கோழி குறித்து பல்வேறு வதந்திகள் உலா வருகிறது. பிராய்லர் கோழிகளுக்கு தவறான ஊசிகள், மருந்துகள் கொடுக்கப்படுகின்றன, அவற்றால் பல்வேறு உடல்நலக் கோளாறுகள் ஏற்படுகின்றன உள்ளிட்டவை அந்த வதந்திகளில் அடங்கும்

மேலும் அறிய கீழ் உள்ள காணொளியில் பாருங்கள்.


நன்றி ;பிபிசி தமிழ் 

0 comments:

Post a Comment