சிரிக்க .... சில நிமிடம்

நகைச்சுவை=ஜோக்ஸ்


கணவனும், மனைவியும் நடந்து போய்க் கொண்டுள்ளனர். சாலையில் ஒரு குரங்கு  வீதிக்குக் குறுக்கே ஓடுகிறது.

மனைவிஎன்னங்க, உங்க உறவுக்காரர் இப்படி பொறுப்பில்லாமல் ரோட்டை கிராஸ் செய்கிறார் பாருங்கயாருங்க இது?.

கணவன் (கடுப்பை அடக்கியபடி)- என் மாமனார்தானே போகிறார். உனக்கு அவரைத் தெரியாதாக்கும்….!!!!!

😁😁😁😁😁😁

ரமணன் : நான் எதிர்காலத்துல ஒரு டாக்டராகவோ, இல்லே ஒரு பைலட்டாகவோ ஆகலாம்னு இருக்கேன் .. ..

வேலு : எப்படியோ .. .. ஜனங்களை மேல கொண்டுபோகறதுல குறியா இருக்கே, ஹும்

😁😁😁😁😁😁

இண்டர்வியூவில் அதிகாரி : என்னப்பா! நாற்காலியை எடுத்துக்கிட்டுப் போறே?

வேலு : நீங்கதானே சார், டேக் யுவர் சீட்னு சொன்னீங்க!

😁😁😁😁😁😁

[தீபாவளிக்காலம்]

ரமனன் : சார் ,,,, மூணு நாளைக்கு முன்னாடி வீட்டை விட்டுப்போன என் மனைவி இன்னும் வீடு வரலை ..     

போலீஸ் : கவலைப்படாதீங்க ,,,, எல்லா ஜவுளிக் கடையிலயும் தேடிப் பார்க்கச் சொல்றேன்.

😁😁😁😁😁😁

ஆசிரியர் : ஷாஜகான் என்ன கட்டினார்?

மாணவன் : லுங்கி கட்டினார்.

ஆசிரியர் : !!

😁😁😁😁😁😁

ஒருவர் : உங்களுக்குத் தேவை இல்லாதது ஏதாவது இருந்தால் போடுங்கள். காசு கொடுக்கிறேன்.

மற்றொருவர் : ஒரு நிமிஷம் இரு. என் மனைவியைக் கூப்பிடுகிறேன்.

😁😁😁😁😁😁

கோபு : உங்க பையன் கோவிலுக்குப் போனா அதிகமா பொய் பேசறானே, ஏன்?

பாபு : கோவிலுக்குள்ளே போனதும் அவன் மெய் மறந்துடுவான்.

😁😁😁😁😁😁

மனைவி : நமக்கு கல்யாணம் முடிஞ்சு இன்னியோட 10 வருஷம் ஆகுதுங்க

கணவன் : எனக்கு மறந்து போச்சு

மனைவி : இது கூடவா ?

கணவன் : நல்ல விஷயங்கள் மட்டும் தான் எனக்கு நினைவில் இருக்கும்.

😁😁😁😁😁😁

இன்ஸ்பெக்டர் : கொள்ளைக்கும்பல்ல டிரைவரா நடிச்சு தகவல்களை அனுப்பச் சொன்னா என்ன 6 மாசமா ஒரு தகவலும் உங்கிட்டேர்ந்து வரவே இல்ல?

போலிஸ் : இங்க எனக்கு நல்ல சம்பளம் கொடுத்து வீடெல்லாம் குடுத்து பாத்துக்கறாங்க அய்யா.

😁😁😁😁😁😁

பாக்கி : என் மனைவியோடு ஹொட்டலுக்குச் சாப்பிடப் போனது தப்பாய் போச்சு.. .

ரமனன் : என்னாச்சு ?

பாக்கி : காசு கொடுக்காம என்னை மாவாட்டச் சொல்லிட்டு வந்துட்டா

😁😁😁😁😁😁

மனைவி : உங்க அம்மாவுக்கு சப்பாத்தி போட்டா பிடிக்கல, இட்லி தோசை போட்டா பிடிக்கல, உப்புமா போட்டா பிடிக்கல. . .

கணவன் : வேற என்னதான் போட்ட?

மனைவி : பேசாம பட்டிணி போட்டேன்

😁😁😁😁😁😁

மனைவி : வேலைக்காரியை இனிமே வர வேண்டாம்னு சொன்னீங்களாமே,,,,,, அதைச் சொல்ல நீங்க யாரு ?

கணவன் : அப்படினா வேலைக்கு சேர்த்துக்கலாம்ங்கறியா ?

மனைவி : இல்ல ,,, நானே சொல்லிடறேன் இனிமே வராதேன்னு.

😁😁😁😁😁😁

ரமனன் : எங்க வீட்டு நாய் செத்துப்போச்சு . . . என்னால ஜீரணிக்கவே முடியல்ல.

முராரி : அய்யய்ய நீங்க நாயெல்லாம் சாப்பிடுவீங்களா?

😁😁😁😁😁😁

வேலு : கோபம் வந்துட்டா என் மனைவி காளியாயிருவா

பாக்கி : நீ என்னாவே....?

வேலு : காலியாயிருவேன்.

😁😁😁😁😁😁

நிருபர் : உங்க வருங்காலக் கணவர் எப்படி இருக்கணும்னு நினைக்கிறீங்க?

நடிகை : நிகழ்காலக் கணவரை விட நல்லவரா இருக்கணும்னு தான்.

😁😁😁😁😁😁

வேலு : நேத்து பல்லே விலக்கலை .. ..

ரமனன் : ஏன் .. ..

வேலு : என் மனைவி பக்கத்திலே இருந்ததால் வாயே திறக்க முடியலை ..

😁😁😁😁😁😁

""நம்ம தொகுதி எம்.எல்.ஏ. ஒரே கேள்வியிலேயே சட்டமன்றத்தையே திக்குமுக்காட வைச்சுட்டாராம்''


 ""அப்படியா? அப்படி என்ன கேட்டார்?''

 

 ""நான் எந்தத் தொகுதி எம்.எல்.ஏ.ன்னு கேட்டாராம்''

😁😁😁😁😁😁

 வந்தவர்: எதுக்கு என் பையனைக் கண்டிச்சீங்க?

 ஆசிரியர்: வெள்ளையர்களை எதிர்த்து உப்பு சத்தியாக்கிரகம் நடந்ததுன்னு சொன்னால், கல் உப்புக்கா, தூள் உப்புக்கான்னு கேட்கிறானே!

😁😁😁😁😁😁

 ""அவர் போலி டாக்டர்தான்னு எப்பிடிக் கண்டுபிடிச்சே?''

 

 ""கால் பாதத்துல ஆணியிருக்குன்னு அவர்ட்ட போனா... கால் இன்ச் ஆணியா? அரை இன்ச் ஆணியான்னு கேக்கிறார்... அதை வச்சுத்தான்''

😁😁😁😁😁😁

 (டிவி ஷோ ரூம் ஒன்றில்)

 ""இந்த டிவி 8500 ரூபாய். உள்ளூர் வரிகள் தனி''


 ""நான் வெளியூருங்க... வரி போடாம குடுங்க''

😁😁😁😁😁😁

மகன்: அப்பா 5 + 5 எவ்வளவு?

தந்தை:மடையா, அறிவு இல்லே, வெட்கமாக இல்லே உனக்கு, இது கூட தெரியாதா? சரி, சரி அந்த கால்குலேட்டரை எடுத்து வா நான் பார்த்து சொல்றேன்.

தொகுப்பு:செ.மனுவேந்தன்

0 comments:

Post a Comment