"அறிவியல் நோக்கில்....பெளத்தம் ஒரு அலசல் . " :பகுதி:14

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய  இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" [In Tamil & English]

 


[This detailed Tamil article is based on Chapter 2: "Ceylon Chronicles" from the historical book "History of Sri Lanka", written by my late friend Mr. Kandiah Easwaran, a civil engineer. We were classmates at Jaffna Central College and later at the Faculty of Engineering, University of Peradeniya. He had completed seven chapters of the book, aiming for a comprehensive work on the history of Sri Lanka. Unfortunately, he passed away suddenly on 15th June 2024 in Scarborough, Canada, before he could complete and publish the book. However, the English summary included under this Tamil article was written by the late Mr. Kandiah Easwaran himself. He had worked in Sri Lanka as well as in a few foreign countries before retiring several years ago. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, "History of Sri Lanka" என்ற வரலாற்றுப் புத்தகத்தின் இரண்டாவது அத்தியாயமான "Ceylon Chronicles" ஐ அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. இந்த புத்தகத்தை என் பள்ளித் தோழரும், பேராதனைப் பல்கலைக்கழகப் பொறியியல் பீட நண்பருமான, மறைந்த கட்டடப் பொறியியலாளரான திரு கந்தையா ஈஸ்வரன் எழுதியிருந்தார். ஒரு முழுமையான வரலாற்றுப் புத்தகத்தை உருவாக்கும் நோக்கத்தில், அவர் இதுவரை ஏழு அத்தியாயங்களை முடித்திருந்தார். ஆனால் இந்தப் புத்தகத்தை முடித்து, பொது வெளியீட்டுக்காக அச்சிடும் முன்பே, 15 ஜூன் 2024 அன்று கனடா நாட்டின் ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள டொராண்டோவின் ஒரு மாவட்டமான ஸ்கார்பரோவில் திடீரென உயிரிழந்தார். இருப்பினும், இந்த தமிழ் கட்டுரையின் கீழ் உள்ள ஆங்கில சுருக்கம் அவரே எழுதியதாகும். திரு கந்தையா ஈஸ்வரன் இலங்கையிலும், சில வெளிநாடுகளிலும் பணியாற்றி, சில ஆண்டுகளுக்கு முன் ஓய்வுபெற்றிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.]

 

பகுதி: 14 / விஜயனின் பின் ஆட்சி செய்த மன்னர்களும் அது தொடர்பான விபரங்களும் / 'முத்தசிவா அல்லது மூத்தசிவா'

 


மகாவம்ச ஆசிரியர், இலங்கையில் புத்த சமயத்திற்கு ஒரு கவர்ச்சியை கொடுக்க, புத்தர் தனது கொள்கையை பரப்ப, தேர்ந்து எடுத்த மக்களாக சிங்களவரையும், தேர்ந்து எடுத்த நாடாக இலங்கையையும் தனது கதையில் வெளிக் காட்டி, அதற்கு மகுடம் வைத்தாற் போல், விஜயனினதும் அவனது தோழரினதும் வருகையை செயற்கையாக, புத்தரின் மரணத்துடன் ஒத்து போக சரி செய்தது வெளிப்படையாக எந்த நடுநிலையாளருக்கும் தெரிகிறது.[The author of Mahavamsa, artificially fixed the arrival of Vijaya and his compatriots to coincide with the passing away of Buddha in 543 BCE.]. உதாரணமாக, இந்த தந்திரத்தால், விஜயனிற்குப் பிறகு ஆட்சி அமைத்த சில அரசர்களின் ஆட்சி காலத்தை நீடித்தது தெரிய வருகிறது, குறிப்பாக தந்தையும் மகனுமாக '130' ஆண்டுகள் ஆட்சி செய்தனர் என குறிப்பிடுகிறார் ?. மன்னன் பண்டு அபயன் 70 ஆண்டுகளும் அவனுடைய மரணத்துக்குப் பிறகு அவனது மகன் முத்தசிவ அல்லது மூத்தசிவா [Mutasiva] பண்டுகவின் மகன் (மகாவம்சத்தின்படி பண்டுகாபயா) என்பவன் 60 ஆண்டுகள் ஆட்சி செய்தான் என்கிறது. [King Pandukhabaya, nephew of Abhayan was supposed to have ruled from 377 BC – 307 BC that is 70 years. Muttasivan, son of Pandukhabaya ruled for 60 years  from BC 307 to BC 247] , இதில் இன்னும் ஒரு விசேடம் என்னவென்றால், அறிவிற் சிறந்த அரசன் பாண்டு அபயன் முப்பத்து ஏழு வயதில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றான் என்றும் அதன் பின்பு தான் எழுபது வருடகாலம் சீரும், செல்வமும் மிக்க அனுராதபுரத்திலிருந்து அவனுடைய ராஜ்யத்தை ஆண்டு வந்தான் என்கிறது மகாவம்சம். அதாவது அவன் 107 ஆண்டுகள் வாழ்ந்துள்ளான். அதே போல முத்த சிவனும், 37 அகவையில் ஆட்சிக்கு வந்த தந்தையின் 70 ஆண்டு ஆட்சியின் பின் 60 ஆண்டுகள் ஆட்சி செய்தான் என்றால், அவன் ஏறத்தாழ 130 / 140 அகவைக்கு மேல் வாழ்ந்து இருக்க வேண்டும். கௌதம புத்தரே தனது எண்பதாவது அகவையில் இறந்தது குறிப்பிடத் தக்கது. முத்தசிவனின் நீண்ட அறுபது ஆண்டுகால ஆட்சியைப் பற்றி இரண்டு முதன்மை வரலாற்று நூல்களும் பெரிதாக எதுவும் சொல்லவில்லை. பெயர் தமிழில் ஒலிக்கிறது, ஒரு காரணமாக் கூட  இருக்கலாம்? அதேவேளை, முத்தசிவனின் [மூத்தசிவனின்] பிறப்பு பற்றி எந்த செய்தியும் அங்கு இல்லை. ஆனால், பாண்டுஅபயன் [பண்டுகாபய] தனது மனைவி, சுவன்னபலியை [Suvannapali] பதினாருக்கும் பதினெட்டு வயதுக்கும் இடையில் சந்தித்து உள்ளான். ஆகவே மூத்த மகன் அதிகமாக இருபதுக்கும் முப்பதுக்கும் இடையில் பிறந்து இருக்கலாம் என்று நாம் ஊகித்தால், மூத்தசிவன் குறைந்தது அகவை 137 க்கும் 147 க்கும் இடையில் [between 107 - 30 + 60 & 107 - 20 + 60] வாழ்ந்திருப்பான். 

 

எது என்னவென்றாலும்,  முத்தசிவா என்ற பெயர் தமிழில் இருந்தாலும் ஒரு கண்டுப்பிடிக்கப்பட்ட மன்னராகத்தான் அதிகமாகத் இருக்க வேண்டும். முத்தசிவனுக்கு அபயன், தேவநம்பிய தீசன், மகாநாகன், உத்திய, மத்தபய, மித்த, மகாசிவன், அசேலன், சூரதிச்சன் அல்லது திஸ்ஸ, மற்றும் கிரா என பத்து மகன்கள் இருந்தனர். அவருக்கு அனுலா மற்றும் சிவாலி அல்லது சிவால என்ற இரு மகள்களும் இருந்தனர் [Abhaya, Tissa, Naga, Utti, Mattabhaya, Mitta, Siva, Asela, Tissa and Kira. He had two daughters too, Anula and Sivala.].

*அடுத்த பகுதியை வாசிக்க அழுத்துக...

*ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக...

 

Part: 14 / The Kings who ruled after Vijaya and the related affairs / 'Mutasiva'

 


Mutasiva is the son of Panduka (Pandukabhaya as per the Mahavamsa) and he ruled for sixty years. Both the chronicles have nothing much to say about the long sixty year rule of Mutasiva. The name is sounding Tamil, and that might be the reason for the briefness. Pandukabhaya met his wife, Mutasiva’s mother, when he was just past the age of sixteen. If Mutasiva was born when Panduka was thirty years of age, then Mutasiva would have lived to a very old age of one hundred and thirty seven [(107-30)+60, to the age of 137.]

 

Mutasiva must therefore be an invented king even though the name sounds Tamil. Mutasiva had ten sons, Abhaya, Tissa, Naga, Utti, Mattabhaya, Mitta, Siva, Asela, Tissa and Kira. He had two daughters too, Anula and Sivala.

 

 

நன்றி 

Thanks

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]

[Kandiah Thillaivinayagalingam,

Athiady, Jaffna]

பகுதி / Part: 15 தொடரும் / Will Follow

 

நோய் வருவதற்கு முன் நிறுத்திக்கொள்வோம் –

  இன்று தேவையான 10 உடல்நலப் பழக்கங்கள்


இன்றைய வாழ்க்கை வேகம் மனிதரை உடல், மனம் என இரண்டு திசைகளிலும் சோர்வடையச் செய்கிறது. உடற்பயிற்சி குறைவு, தூக்கமின்மை, செயற்கை உணவுகள், மொபைல் அதிகப் பயன்பாடு, வேலைப்பழுத்தம்—இதெல்லாம் படிப்படியாக உடலில் நோய்களின் விதைகளை விதைக்கின்றன. நோய் வந்த பிறகு மருந்து, மருத்துவம் பார்த்து ஓடுவதற்குப் பதிலாக, இன்று நம் வாழ்வில் சில நல்ல பழக்கங்களைப் போட்டு நோயைத் தடுக்கிறோம் என்பதை உணர வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது.

இந்த கட்டுரை, அது நோய் வருவதற்கு முன் எப்படித் தடுக்கலாம் என்ற நோக்கில், அனைவரும் கடைபிடிக்க வேண்டிய 10 முக்கிய உடல்நலப் பழக்கங்களை விரிவாக விளக்குகிறது.


1. தினமும் 30 நிமிடம் உடற்பயிற்சி – உடலின் இயற்கை மருந்தகத்தை இயக்கும் சக்தி

உடற்பயிற்சி என்பது உடலை வடிவமைப்பதற்காக மட்டும் அல்ல; உடலின் உள்ளே இருக்கும் ஒவ்வொரு செலையும் சுறுசுறுப்பாக இயங்கச் செய்யும் உயிர்சக்தி.
நடப்பு, யோகா, ஜாக்கிங், ஓட்டம், மிதிவண்டி, நீச்சல்—ஏதேனும் ஒரு exercise தினமும் 30 நிமிடம் அவசியம்.

இதன் நன்மைகள்:

  • இதயம் வலுப்படும்

  • ரத்த ஓட்டம் சீராகும்

  • நீரிழிவு, உயர்ந்த ரத்த அழுத்தம் தடையும்

  • மூளை சுறுசுறுப்பாகும்

  • மனஅழுத்தம் குறையும்

  • உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்கும்

உடற்பயிற்சி என்பது “இன்று செய் – நாளை பலன்” அல்ல; இன்று செய் – நீண்ட கால நலன் என்ற கோட்பாட்டை பின்பற்றுகிறது.


2. சீரான 7–8 மணி நேர தூக்கம் – உடலின் மறுசீரமைப்பு இயந்திரம்

உடல் முழுவதும் இரவு நேரத்தில் தான் சீரமைப்பு நடைபெறுகிறது.
இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை கிடைக்கும் தூக்கம் உடலுக்கு மிகத் தேவையானது.

தூக்கமின்மை ஏற்படுத்தும் அபாயங்கள்:

  • இதய நோய்

  • அதிக கொழுப்பு

  • மனநிலை பாதிப்பு

  • கவனம் குறைவு

  • நோய் எதிர்ப்பு சக்தி குறைவு

  • சர்க்கரை அதிகரிப்பு

இது எல்லாவற்றையும் தவிர்க்க உதவும் ஒரே வழி—தினமும் சீரான நேரத்தில் தூங்கும் பழக்கம்.


3. 2–3 லிட்டர் தண்ணீர் – உடல் முழுதும் இயக்கும் சக்திக்களஞ்சியம் / ஒரு கிலோ எடைக்கு 30–35 மில்லிலிட்டர் தண்ணீர்.

தண்ணீர் என்பது உடலுக்குத் தேவையான மிக முக்கிய ஊட்டச்சத்து.
உடலில் 70% தண்ணீரே. அது குறைந்துவிட்டால், உடலில் உள்ள ஒவ்வொரு அணுவும் பாதிக்கப்படும்.

தண்ணீர் குடிப்பதன் நன்மைகள்:

  • செரிமானம் சீராகும்

  • தோல் ஒளிவீசும்

  • தலைவலி குறையும்

  • நச்சுக்கள் வெளியேறும்

  • சிறுநீரக செயல்பாடு மேம்படும்

  • உடல் வெப்பநிலை சமநிலையில் இருக்கும்

காலை எழுந்ததும் ஒரு கப் வெந்நீர் குடிப்பது சிறப்பு.


4. இயற்கை உணவு – நோய் உண்டாக்கும் வேதிப்பொருட்களைத் தடுக்கும் பாதுகாப்பு

நாம் சாப்பிடும் உணவே உடலின் எரிபொருள்.
காய்கறி, பழம், பருப்பு, கீரை, தானியம், குறைநிலை எண்ணெய்கள் – இவை அனைத்தையும் அதிகரிக்க வேண்டும்.

ஃபாஸ்ட் ஃபுட், பொட்டல உணவுகள், அதிக காரம், அதிக எண்ணெய்—இவை உடலை உள் நோய்களுக்கு தயாராக்கிவிடும்.

இயற்கை உணவின் நன்மைகள்:

  • குடல் நலம் மேம்படும்

  • நோய் எதிர்ப்பு சக்தி உயரும்

  • உடல் எடை குறையும் / கட்டுப்படும்

  • இதய நோய்கள் குறையும்


5. சர்க்கரை, உப்பு, எண்ணெய் கட்டுப்பாடு – மூன்று அமைதியான கொலைகாரர்கள்

தமிழர்களில் அதிகரித்து வரும் மூன்று நோய்கள்—
சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், இதய நோய்

இதற்குக் காரணம்:

  • ரொட்டி, பிஸ்கெட், இனிப்பு, ஜூஸ்

  • அதிக உப்பு உள்ள உணவு

  • அதிக எண்ணெய் / ஆழ்வெந்த உணவு

அளவுக்குத் தக்க வைத்து, “குறைவான அளவே நல்ல அளவு.”


6. ஸ்கிரீன் டைம் கட்டுப்பாடு – டிஜிட்டல் உலகத்தின் இருள்முனை

மொபைல், லேப்டாப், டிவி—இவை நவீன வாழ்க்கையின் பகுதிகள். ஆனால் அதிக ஸ்கிரீன் டைம்:

  • கண் சோர்வு

  • தலைவலி

  • தூக்கமின்மை

  • மனஅழுத்தம்

  • மூளை over-stimulation

  • குழந்தைகளில் கவனக்குறைவு

ஒரு நாளில் குறைந்தது 1 மணி நேரம் ‘மொபைல்-இல்லாமல்’ இருக்க வேண்டும்.
இது உடலையும் மனதையும் அமைதியாக்கும்.


7. மனஅழுத்த மேலாண்மை – உடல் நலனின் அடித்தளம்

இன்றைய மனிதர் எதிர்கொள்ளும் மிகப்பெரிய ‘நிசப்த நோய்’—மனஅழுத்தம்.
Stress அதிகமானால் உடலின் அனைத்து உறுப்புகளும் பாதிக்கப்படும்.

தீர்வு:

  • 10 நிமிடம் ஆழ்ந்த மூச்சுப்பயிற்சி

  • தியானம்

  • பசுமை நடை

  • இசை

  • ஓரளவு சமூகச் செயல்பாடு

மனஅழுத்தமில்லாத வாழ்க்கை = உடல் நலம் + மன நலம்.


8. வருடத்துக்கு ஒருமுறை முழு உடல்நலம் பரிசோதனை

நம் உடல் சில நேரங்களில் ‘நோயின் சத்தத்தை’ வெளியில் காட்டாமல் இருக்கும்.
அதனால் ஒரு வருடத்திற்கு ஒருமுறை:

  • ரத்தப் பரிசோதனை

  • கல்லீரல், சிறுநீரகம் function test

  • ரத்த அழுத்தம்

  • கொழுப்பு அளவு

  • நீரிழிவு அளவு

இவற்றை சரிபார்ப்பது மிக அவசியம்.
அறிகுறிகள் தெரியும்முன் பிரச்சனையை கண்டுபிடிக்க இது உதவும்.


9. குடும்பத்துடன் நேரம் செலவிடுதல் – உணர்ச்சி நலத்தின் அடித்தளம்

உடல் நலம் மட்டும் போதாது. மனநலமும் equally important.
குடும்பத்துடன் சிரித்துப் பேசுதல், விளையாடுதல், ஒரே மேசையில் உணவருந்துதல்—இவை அனைத்தும் ‘ஹாப்பி ஹார்மோன்’ உருவாக்கும்.

இதனால்:

  • மனஅழுத்தம் குறையும்

  • இதய நலம் மேம்படும்

  • உறவு நலமாக இருக்கும்

  • உடல்நலம் தானாக வலுவாகும்


10. தினமும் 10 நிமிடம் சுய பராமரிப்பு (Self-care)

நாம் நம்மை கவனிக்க மறந்துவிட்டால், வாழ்க்கை நமக்கு கவனிப்பு தராது.
உங்களுக்கு பிடித்த ஒன்றை தினமும் 10 நிமிடம் செய்யுங்கள்:

  • வாசிப்பு

  • இசை

  • தோட்டப்பணிகள்

  • தியானம்

  • ஓவியம்

  • உடலை நிம்மதியாகக் கருதி ஒரு சுவாச நேரம்

சுய பராமரிப்பு = உடல் நலம் + மன நலம் + மகிழ்ச்சி.


நோய் வந்த பிறகு மருந்து தேடுவது அறிவு;
நோய் வராமல் தடுக்க வேண்டும் என்பது புத்திசாலித்தனம்.

இந்த 10 பழக்கங்களை இன்று முதல் நடைமுறையில் கொண்டுவந்தால்,
உங்கள் உடலும் மனமும் நலமாகி, வாழ்க்கை நீண்டகாலத்திற்கு ஆரோக்கியமாகும்.

ஆரோக்கியமான வாழ்க்கை—நம் கை விரல்களில் உள்ளது.
இன்று தொடங்குங்கள்; நலம் உங்கள் பக்கமே வரும்.
:தீபம் உடல் நலம் 

பழகத் தெரிய வேணும் – 94


வாழ்க்கையும் பள்ளிதான்

ஒரு சிறுமி தாயிடம் வம்பு வளர்த்தாள்: “எனக்குப் பிடிக்காததை எல்லாம் உடம்புக்கு நல்லதுங்கிறே!”

 

இருபது வயதானபின்பும், சாப்பிடுவதும், விளையாடுவதும்தான் சிலருக்குப் பிடித்த விஷயங்கள்.

 

அவர்களுடன் இணைந்து விளையாடியவர்களுக்குத் தனியாகக் குடும்பம் அமைந்துவிட்டால், பிறருக்காக நேரம் ஒதுக்குவார்களா என்பதை யோசிப்பதில்லை. தனித்துப்போவார்கள்.

 

சிறு வயதில் நட்பு

குழந்தைகளுக்கு நல்லவர், கெட்டவர் என்ற பாகுபாடு தெரியாது. யாராவது அவர்களைப் பாராட்டினால், அவர்களைப் பிடித்துப்போய்விடும்.

 

பதினெட்டு வயதுவரை, குழந்தைகளைப் பாதுகாக்கக் கூறவேண்டிய அறிவுரை:

 

யாராவது புகழ்ந்தால், அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாதே! `நன்றிஎன்று சொல்லிவிட்டு, போய்க்கொண்டே இரு. தலைக்கனம் வந்தால், வாழ்க்கை சறுக்கிவிடும்.

உன்னைவிட ஓரிரு வயது மூத்தவர்களுடன் மட்டுமே பழகுவது நல்லது. ஏனெனில், உன்னைவிட வயதில் பெரியவர்கள், “நீ எவ்வளவு புத்திசாலி! அழகு!” என்று புகழ்ந்தால், அது அனேகமாக சுயநலத்திற்காக இருக்கும். உன்னைத் தவறான முறையில் நடக்கத் தூண்ட அவர்களுக்குத் தெரிந்த வழி அது.

 

பாடம் படிக்கப் பிடிக்காது!

அநேகமாக, பாலர் பள்ளியிலிருந்து எல்லா மாணவர்களும் சொல்லிவருவதுதான் இது. உரக்கச் சொல்லாவிட்டாலும், கல்லூரி மாணவர்களுக்குக்கூட கல்வி பயில்வதே கசப்பாக இருக்கும். கல்வி பயின்றால்தான் அறிவு வளரும், பிறர் மதிக்க வாழலாம் என்பதைப் பலரும் உணர்வதில்லை.

 

`படிக்காத மேதைஎன்று சிலரைக் குறிப்பிடுகிறோம். அவர்களுடைய அறிவை வாழ்க்கையில் அடைந்த அனுபவங்களிலிருந்து பெற்றிருப்பார்கள்.

 

வேறு சிலர், காலம் கடந்து, தாம் செய்த தவறுகளால் ஓயாது வருந்துவார்கள். அதனால் அவர்களுடைய சுயமதிப்பு குன்றியிருக்கக்கூடும். அதை மறைக்க, பிறருக்கு ஆலோசனை அளிப்பார்கள்.

 

::கதை::

நான்தான் குடித்துக் குடித்து, சீரழிந்துபோய்விட்டேன். நீங்களாவது அந்த விஷத்தைத் தொடாதீர்கள்!” என்று தன் மூன்று மகன்களிடம் முடிந்தபோதெல்லாம் கூறுவார் அந்த தந்தை. கூடியவரை, அவர்களைக் கட்டுப்படுத்தினார்.

 

தந்தையைப் பார்த்துதான் ஆண்குழந்தைகள் கற்றுக்கொள்கிறார்கள் என்பது அவருக்குப் புரியவில்லை. அவருடைய அறிவுரை எந்தப் பலனையும் அளிக்கவில்லை.

 

அத்துடன், கட்டுப்பாடு பொறுக்கமுடியாது போகும்போது, அதை மீறி நடக்கத்தானே தோன்றும்?

 

ஒரு மகனுக்குமட்டும் தான் செய்வது சரியா, தவறா என்ற குழப்பம் எழுந்துகொண்டே இருந்தது.

 

நண்பர்களுடன் பேசிச் சிரித்தபடி ஓய்வு நேரத்தையெல்லாம் கழிப்பது உயர்ந்ததா, அல்லது தன் குடும்பத்தினருடன் சுமுகமாக இருப்பது பயனுள்ளதா என்று யோசித்தான். தான் மூப்படைந்ததும், எந்த நண்பனும் உறுதுணையாக இருக்கமாட்டான் என்று தந்தையின் வாழ்க்கை அளித்த பாடம் புரிந்தது.

 

போதையில், அப்பா அம்மாவை அடிப்பதுபோல் தானும் அருமை மனைவியிடம் நடந்துகொண்டுவிடுவோமோ என்ற பயம்வேறு.

 

மனைவியைக் கொடுமைப்படுத்திவிட்டு, `ஏனோ இப்படிச் செய்கிறேன்! லவ் யூ!’ என்று சொல்வதில் உண்மை இருக்கமுடியுமா? (இந்த பசப்பல் பேச்சை நம்பும் பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்).

 

எல்லாரையும், எப்போதும் மகிழ்ச்சிப்படுத்த முடியாது என்று தெளிவடைந்தான். பிறருடைய ஆமோதிப்புக்காக நடிக்கவேண்டுமா என்று சிந்தித்தபோது, தன்னைக் கட்டுப்படுத்தும் நண்பர்களை விட்டொழித்தால்தான் நிம்மதி கிடைக்கும் என்று தோன்றியது.

 

யோசனை பலத்தது. எந்தப் பயனும் கிடையாது என்று உறுதியாகத் தெரிந்தபின், ஒரு செயலை விட்டுவிடுவதுதானே புத்திசாலித்தனம்! இல்லாவிட்டால், அதையே பலமுறை செய்வோம். நேரம்தான் வீணாகும்.

 

பெருமுயற்சி எடுத்து அப்பழக்கத்தை விட்டொழித்தான்.

 

அதற்குப் பிறகும், உடனே நிம்மதி கிட்டவில்லை.

 

`நீங்கள் செய்வது சரியில்லை!’ என்று இவன் புத்திகூறுவதுபோல் எண்ணி நண்பர்கள் ஆத்திரப்பட்டார்கள். அவர்களின் கேலி, கோபம் இவற்றைச் சமாளிக்க நேர்ந்தது.

 

பொது இடங்களில் அவனைப் பார்க்கும்போது, “நீ குடியை நிறுத்திவிட்டதால், இன்று வழக்கத்தைவிட பாதிதான் வாங்கியிருக்கிறார்கள்!” என்று, கண்டபடி கேலி செய்ய ஆரம்பித்தார்கள்.

 

குடும்பத்தினரின் அன்பால் அவர்களது போக்கை அலட்சியப்படுத்தப்படுத்த முடிந்தது.

 

நாளடைவில், அவர்களிடம் ஆத்திரப்பட்டுப் பயனில்லை, அவர்களை நாடியதில் தன் தவறும் இருக்கிறது என்று ஒத்துக்கொண்டான். ஆனால், அப்போது கற்ற பாடத்தை மறக்கவில்லை.

 

வாழ்க்கையில் மாறுதல்கள் நிகழத்தான் செய்யும், மனிதர்களும் ஒரேமாதிரி இருப்பதில்லை என்று உணர்ந்து அமைதியாக இருப்பவர்களுக்கு எந்த பிரச்னையும் வராது.

 

குற்ற உணர்வு, வஞ்சகம் செய்தவர்களின்மேல் கோபம் போன்ற எதிர்மறைக் குணங்கள் நீடித்தால் யாருக்கு நஷ்டம்? `அப்படிப்பட்டவர்களிடமிருந்து பாடம் கற்றுக்கொண்டோமே!’ என்று திருப்திபட்டுக்கொள்ள வேண்டியதுதான்!

 

நமக்குப் பிடிக்காதவர்கள் மட்டுமில்லை, நம்மைவிடத் தாழ்ந்த நிலையில் இருப்பவர்களையும் மட்டமாக நினைக்காதிருக்க, `நல்லவேளை, நானும் அவர்களைப்போல இல்லையே!’ என்று எண்ண ஆரம்பித்தால், வித்தியாசமாக இருப்பவர்களையும் ஏற்கமுடியும்.

 

நம்மால் இயன்றதை, நமக்குப் பிடித்ததைச் செய்துவந்தால், அமைதி நம்மைவிட்டு விலகாது. நம்மைப்போன்ற பிறர் தாமே நம்மிடம் வருவார்கள். அதைவிட்டு, பிறருடன், துரத்தி அடிக்காத குறையாக, தொடர்புகொள்ளத் துடிப்பது ஏன்?

 

யாருக்கு உதவலாம்?

பிறருக்கு நன்மை செய்தால் புண்ணியம் என்று நம்மை நம்பவைத்திருக்கிறார்கள்.

 

இதிலும் ஒரு சிக்கல். ஒருவருடைய தாராள மனப்பான்மையைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள நிறைய போலி மனிதர்கள் முளைப்பார்கள்.

 

::கதை::

 தினசரிகளில் வெளியான அந்தப் புகைப்படத்தைப் பார்த்தாலே எவர் மனமும் உருகிவிடும்.

 

ஆரோக்கியம் மிகக் குன்றிய நிலையில் ஒரு நாய். அதை அணைத்தபடி ஒருவர். அவரைப்பற்றி அவரே அளித்த தகவல்:

 

நான் ஒரு மிருக வைத்தியன். யாராலும் கவனிக்கப்படாது, தெருக்களில் நடமாடும் நாய்களை எனக்குச் சொந்தமான ஓரிடத்தில் வைத்துப் பராமரிக்க ஆரம்பித்தேன். இப்போது அதைப்போல் மூன்று இடங்கள். என் மனைவியும் எனக்கு ஆதரவாக உதவிபுரிகிறார். இந்த நாய்களுக்கான உணவு, மருந்து, கருத்தடைச் சிகிச்சை என்று நிறைய செலவழிக்க வேண்டியிருக்கிறது. யாராவது பண உதவி செய்தால் நன்றி உள்ளவனாக இருப்பேன்.

 

`இவ்வளவு நல்லவர்கள்கூட உலகில் இருப்பார்களா!’ என்று பிரமிக்கவைக்கும் அவருடைய தன்னலமற்ற சேவை.

 

பல பத்திரிகைகளில் இம்மாதிரியான தகவலை அளித்து, லட்சக்கணக்கில் கொள்ளையடித்தபின் பிடிபட்டார். அவர் வைத்தியருமில்லை, அவருக்கு மனைவியும் கிடையாது என்பது கூடுதல் தகவல்.

 

நாய்கள்?

 

அவருடைய கற்பனையில்.

சிலர் நம்மிடமிருந்து உதவியை எதிர்பார்ப்பார்கள். `எனக்காக அதைச் செய்துவிட்டீர்களா?’ என்று விடாக்கண்டனாக நம்மைத் துளைப்பார்கள். ஆனால், பிரதி உபகாரம் என்பதே இவர்கள் அகராதியில் கிடையாது. இப்படிப்பட்டவர்களுக்கு எதற்காக உதவி புரிவது?

 

உங்களுக்கு BP இருக்கா?

இப்போதெல்லாம், ரத்த அழுத்தம் என்பது நாற்பது வயதாகிவிட்டாலே ஒருவர் எதிர்பார்க்கும் ஒன்றாகிவிட்டது.

 

குடும்பத்தில், உத்தியோகம் பார்க்கும் இடத்தில், கடைகண்ணிகளில்இப்படிப் பல இடங்களிலும் தாம் நினைத்தபடியே எல்லாம் நடக்கவேண்டும் என்று எதிர்பார்த்தால், ஆகிற காரியமா? அப்படி நடக்காவிட்டால், ஆத்திரம் எழுகிறது. ஒருவர் ஆத்திரப்படுவதால், பிறர் மாறிவிடப்போகிறார்களா, என்ன! அவர் உடல்நிலைதான் கெடும்.

 

என் தோழி அவளது கணவரைப்பற்றி ஆயாசத்துடன் கூறியது: “அரசியல்வாதிகள் மற்றும் கடைக்காரர்கள் செய்யும் ஊழல்களைத் தினசரியில் படித்துவிட்டுக் குமுறுவார். ரத்தக்கொதிப்பு ஏறிவிடும். இப்போது, பக்கவாதம் வந்து, படுத்த படுக்கையாக இருக்கிறார். அவரைக் கவனிப்பதற்குள் என் பிராணன் போகிறது!”

 

சுய பரிதாபத்துடன் பிறரிடம் நம்மைப்பற்றிக் கூறிக்கொள்வது வீண்முயற்சி.

 

சிலருக்குத்தான் வாழ்க்கை இப்படி அமைகிறது!” என்று ஏக்கப் பெருமூச்சுடன், தம் குறைகளைப் பிறரிடம் கூறி ஆறுதல்பெற முயற்சிப்பவரின் புலம்பலைப் பலர் மரியாதை நிமித்தம் கேட்டுவைப்பார்கள். ஒரு சிலர் உள்ளூர மகிழ்வார்கள்தமக்கு இப்படியெல்லாம் நேரவில்லையே என்று!

 

வாழ்க்கை என்பது நாம் அமைத்துக்கொள்வதுதான்.

 

பிறருடைய கட்டுப்பாட்டுக்கு அடங்கி நடப்பதுதான் நல்ல குணம் என்றிருந்தால், தன் தேவைகள் என்ன, எது மகிழ்ச்சியைத் தரும் என்பதே ஒருவருக்குப் புரியாமல் போய்விடும் அபாயம் இருக்கிறது.

 

::நிர்மலா ராகவன்-/-எழுத்தாளர், சமூக ஆர்வலர். மலேசியா.

ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக...  Theebam.com: பழகத் தெரிய வேணும் – 1