சிரிக்க.... சில நிமிடம்

 நகைச்சுவை=ஜோக்ஸ்



-01-

கணவன்: உங்க குரல் ரொம்ப மெல்லிதா இருக்கே

மனைவி (சிரித்து): ஆமாம், அதனால்தான் எல்லாரும் என்னை பறவையோட குரல்னு சொல்றாங்க.

கணவன்: (தனக்குள்) ம் ,ம்,உண்மையிலே , காகம் தான்!

 

-02-

மனைவி: உங்களோட தலையில் முடி கொஞ்சம் கொஞ்சமா குறையுது!

கணவன்: உங்க இடியோசை போன்ற ஏச்சினாலே  எல்லாம் கொட்டிகிட்டு போகுது!

 

-03-

மனைவி: உங்க உயிரே  நான் இல்லையா?

கணவன்: (தனக்குள்) அதுதான் என் உயிரை வாங்கி,  ஊரெல்லாம் விக்கிறியா?

 

-04-

மனைவி: கல்யாணத்துக்குப் பிறகு நான் இன்னும் அழகா தெரியலையா?

கணவன்: ஆமாம்கொஞ்சம்,  கொஞ்சம் பயமுறுத்துற மாதிரி அழகு.

 

-05-

மனைவி: நம்ம வாழ்க்கை எப்படி இருக்கு?

கணவன்: படம் மாதிரி இருக்கு.

மனைவி: என்ன படம்?

கணவன்: திகில்  படம்!

 

-06-

காதலி: நான் சின்ன தவறு பண்ணினாலும் நீங்க கோபப்பட மாட்டீங்களா?

காதலன்: இல்லைஆனா பெரிய தவறு பண்ணினா நீங்கஎன் மனைவிஆவீங்க!

 

-07-

காதலி: என் முகத்தில் ஏதாவது குறை இருக்கா?

காதலன்: குறைன்னா என்ன? இரண்டு கண்கள், ஒரு மூக்கு எல்லாம் ஓகே, ஆனால்   வாய் தான் சற்று பெரிதாய் இருக்கேகொஞ்சம் குறைஞ்சிருந்தா நல்லா இருந்திருக்கும்!

 

-08-

காதலி: என்னை பார்த்தவுடனே

உங்களுக்கு என்ன தோணுது?

காதலன்: இன்றைக்கு எத்தனை ரூபா போகப்போகுது  என்பதுதான் தோணுது!

-09-

காதலி: உங்க மனசுல என்னை தவிர வேற யாராவது இருக்காங்களா?

காதலன்: ஆமாம்உனக்காக எனக்குக்  கடன் தந்தவர்கள்.!

 

-10-

மாமி: என் இளமைக்காலத்தில் நான் தினமும் 10 கி.மீ நடந்தே போவேன்.

மருமகள்: அதான் நீங்க இப்போ வீடு முழுக்க என் பின்னால  நடந்தே நம்மை 10 கி.மீ ஓட வைக்கிறீங்க மாமி!

 

-11-

மாமி: மருமகளே, வீடு எப்போ சுத்தம் பண்ணுவே?

மருமகள்: விருந்தினர்கள் வரப்போகிறாங்கன்னு மெசேஜ் வந்தால்தான் மாமி!

 

-12-

போலீஸ்: திருட  உனக்கு வெட்கமா இல்லையா?

திருடன்: சார், இதைவிட  வேலையே இல்லாம இருக்கிறதான்   வெட்கம்திருட்டுக்கு இல்லை!

 

-13-

போலீஸ்: ரொம்ப சாமர்த்தியமா திருடறே! யாரிடமிருந்து கற்றுக்கிட்டே?

திருடன்: சார், நீங்க பார்க்கிற டிவி  சீரியல் கதாப்பாத்திரத்திலிருந்து தான்!

 

-14-

போலீஸ்: நீ எதுக்கு ஜாலியா சிரிக்கிறே?

திருடன்: சார், என் புகைப்படம் நாளைக்கு பத்திரிகையில வரப்போகுதுன்னு சந்தோஷம்!

 

-15-

நீதிபதி: உன்னை ஜெயிலுக்கு அனுப்பிற எண்டதும் மிக சந்தோசமாய் இருக்கிறாய். என்ன காரணம்?

கைதி: சார், வீட்டில் மனைவி இருக்கிறாங்கஜெயில் தான் எனக்கு safe place!

 

-16-

நீதிபதி: உனக்கு எதாவது கடைசி வேண்டுகோள் இருக்கா?

கைதி: சார், உங்களோட ஒரு செல்பி எடுக்கலாமா?

 

-17-

நீதிபதி: உனக்கு அறிவுரையாக  சொல்லணும்!

கைதி: சார், அறிவுரையெல்லாம் வீட்டிலேயே full time கிடைக்குது.

 

-18-

.நீதிபதி: உனக்கு இனி ஜாமீன் கிடையாது!

கைதி: சார், அப்படி என்றால்  ஜெயிலில் “unlimited food package” கிடைக்குமா?

 

-19-

நீதிபதி:நகைகள் திருடிய குற்றச்சாட்டில் நீ குற்றவாளி இல்லை என நிரூபிக்கபப்ட்டதால் உன்னை விடுதலை செய்கிறோம்.நீ போகலாம்.

குற்றவாளி:அப்படி எண்டால் திருடிய நகைகளை நானே வைச்சிருக்கட்டா சாமி!

 

-20-

ஆசிரியர்: ஐந்து  ரூபாயில்  இரண்டு ரூபாய் போனால் எவ்வளவு?

 மாணவன்: ஐந்து ரூபாயில் பெரிய ஓட்டை இருக்கு என்று அர்த்தம் சார்!

 

ஆக்கம்::செ . மனுவேந்தன்

0 comments:

Post a Comment