அறிவியல்=விஞ்ஞானம்
🤖தண்ணீரில்
நடக்கும் ரோபோ
தண்ணீரில் மூழ்காமல் நடக்கும் பூச்சிகளை நாம் பார்த்திருக்கிறோம்.
அவற்றை முன்மாதிரியாக கொண்டு நீரில் நடக்கும் ரோபோ ஒன்றை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
8 செ.மீ., நீளமும், 10 செ.மீ., அகலமும், 1.5 செ.மீ., உயரமும் கொண்ட இந்த ரோபோவுக்கு,
'ரகோபோட்' என்று பெயரிடப்பட்டுள்ளது.
🌳மரங்களை நடுவது
அதிகமான மரங்களை நடுவது பூமிக்கு நல்லது. அமெரிக்காவைச்
சேர்ந்த ரிவர்சைட் பல்கலை மேற்கொண்ட ஆய்வில், பூமியின் மற்ற பகுதிகளில் மரம் நடுவதை
விட, வெப்ப மண்டல பகுதிகளில் மரம் நடுவதே மிக நல்ல பலன்களை தரும் என்று தெரிய வந்துள்ளது.
🔲கவசம் சிதைவதால்…
நம் உடல் செல்களில் உள்ள குரோமோசோம்களில், 'டெலமீர்ஸ்'
எனும் பாதுகாப்பு கவசம் இருக்கும். வயதாகும் போது இவை சிதைவதால் பல நோய்கள் உருவாகின்றன.
டெலமீர்ஸை காக்கும் ஆற்றல், 'வைட்டமின் டி' சத்தில் உள்ளதாக சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.
🌰ரத்த அழுத்தம்
குறைய…
பீட்ரூட் சாறு குடிப்பதால் வாயில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள்
துாண்டப்பட்டு ரத்த அழுத்தம் குறையும் என்று, இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த எக்ஸிடர்
பல்கலை ஆய்வாளர்கள் கண்டறிந்து உள்ளனர்.
🌊நீரின்றி அமையாது உடல் நலம்
உடல் ஆரோக்கியம் பேணுவதற்கு போதுமான அளவு தண்ணீர்
குடிப்பது அவசியம் என்று மருத்துவர்கள் கூறுவர். தண்ணீர் சரியாக குடிக்கவில்லை என்றால்,
பலவிதமான பிரச்னைகள் வரும் என்று ஆய்வுப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
என்றாலும், தற்போது தான் முதல் முறையாக தண்ணீர் குடிப்பதற்கும், ஹார்மோன் சுரப்பதற்கும் உள்ள தொடர்பு கண்டறியப்பட்டு உள்ளது.
இங்கிலாந்தில் உள்ள லிவர்பூல் ஜான் மூர்ஸ் பல்கலை விஞ்ஞானிகள் இது தொடர்பான சோதனை ஒன்றை மேற்கொண்டனர். 18 முதல் 35 வயது வரையுள்ள 100 ஆரோக்கியமான ஆண்கள், பெண்களை ஆய்வுக்கு உட்படுத்தினர்.
அவர்களில் ஒரு பகுதியினருக்கு தினமும் 1.3 லிட்டர் தண்ணீரும், மற்றொரு பிரிவினருக்கு 4.4 லிட்டர் தண்ணீரும் கொடுத்தனர். தொடர்ந்து ஒரு வாரம் அவர்களை கண்காணித்தனர்.
யார் குறைவான தண்ணீர் அருந்தினரோ அவர்கள் உடலில், 'ஸ்ட்ரெஸ் ஹார்மோன்' எனப்படும் கார்டிசால் நாளமில்லா சுரப்பி அதிகமாக சுரந்தது என்பதை கண்டறிந்தனர்.
நமக்கு எப்போதெல்லாம் ஆபத்து ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் சிறுநீரகத்துக்கு மேல் இருக்கக்கூடிய அட்ரினல் சுரப்பிகளில் இருந்து இந்த ஹார்மோன் உற்பத்தியாகும். இது, உடலுக்கு ஆற்றல் தந்து ஆபத்திலிருந்து நம்மை காத்துக் கொள்ள உதவும்.
🍖சிவப்பு இறைச்சியில் அதிர்ச்சி ஆபத்து
குடல் அழற்சி நோய் (Inflammatory Bowel
Disease) ஏற்படுவதற்கான காரணம் இன்னும் தெளிவாக அறியப்படவில்லை. உடல் எடை இழப்பு, கடும்
வயிற்றுப் போக்கு, வயிற்று வலி ஆகியவை இதன் அறிகுறிகள். இந்த நோயால் கண் பிரச்னை, தோல்
நோய்கள் துவங்கி, குடல் புற்று நோய் வரை அடுத்தடுத்து ஏற்படலாம். உணவுப் பழக்கம், மன
அழுத்தம் ஆகியவற்றால் இந்த நோய் தீவிரமடையும் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில் இது தொடர்பாக சீனாவில் உள்ள கேபிடல்
மருத்துவப் பல்கலை, எலிகளை கொண்டு ஆய்வு செய்தது. ஆய்வாளர்கள், ஒரு பகுதி எலிகளுக்கு
சிவப்பு இறைச்சி என்று அழைக்கப்படும் பன்றி, ஆடு, மாடு ஆகியவற்றின் இறைச்சியை தினமும்
உண்ண கொடுத்தனர்.
இரண்டு வாரம் கழித்து எலிகளை ஆராய்ந்தனர். சிவப்பு இறைச்சி உட்கொண்ட எலிகளுக்கு குடல் அழற்சி நோய் தீவிரமடைந்திருந்தது. மற்ற எலிகளுக்கு அவ்வளவு தீவிரமடையவில்லை. இதற்கு காரணம், சிவப்பு இறைச்சி உடலுக்கு நன்மை செய்யும் குடல் பாக்டீரியாக்களை அழிப்பதும், தீமை செய்யும் பாக்டீரியாக்களை பெருகச் செய்வதும் தான் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
எலிகள் மீதான ஆய்வு மனிதர்களுக்கும் பொருந்தும். எனவே, தினமும் 100 - 120 கிராம் சிவப்பு இறைச்சி உண்ணும் மனிதர்களுக்கு, குடல் அழற்சி தீவிரம் அடையும் வாய்ப்பு உள்ளது. எனவே, ஏற்கனவே இந்த நோயால் பாதிக்கப்பட்டு உள்ளவர்கள், வாரம் இரு முறை மட்டும் இதே அளவு என இறைச்சி உண்பதை குறைத்துக் கொள்வது நல்லது என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
ஆனால், இந்த ஹார்மோன் நமக்கு உண்மையிலேயே ஆபத்து ஏற்படும்போது மட்டும் தான் தேவை. அனாவசியமான நேரங்களில் அடிக்கடி இந்த சுரப்பி துாண்டப்படுமானால், அது உடல் எடை அதிகரிப்பு, இதய நோய்கள், நீரிழிவு, நோய் எதிர்ப்பு மண்டலத்தில் பாதிப்பு ஆகியவற்றை ஏற்படுத்தும்.
எனவே, தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது, அனைத்து விதத்திலும் உடலுக்கு நல்லது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
தொகுப்பு:செ.மனுவேந்தன்
0 comments:
Post a Comment