"அறிவியல் நோக்கில்...''.பகுதி-33 -"பெளத்தம் ஒரு அலசல்''

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய  இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" [In Tamil & English]


[This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.]

 

பகுதி: 33 / முடிவுரை / 'மகாநாம தேரர் ஏன் சோழ வெறியர்?' & 'புத்தர் தனது கொள்கையைப் பரப்ப நம்பிக்கையான இடமாக, இலங்கையைத் தேர்ந்து எடுத்தாரா?'

 


முன்னைய காலத்தில் இலங்கைக்கு பாண்டிய அரச நாடு இலகுவான தொடர்புடைய நாடாக இருந்தது. உதாரணமாக, வைகை நதியினூடாக வந்தால், அது மன்னாரை அடைகிறது. மன்னாரில் இருந்து அருவி ஆறு (Malwattu Oya) மூலம் பயணித்தால் அனுராதபுரம் அடையலாம். எனவே பாண்டிய நாட்டுடன் நல்ல நட்பு தொடர்பு இருந்ததிற்கு இதுவே காரணம். இதனால், பாண்டிய நாட்டின் எதிரியான சோழ நாடு அனுராதபுர அரசர்களுக்கும் எதிரியாகவே இருந்தது எனலாம். அதுவே  மகாநாம தேரர் சோழருக்கு எதிரான வெறுப்பு மனப்பான்மைக்கு [to be Chola phobic] ஒரு காரணமாகுவும் இருக்கலாம் என நம்புகிறேன்.

 

மகாபாரதத்தில் விதுர நீதி என்ற ஒரு பகுதி உள்ளது. அது " நீ எப்பவும் உண்மை சொல்ல வேண்டும், ஆனால் சொல்லும் உண்மை தீங்கு விளைவிக்கும் என்றால், அதை சொல்லாதே, பொய் உதவும் என்றால், பொய்யை உண்மை போல் சொல்லிவிடு" என்கிறது. [There is a verse in Mahabharata.YOU SHOULD ALWAYS TELL THE TRUTH.IF TELLING TRUTH WOULD HARM THE PEOPLE THEN DON’T TELL THAT.IF TELLING A LIE WILL HELP PEOPLE THEN TELL THAT LIE AS A TRUTH.That is from Vidura niti of Mahabharata]. இதைத்தான் மகாவம்சத்தின் ஆசிரியர் தம் இனத்திற்கு என்றும் வரலாறு சாதகமாக இருக்க வேண்டும் என்பதால் மாற்றி சொல்லி இருப்பார் என்றும் எண்ணுகிறேன்.

 

மற்றது  மகாவம்சத்தில் காணப்படும் தமிழருக்கு எதிரான இனத்துவேசத்திற்கு முக்கிய காரணியாக விளங்கியவர், கி.பி 5 ஆம் நூற்றாண்டில் தமிழகத்திலிருந்து இலங்கைக்கு வந்த பௌத்த ஞானியான, காஞ்சிபுரத்துப் பௌத்த பள்ளியைச் சேர்ந்த புத்தகோசர் [the great commentator Buddhaghosa] ஆவார்.

 

'புத்தர் தனது கொள்கையைப் பரப்ப நம்பிக்கையான இடமாக, இலங்கையைத் தேர்ந்து எடுத்தாரா?'

 

புத்தர் தனது நம்பிக்கைக்காக இலங்கையைத் தயார் செய்ததாக அனைத்து இலங்கை பண்டைய பாளி நூல்களும் கூறுகின்றன. புத்தர் மூன்று முறை இலங்கைக்கு விஜயம் செய்ததாக அந்த நாளாகமம்கள் [chronicles] மேலும் இதற்குச் சான்றாக கதை கூறுகிறது. இருப்பினும், இந்த வருகைகள் முந்தைய பாலி நியதியில் (திரிபிடகம் / Pāli Canon, the Tipitaka) குறிப்பிடப்படவில்லை, மேலும் இந்த நிகழ்வுகளை உறுதிப்படுத்தும் தொல்பொருள் அல்லது உரை ஆதாரங்கள் எதுவும், புத்தர் பிறந்து வாழ்ந்து இறந்த மண்ணில் - இந்தியாவில் - இல்லை. புத்தர் இறக்க நேரிட்டபோது, ​​பௌத்தர்கள் சென்று வழிபட வேண்டிய நான்கு இடங்களை புத்தரே அடையாளம் காட்டினார். அந்த நான்கு இடங்கள் லும்பினி, புத்தகயை [புத்த கயா], சாரநாத் மற்றும் குசி நகர் [Lumbini (birthplace of the Buddha), Bodh Gaya (the site where the Buddha attained enlightenment), Sarnath (the location of the Buddha’s first sermon), and Kushinagar (the location where the Buddha attained parinirvana)]. ஆனால், புத்தர் இலங்கையை ஒரு புனிதமான இடமாக என்றும் எங்கும் குறிப்பிடவில்லை. ஆனால் இலங்கைக்கு புத்தர் பறந்து மூன்று தரம் வந்தார் என்று, அதை ஒரு வரலாற்றாக மகாவம்சம் கூறுவது தான் விந்தையாக உள்ளது? புத்தர் இலங்கையை தேர்ந்து எடுத்து, அங்கு பயணம் செய்து இருந்தால், கட்டாயம் அதையே முதலாவதாக குறிப்பிட்டு இருப்பார் என்பதில் எந்த சாதாரண மனிதனுக்கும் ஐயம் இருக்காது, ஆனால் அவரோ அல்லது அவரை சூழ்ந்து இருந்தவர்களோ இலங்கையை அறவே கூறவில்லை என்பது உண்மையாகும்!

 

பின்னர் அசோகரின் காலத்தில், எட்டு புனித புனித தலங்கள் தரிசிக்க மற்ற நான்கு இடங்களும் சேர்க்கப்பட்டன. அந்த நான்கு புனித ஸ்தலங்கள்: சிராவஸ்தி அல்லது சவத்தி [Sravasti or savatthi], சங்கிசா அல்லது சங்காசியா [Sankasia], ராச்கிர் ராஜகஹ, அல்லது ராஜ்கீர்‌ [Rajagaha, also known as Rajgir] மற்றும் வெசாலி [Vaishali] ஆகும். பௌத்தர்கள் வருகை தரும் முக்கிய இடமாக இலங்கையை அசோகர் கருத்தியிருந்தால், அந்த பட்டியலில் இலங்கையையும் சேர்த்திருப்பார். அவரும் மீண்டும் இலங்கையைச் சேர்க்கவில்லை. இதுவும் வரலாற்று உண்மையாகும்!

 

ஒன்று மட்டும் உண்மை, புத்தரும் அசோக மன்னரும் கூட, இலங்கையை அல்லது அனுராதபுரத்தையோ பார்க்க வேண்டிய புனித இடமாக கருதவும் இல்லை, அதை புத்த புனித இடமாக ஏற்கவும் இல்லை.


 *அடுத்த பகுதியை வாசிக்க அழுத்துக...

 

*ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக...

 

Part: 33 / Conclusion / 'Why Mahanama to be Chola phobic?' & 'Is Buddha prepared Lanka for his faith?'

 


The earliest connection was with the Pandya kingdom, came along the River Vaigai, and arrived at Mannar. From Mannar progressed along the Aruvi Aru (Malwattu Oya) to Anuradhapura. There must have better relationship with Pandya kings. This could be the reason for Mahanama to be Chola phobic.

 

'Is Buddha prepared Lanka for his faith?

 

All the chronicles say that the Buddha prepared Lanka for his faith. The chronicles assert that the Buddha visited Lanka thrice. When the Buddha was about to die, he identified four places which the Buddhists should visit and venerate. The four places are Lumbini, Buddhagaya, Sarnath and Kusinara.  The Buddha did not identify Lanka as one holy place to visit?

 

Later during Asoka’s time, four other places are also added to make eight holy places to visit. Those four holy places are Savatthi, Sankasia, Rajagaha and Vesali. If Asoka considered Lanka an important place for the Buddhists to visit, then he would have included Lanka also in the list. He did not include Lanka.

 

The Buddha and the king Asoka did not consider Lanka or Anuradhapura as a holy place to visit.

 

 

நன்றி 

Thanks

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]

[Kandiah Thillaivinayagalingam,

Athiady, Jaffna]

பகுதி / Part: 34 தொடரும் / Will follow

0 comments:

Post a Comment