"அறிவியல் நோக்கில்....''பகுதி-30B -"பெளத்தம் ஒரு அலசல்''

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய  இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" [In Tamil & English] /

பகுதி: 30 B / விஜயனின் பின் ஆட்சி செய்த மன்னர்களும் அது தொடர்பான விபரங்களும் / 'புத்த சமயவாதிகள் புத்தரின்  நான்கு பேருண்மைகளை சரியாக உணர்ந்தார்களா?'  [தமிழ் விரிவாக்கம் தொடர்கிறது]

 


எனவே சுருக்கமாக ஆதார பூர்வமாக சொல்வதென்றால், விஜயன் என்று ஒரு புராண கதாநாயகன், அவனது பண்பற்ற கொடிய செயல்களால், நாடு கடத்தப்பட்டு வந்தேறு குடியாக, அகதியாக 700 தோழர்களுடன் இலங்கை தீவிற்கு வரும் முன்பே, சிவ வழிபாடும் தமிழும் அங்கு இருந்துள்ளது. விஜயன் வந்து 250 ~ 300 ஆண்டுகளின் பின்பு தான் புத்த மதம் இலங்கைக்கு வந்தது. மேலும் விஜயன் வந்து 1000 ஆண்டுகளிற்கு பின்புதான் சிங்களம் என்ற இனமோ அல்லது மொழியோ ஒரு கட்டுக் கோப்பிற்குள் உருவாக தொடங்கின. அது மட்டும் அல்ல, மகாவம்சம்  / விஜயனின் பட்டாபிஷேகம் [CHAPTER VII /THE CONSECRATING OF VIJAYA]  46 - 50 இல். அங்கு பல குடியிருப்புகளை ஏற்படுத்திய பிறகு விஜயனுடைய மந்திரிகள் அவனிடம் ஒன்றாக வந்துஐயனே ! தாங்கள் முடி சூட்டிக் கொள்ள இசைய வேண்டும்" என்கிறார்கள். ஆனால், அவர்கள் வேண்டியும் அவன் மறுத்தான். 'உயர் குல மங்கை ஒருத்தியை', அதே சமயத்தில் அவளை ராணியாகக் கொண்ட பிறகே, பட்டாபிஷேகம் செய்து கொள்ள முடியும்என்று கூறி வேண்டு கோளை ஏற்க மறுத்தான். தங்கள் எஜமானனுக்குப் பட்டாபிஷேகம் செய்வதில் ஆர்வம் கொண்டவர்களாக, மந்திரிகள் அதற்கு வழிசெய்வது கஷ்டமாக இருந்த போதிலும், அவ்வகையில் ஏற்பட்ட பயத்தை ஒழித்தவர்களாக, விலையுயர்ந்த பரிசுப் பொருள்கள், ஆபரணங்கள், முத்துக்களுடன் சிலரை தென்னிந்தியாவிலுள்ள மதுரை மாநகருக்கு அனுப்பி வைத்தனர்' என்கிறது. [When they had founded settlements in the land the ministers all came together and spoke thus to the prince :  Sire, consent to be consecrated as king But, in spite of their demand, the prince refused the consecration, unless a maiden of a noble house were consecrated as queen (at the same time). But the ministers, whose minds were eagerly bent upon the consecrating of their lord, and who, although the means were difficult, had overcome all anxious fears about the matter, sent people, entrusted with many precious gifts, jewels, pearls, and so forth, to the city of Madhurai in southern (India), to woo the daughter of the Pandu king for their lord,]. இது அன்று, அதாவது கி மு 6ஆம், 5ஆம் நூறாண்டில், தமிழருக்கு உள்ள மதிப்பை பறைசாற்றுகிறது, சிங்கள இனத்தின் முதல் மூதாதையான விஜயன் வாயினூடாகவே 'உயர் குல மங்கை' என மதுரை தமிழ் இளவரசியை கூற வைத்ததிற்கு, நாம் மகாவம்ச கதையின் நூலாசிரியருக்கு கட்டாயம் நன்றி செலுத்த வேண்டும்.

 


இலங்கையில் கண்டுபிடிக்கப் பட்ட கிருஸ்துக்கு முற்பட்ட  கல்வெட்டுகளில், 50 மேற்பட்ட இடத்தில் முக்கிய இடத்தை வகுத்த சொல் 'பருமக' [parumaka] ஆகும். இது தென் இந்தியாவில் காணப்பட்ட, தமிழ் சொல் பருமகன் அல்லது  பெருமகன் [perumakan] உடன் ஒன்றிப் போவதாக, ராசநாயகம், சி பத்மநாதன், புஸ்பரத்தினம் போன்ற அறிஞர்கள் அடையாளம் கண்டுள்ளார்கள். இதற்கு ராசநாயகம் , தலைவன், கோமான், மன்னன் [chief, lord, and king] மற்றும் பரணவிதான [Paranavitana] இதற்கு அதே பொருள் பட, ஆனால் பொதுப் படையாக இல்லாமல், இந்தோ ஆரியன் தலைவர்கள் [Indo-Aryan chieftains] என விளக்கி உள்ளார். ஆனால் கிருஸ்துக்கு பின் இந்த பெயர் மாற்றப் பட்டு அது மாபருமக [maparumaka / பெரும் பெருமகன்] என பிரதியீடு செய்யப் பட்டுள்ளது. அப்படியான கல்வெட்டு ஒன்று மட்டக்களப்பு, வெல்லாவெளி - தளவாய் என்ற இடத்தில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது [Vellaveli Brahmi Inscription / photo attached. The rough translation says “Ship caption Shamathaya, who has the title Parumaka, given this rock”. The word Parumaka literally means lord, and the word Naavika could be a sailboat as per use of Sangam literature’s wording.]. இந்த பிராமிச் சாசனம் 'பருமக நாவிக ஷமதய லெணே' என்பதாகும். இதை 'பருமக' [பெருமகன்] என்ற பட்டத்திற்குரிய கப்பல் தலைவன்  ஷமதய என்பவன் கொடுத்த குகை என பொருள் படுத்தப் படுகிறது. எனவே இந்த இடத்தில் கிருஸ்த்துக்கு முன், தமிழ் மொழியையும்  அல்லது வேறு மொழியையும் [பரணவிதான கூறியது போல் இந்தோ ஆரியன்] பேசியோர் வாழ்ந்து உள்ளனர் என்பது உறுதிப் படுத்தப் படுகிறது. எனவே விஜயன் வரும் பொழுது அவனுக்கும் அவன் தோழர்களுக்கு அடைக்கலம் கொடுத்த பூர்வீக குடிமக்களில் இவர்களும் ஒருவராகும், எனவே இவர்களை நீங்கள் ஒதுக்க முடியாது ,இவர்களும் இம் மண்ணின் மைந்தர்களே !! 

 


சக்கரவர்த்தி அசோகன் செய்த தவறா, இல்லை புத்தரின் போதனைகளை பரப்பி தம் கட்டுப் பாட்டில் வைத்திருந்த, வைத்துக் கொண்டிருக்கிற துறவிகள் செய்த தவறா நான் அறியேன் ? ஏன் என்றால் புத்தர் மிக தெளிவாகச் சொல்கிறார்: 'கடவுளை மையமாகக் கொண்ட சமயங்களில் எது சரியானது, எது தவறானது, என்பதை அறிய அச்சமயவாதிகள் சொல்வதை நாம் செய்ய வேண்டும். ஆனால் மனிதனை மையமாகக் கொண்ட பௌத்த சமயத்தில் எது சரி, எது தவறு என்பதை அறிய நம்மை முழுமையாகப் புரிந்து கொள்ளவும், உணர்ந்து கொள்ளவும் வேண்டும். இவ்வாறு நம்மை உணர்ந்து கொள்வதால் எழும் நன்னெறி ஒரு கட்டளையினால் உருவாக்கப்படும் நன்னெறியை விட உறுதியானவையாகவும் பலம் வாய்ந்தவையாகவும் இருக்கும்' என்று அவர் போதித்ததுடன், மற்றவர்களுக்கு உதாரணமாக அவர் நான்கு அடிப்படை பேருண்மைகளையும் கடைபிடித்து வாழ்ந்து காட்டினார். இன்று பர்மா, இலங்கை போன்ற நாடுகளில் புத்த சமயவாதிகள் என்ன செய்கிறார்கள் ?, எது செய்யப் போகிறார்கள் ? என்ற தவிப்பில், பயத்தில் மற்ற இனம் வாழும் நாடாக இவை மாறுகிறது? காரணம் அந்த புத்தரின் புனிதமான நான்கு பேருண்மைகளை சரியாக உணராமையும் கடைப்  பிடிக்காததும் ஆகும். அப்படியான நடவடிக்கைகளுக்கு சார்பான, சாதகமான வழி அமைத்து கொடுத்தது தான் இந்த மகாவம்சம் என்று சொல்லலாமோ என்று எனக்கும் தோன்றுகிறது ?

👉

 *அடுத்த பகுதியை வாசிக்க அழுத்துக...

*ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக...

 

நன்றி 

Thanks    

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]

[Kandiah Thillaivinayagalingam,

Athiady, Jaffna]

பகுதி / Part: 31 தொடரும் / Will follow

0 comments:

Post a Comment