சிரிக்க... சில நிமிடம்

நகைச்சுவை=ஜோக்ஸ்



-01-

மனைவி: இந்த உலகத்துலேயே பெரிய கொடுமை எது தெரியுமா?

கணவன்: தெரியலையே..

மனைவி: தலைவர்  பேசும்போது மத்தவங்க அமைதியா இருக்கிறதுதான்!

கணவன்: (மனதுக்குள்) அதைவிட பெரிய கொடுமை, நீ  பேசும்போது நான்  அமைதியா இருக்கிறது!

 

-02-

கணவன்: டாக்டர், என் மனைவிக்கு ஒரு விசித்திரமான நோய்.. அவ பேசிட்டே இருக்கும்போது திடீர்னு தூங்கிடுறா!

டாக்டர்: அது நோய் இல்ல சார்.. அது "ஆட்டோமேட்டிக் பவர் ஆஃப்" வசதி! நீங்க கொடுத்து வச்சவர்!

 

-03-

மகன்: அப்பா, எனக்கு ஒரு சந்தேகம்.. கல்யாணத்துக்கு எவ்வளவு செலவாகும்?

அப்பா: அதுக்கு முடிவே இல்லையப்பா.. அன்றிலிருந்து நான் இன்னும் நான் செலவு பண்ணிட்டே தான் இருக்கேன்!

 

-04-

மகன்: அப்பா, "மௌனம் ஒரு பொன்" அப்படின்னா என்னப்பா?

அப்பா: அம்மா செய்யிறது தப்பு என்று தெரிஞ்சும் நான் அமைதியா இருக்கிறதுதானப்பா!

 

-05-

அப்பா: நீ பெரியவனானதும் என்ன பண்ணப்போற?

மகன்: நீங்க பண்ற மாதிரியே எனக்கும் ஒரு பையனை பெத்துட்டு ,இருந்த இடத்தில இருந்துகொண்டு  அவனை அடிச்சு வேலையும் வாங்கி  வளர்க்கப் போறேன் அப்பா!

 

-06-

தங்கை: அண்ணா, ஏப்ரல் 1-க்கும் கல்யாணத்துக்கும் என்ன சம்பந்தம்?

அண்ணன்: ஏப்ரல் 1 அன்னைக்கு ஒருத்தரை ஏமாத்துவோம்.. ஆனா கல்யாணத்துல வாழ்நாள் முழுக்க ஏமாறுவோம்!

 

-07-

நோயாளி: டாக்டர், எனக்கு ஞாபக மறதி அதிகமா இருக்கு.. என்ன பண்றது?

டாக்டர்: மறக்கமுதல்ல என் பீஸை கொடுத்திடுங்க.. அப்புறம் வைத்தியம் பார்ப்போம்!

 

-08-

மனைவி: ஏங்க, நம்ம கல்யாண போட்டோவை ஏன் தலைகீழா மாட்டி வச்சிருக்கீங்க?

கணவன்: அப்படியாவது நாம சந்தோஷமா இருந்த காலம் திரும்ப வராதான்னு ஒரு நப்பாசைதான்!

 

-09-

அம்மா: ஏன்டா தம்பி சோகமா இருக்க?

மகன்: ஹோம் வொர்க் பண்ணலன்னு மிஸ் கிளாஸை விட்டு வெளிய போக சொன்னாங்கம்மா.

அம்மா: அப்புறம்?

மகன்: ஜாலியா வெளிய சுத்தலாம்னு பார்த்தா, அங்க எங்க தலைமை ஆசிரியர்கூட சுத்திக்கிட்டு  இருக்காரு!

 

-10-

கணவன்: நம்ம வீட்டு நாய் ஏன் என்னைப் பார்த்தாலே குரைக்குது?

மனைவி: அதுக்கு ஒன்னும் தெரியாதுன்னு நினைச்சீங்களா? இந்த வீட்டு உண்மையான எஜமானி யாருன்னு அதுக்கு நல்லாவே தெரியும்!

 

-11-

மாணவன் 1: மச்சி, எக்ஸாம்ல எதுவுமே தெரியல.. பேப்பரை அப்படியே பிளாங்கா விட்டுட்டு வந்துட்டேன்.

மாணவன் 2: ஐயோ! நானும் அப்படியேதான் விட்டுட்டு வந்தேன். இப்போ டீச்சர் நாம ரெண்டு பேரும் காப்பி அடிச்சதா நினைச்சு பிரின்சிபாலிடம் அனுப்பப்போறாவே!

 

-12-

ஆசிரியர்: ஏன்டா எக்ஸாம்ல தூங்கிட்டு இருக்க?

மாணவன்: கனவுல ஆவது  விடை வரும்னு  வெயிட் பண்ணிட்டு இருக்கேன் சார்!

 

-13-

ஆசிரியர்: அக்பர் எப்ப இறந்தாரு?

மாணவன்: அவர் இறந்தப்ப நான் பிறக்கவே இல்ல சார்.. அப்புறம் எப்படி எனக்குத் தெரியும்?

 

-14-

ஆசிரியர்: பரீட்சை ஹால்ல ஏன் பின்னாடி பார்த்துட்டு இருக்காய்?

மாணவன்: வினாத்தாள்ல "பின்வரும் வினாக்களுக்கு விடை அளிக்கவும்"னு போட்டுருந்தாங்க.. நான் முன்னாடிதானே இருக்கேன், அதான் பின்னாடி யாரு வினாக்களோடு வர்றாங்களோ  எண்டு பார்க்குறேன்!

 

-15-

மாணவன்: சார், நான் ஒரு பெரிய சயின்டிஸ்ட் ஆகப்போறேன்.

ஆசிரியர்: நல்லது.. என்ன கண்டுபிடிக்கப் போற?

மாணவன்: ஸ்கூலுக்கு லீவு வேணும்னா, மழையை மட்டும் வரவைக்கிற மெஷின் கண்டுபிடிக்கப் போறேன்!

 

-16-

ஆசிரியர்: "அம்மா உப்புமா  செய்தார்" - இது என்ன காலம்?

மாணவன்: இது ரவை மலிவான   காலம் சார்!

 

-17-

ஆசிரியர்: ஒரு கதை சொல்லு பாப்போம்.

மாணவன்: ஒரு ஊர்ல ஒரு அரசன் இருந்தான்.. அப்புறம் அவன் செத்துப்போயிட்டான். அவ்ளோதான் சார்!

ஆசிரியர்: ஏன்டா இவ்வளவு வேகமா முடிச்சிட்ட?

மாணவன்: எனக்குப் போன்ல சார்ஜ் கம்மியா இருக்கு சார், அதான் சுருக்கமா முடிச்சிட்டேன்!

 

-18-

தந்தை: ஏன்டா ஸ்கூலுக்குப் போகமாட்டேன்னு அடம் பிடிக்கிற?

மகன்: அங்க டீச்சருக்கு ஒண்ணுமே தெரியலப்பா.. எல்லாத்துக்கும் என்கிட்டயே கேள்வி கேக்குறாங்க!

 

-19-

டாக்டர்: உங்க பையனுக்கு என்ன ஆச்சு?

அப்பா: போன்ல ரொம்ப நேரம் கேம் விளையாடுறான் டாக்டர்.

டாக்டர்: ! அப்போ போனை பிடுங்கி வச்சுக்கோங்க.

அப்பா: அதுக்கு அவன் என்னை பிடுங்கி வச்சுருவானே!

 

-20-

நோயாளி: டாக்டர், நான் தூங்கும்போது என் கனவுல குரங்குகள் கால்பந்து விளையாடுது.

டாக்டர்: பரவாயில்ல, இன்னைக்கு ராத்திரி தூங்காதீங்க.

நோயாளி: அப்புறம் மேட்ச் முடிவு எப்படி நான் பாக்குறது டாக்டர்?

தீபம் நகைச்சுவை 

0 comments:

Post a Comment