மகளிர் பக்கம்:கர்ப்ப‌‌ப்பை கட்டிகள் - பய‌மா?


கட்டி வளர்தல் என்றாலே நாம் உடனடியாக நினைப்பது அது புற்று நோயோ (Cancer)என்று தான் எந்த ஒரு சந்தேகமான கட்டிகளையும் சோதித்து அவை புற்று நோயல்ல என்று உறுதிப்படுத்திக் கொள்வது கட்டாயம். கர்ப்பப் பையில் வருகின்ற கட்டிகள் புற்றுநோய் கட்டியாக வளரலாம்


ஆனால் அதைவிட மிகவும் பொதுவாக ஏற்படும் புற்று நோயல்லாத பைவ்ரோயிட் (Fibroid) எனப்படும் கட்டிகள் கர்ப்பப் பையின் சுவற்றிலே இருக்கும் தசையில் இருந்து உருவாகும் கட்டியாகும். இது தனியாக இருக்கலாம் அல்லது ஒரு கர்ப்பப் பையிலேயே பல கட்டிகள் இருக்கலாம்.

இது அரிதாக ஏற்படுகின்ற நோயும் இல்லை. இது மிகவும் பொதுவாக அதாவது 45 வயதிலே இருக்கும் 100 பெண்களை எடுத்துக் கொண்டால் கிட்டத்தட்ட 40 பேருக்கும் அநேகமானோருக்கு இந்த கட்டிகள் இருக்கலாம்.

ஆனாலும் இது எல்லாப் பெண்களிலும் அதற்கான அறிகுறிகளை வெளிக்காட்டாததால் நிறையப் பேருக்கு தங்களுக்கு இந்தக் கட்டிகள் இருப்பதே தெரியாமல் போய் விடுகின்றது.
பொதுவாக 40 முதல் 50 வயதளவிலேயே அதிகமான பெண்களுக்கு இது ஏற்பட்டாலும், இளம் பெண்களுக்கும் ஏற்படலாம். இதற்கான அறிகுறிகள்:

மாதவிடாய் நேரத்தில் அதிகம் ரத்தம் போகுதல்
அடிவயிற்றிலே ஏதோ இருப்பது போன்ற உணர்வு
அடிவயிறு வீங்குதல்
அதிகம் சிறுநீர் கழிக்கவேண்டி ஏற்படுதல்
இது புற்று நோயும் அல்ல. மேலும் இந்த கட்டி பிற்காலத்தில் புற்று நோயாக மாறுவதற்கான சந்தர்ப்பமும் மிகவும் குறைவு. யாருக்காவது பைவ்ரோயிட் (Fibroid)எனப்படும் கட்டிகள் உள்ளது என்றால் பயப்பட வேண்டியதில்லை. 
தகவல்:எஸ்.பரந்தாமன்

வயது ஏறஏற உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை…….

நம் உடலும். உடலில் உச்சந்தலை முதல் உள்ளங் கால் வரை ஒவ்வொரு முக்கிய உறுப்புக்கும் தனித் தனி வயது உண்டு. பிரான்ஸ் மருத்துவ நிபுணர்கள் ஆய்வில் கிடைத்த ருசிகர தகவல்கள்
*தலைமுடிமுப்பது வயதில் இருந்தே தலைமுடி கொட்ட ஆரம்பி க்கும் முடி தோன்றும்
*மூளை: மூளையில் உள்ள நரம்பு உயிரணுக்களின் எண்ணிக்கை 10,000 கோடி நமது ஒவ்வொரு எண்ணம், சொல், செயல்களுக்கு இவற்றின் கட்டளைகள் தான் காரணம். 20 வயது வரை தான் இதன் சுறுசுறுப்பு இருக்கும். 20 ல் இருந்து இதன் எண்ணிக்கை குறைய ஆரம்பிக்கும். 40 வயதில் இருந்து ஒரு நாளைக்கு 10,000 உயிரணு க்கள் வீதம் சரியும். நினைவாற்றல் உட்பட பல செயல் கள் செயலி ழக்க இது தான் காரணம்
*கண்: பத்திரிக்கை படிக்கும் போதும், டிவி பார்க்கும் போதும் கண் களை இடுக்கி, பாடாய்ப்படுத்தி பார்ப்பர் சிலர்; அடடா, வயது 40 ஆகி விட்டது என்று புரிந்து கொள்ளலாம். அந்த வயதில் தான் பார்வை வலிமை குறைய ஆரம்பிக்கிறது
*பற்கள்: எச்சில் ஊறும் வரை தான் பற்களுக்கு வலிமை. பாக்டீரியாக்களையும் விரட்டியடிக்கும். நாற்பது வய தில் எச்சில் ஊறுவது குறைய துவங்கும். அதனால் தான் சிலரிடம் கப்ஸ்.
*குரல்தொண்டையில் உள்ள லாரினக்ஸ் என்ற மெல்லிய திசுக் கள் நீடிக்கும் வரை தான் குரலில் இனிமை இருக்கும். 65 வயதுக்கு பலவீனமாகி, குரல்கரகரதான்
*இருதயம்ரத்தத்தை உள்வாங்கி, மற்ற உறுப்புகளுக்கு அனுப்பும் சக்தி
படைத்தது இருதய பம்ப்; ரத்தத்தை விரைவாக அனுப்பும் நெகிழ்திறன் கொண்ட இந்த பம்ப், 40 வயதில் பலவீனமடைய ஆரம்பிக்கிறது. அதனால், மற்ற உறுப் புகளுக்கு ரத்தம் பாயும் வேக மும் குறைகிறது
குடல்:குடலுக்கு 55 வயது வரை தான் முழு ஆரோக்கியம். அப் போது குடல், கல்லீரல், சிறுகுடல், இரைப்பையில் ஜீரணத்துக்கா நொதிநீர் சுரப்பது குறைய ஆரம்பிக்கும். இதனால், அஜீரணம்வயிற்றுப்பிரச்னை போன்றவை தலைகாட்டும்
*நுரையீரல்: 20 வயது வரை தான் முழுவீச்சில் இயங் கும். அதன்பின், இடுப்பு எலும்பு பகுதி நெருக்கிக்கொள் , நுரையீரல் சக்தி குறைந்து, மூச்சு, உள்ளிழுத்து வெளியேவிடும் அளவு குறையும். 40 வயசுக்கு மேல், சில அடிதூர ம் நடந்தால் மூச்சு வாங்குவதற்கு காரணம் இது தான்.
*சிறுநீர்ப்பைஇது வயசாவது 65 ல் ஆரம்பிக்கிறது. 30 வயதில் 2 கப் சிறுநீர் தேக் வைக்கும் அளவுக்கு கொள்ள ளவு இருக்கும்; 65 ல் ஒரு கப் தான் தேங்கும் அளவுக்கு சுருங்கி விடும்
*கல்லீரல்இந்த ஒரு உறுப்பு மட்டும் தான் 70 வயது வரை சூப்பர் இயக்கத்துடன் உள்ளது. குவாட்டரை நினைக்காதவரை இதன் பலம் ஆண்டுக்கணக்கில் நீடிக்கும்
*சிறுநீரகம்ரத்தத்தை சுத்தப்படுத்தி பிரிக்கும் வேலை யை இதன்நெப்ரான்ஸ்என்ற திசுக்கள் செய்கின்றன. 50 வயதில் இது வலு விழக்க ஆரம்பிக்கிறது
*எலும்புகள்25 வயது வரை தான் எலும்புகள் வலுவாக இருக்கும். அதன் பின் 35 ல் இருந்து பலவீனமடைய ஆரம்பிக்கும்
*தசைகள்முப்பது வயதில் தசைகள் 0.5 முதில் 2 சதவீதம் வரைஆண்டுக்கு குறைய ஆரம்பிக்கும். தினசரி பயிற்சி, உடல் உழைப்பு தான் இதில் இருந்து காக்கும்
*தோல்தோல்பகுதி, 25 வயதில் இருந்தே பலவீனம டைய ஆரம்பிக்கும்

இவ்வாறாக எல்லோருக்குமே இருக்கப்போவதில்லை.அவர்களின் உணவு,பழக்கவழக்கங்களினைப் பொறுத்து உறுப்புகளின் செயற்பாட்டுக் காலம் மாறுபடலாம்.