"வாழ்க்கைப் பாடம்" & 'பதமான நீரோ?'



"வாழ்க்கைப் பாடம்"

1. தவறுகளும் நினைவுகளும்

செய்த குற்ற உணர்வினில் இருந்துநல்ல

சிந்தனை நினைவுகள் சேர்த்திடுவோம்!

செய்த தவறுகள் தந்திட்ட பாடத்தால்நல்ல

அனுபவ அறிவைச் சேர்த்திடுவோம்!

எய்தும் வினைகளின் வழியினில் இயங்கும்கர்ம

இயற்கையின் ஞானத்தைச் சேர்த்திடுவோம்!

பெய்திடும் அன்புள்ள தோழமை கொண்டுநல்ல

புத்தியின் தெளிவைச் சேர்த்திடுவோம்!

 

2. நல்வினையும் தீவினையும்

எதைநாம் விதைப்போமோ அதுவே விளையும்இதுவே

இயற்கையின் கர்மச் சூத்திரமாம்!

இதயத்தில் பிறருக்கு நன்மையே நினைத்தால்நல்வினை

நமக்க என்றும் சேர்ந்திடுமாம்!

சதியின் பெருக்கமும் துரோகமும் செய்தால்தீவினை

துன்பமாய் நம்மைக் சூழ்ந்திடுமாம்!

மதியின் வழியில் அறத்தினைப் காத்துநல்ல

மனிதனாய் வாழ்தலே உன்னதமாம்!

= செ .மனுவேந்தன்

 

'பதமான நீரோ?'

பனைமரம் தந்திட்ட தெள்ளமுது இதுவோ?

மனமகிழ்வு ஊட்டிடும் மாமருந்து அதுவோ?

பதநீர் பருகிடப் பசியும் அடங்குமே!

நிதமும் அருந்திட நலமும் பெருகிடுமே!

 

இயற்கை ஈந்திட்ட இனிய பானமிது!

துயரம் போக்கிடும் தூய அமுதமிது!

தென்னையும் கற்பகத்தருவும் தந்திடும் செல்வம்!

மண்ணின் மணம்வீசும் மங்காப் புகழே!



[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]


0 comments:

Post a Comment