தமிழ் மொழி [14]- தமிழில் ஊடுருவியுள்ள பாரசீக மொழி (Persian)


தமிழில் பாரசீக (Persian) மொழியிலிருந்து வந்துள்ள பல சொற்கள் இருக்கின்றன. இவை பெரும்பாலும் இலக்கியம், நிர்வாகம், மற்றும் சமூக வாழ்க்கையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கீழே சில பாரசீக நிழல் கொண்ட தமிழ்ச்சொற்களின் பட்டியல் வழங்கப்படுகிறது:

  1. கிதாப் (كتاب) – புத்தகம்

  2. ஆசான் (āsān – Persian: آسان – easy, teacher)

  3. ஆமல் (amal – عمل – deed/work)

  4. ஆபத்து (āfat – آفت – disaster)

  5. இஜாரா (ijārah – اجاره – lease/rent)

  6. ஈமான் (īmān – ایمان – faith)

  7. உசுர் (ʿushr – عشر – tax on produce)

  8. உரீது (receipt – Persian: رسید [rasid])

  9. எஜமானன் (ejamān – Persian: اجمآن – master/host)

  10. -கமான் (كمان) – துப்பாக்கி

  11. கூலி (kooli – Persian: کولی – wages/laborer)

  12. சலாமு (salām – سلام – greeting)

  13. சம்சாரம் (samsār – Persian via Sanskrit, meaning family/life cycle)

  14. சரக்கு (sarak – Persian: سرک – goods, load)

  15. சவால் (sawāl – سوال – question/challenge)

  16. சிப்பாய்  (sipāh – سپاه – soldier)

  17. சில்லரை (sīrrā – small change – from Persian "sīrāy")

  18. சீல் (sīl – seal/stamp – Persian origin)

  19. சூதர் (sūd – سود – interest/profit)

  20. சேட்டு (seth – سیٹھ – merchant/master)

  21. தபால் (tabāl – ڈاک – mail/post)

  22. தபாஸ் (tahqīq/tapsīs – تفتیش – investigation)

  23. தர்பார் (darbār – دربار – royal court)

  24. தலுக்கா (tahsil/taluqa – تحصیل – revenue district)

  25. பஜார் (bāzār – بازار – market)

  26. பஞ்சாயத்து (panjāyat – پنجایت – council of five)

  27. பாக்கு (pāk – پاک – holy/pure, betel leaf also)

  28. பாயசம் (pāy – پای – leg/milk sweet in Persian-Dravidian fusion)

  29. பயன் (fayda – فایده – benefit)

  30. பீரங்கி (ferangī – فرنگی – foreigner/European cannon)

  31. பீரியல் (biryān – بریان – fried/rice dish)

  32. சபீர் (صبر) – பொறுமை

  33. பைசா (paisa – پیسہ – coin/money)

  34. ஹதீஸ் (حديث) – பிரபலமாகும் சொல், சம்பவம்

  35. மசூதி (masjid – مسجد – mosque – Arabic via Persian)

  36. மஜ்லிஸ் (majlis – مجلس – gathering/council)

  37. மர்ஹபா (marḥabā – مرحبا – welcome)

  38. மௌலவி (maulavī – مولوی – religious scholar)

  39. முல்லா (mullā – ملا – cleric/scholar)

  40. நபி (nabī – نبی – prophet)

  41. நிசாப் (nizām – نظام – system/rule)

  42. நஜீர் (nazīr – نذیر – warner or fine/penalty – context-based)

  43. நியாமத் (niʿmat – نعمت – blessing)

  44. நிஸ்பா (nisbat – نسبت – relation/connection)

  45. முஜாஹித் (مجاهد) – போராட்ட வீரர்

  46. பார்வா (parvā – پروا – care/attention)

  47. பாக் (pāk – پاک – pure)

  48. பண் (funn – فن – art/skill)

  49. தஹாஜூத் (تهجد) – நன்றியுடன் இரவு பிரார்த்தனை

  50. பகீர் (baghīr – perhaps from فقیر – faqīr – poor man)

  51. பாத்சா (bādshāh – بادشاه – king/emperor)

  52. பாஷா (pāshā – پاشا – lord/ruler)

  53. பாகீர் (bakhīr – بخیل – miser)

  54. பைதல் (faizal – فیصل – decision/judgment)

  55. பைதான் (paiṭān – پائتان – lower area/step – in mosques or house)

  56. பைசா (paisa – پیسہ – money)

  57. புரோக்கரா (broker – بروکر – agent/mediator)

  58. பில்லா (bilā – بلا – trouble/evil)

  59. புட்கா (futkā – slang from Persian فوت – puff/smoke)

  60. புன்வான் (buniyān – بنیاد – base/foundation)

  61. ரவுத்தர் (rawtār – روَتَر – nobleman/horseman)

  62. ரோஷனி (roshni – روشنی – light)

  63. லாபம் (lāb – نفع – profit/gain)

  64. லஞ்சம் (rishwat – رشوت – bribe – via Persian)

  65. லாயக் (lāyaq – لایق – worthy)

  66. வக்கீல் (vakīl – وکیل – lawyer/representative)

  67. வசூல் (wasūl – وصول – collection/revenue)

  68. வஜீப் (wājib – واجب – obligatory)

  69. வஜிர் (wazīr – وزیر – minister)

  70. ஹலால் (ḥalāl – حلال – permissible – Arabic via Persian)

  71. ஹராம் (ḥarām – حرام – forbidden)

  72. ஹக்கீம் (ḥakīm – حکیم – physician)

  73. ஹூன் (ḥun – via Persian for Central Asian ethnic group)

  74. ஜம்மா (jamā – جمع – total/sum)

  75. ஜாகீர் (jāgīr – جاگیر – land grant)

  76. ஜைதூன் (zaitūn – زیتون – olive)

  77. ஜவாப் (javāb – جواب – answer)

  78. ஜவாஹிர் (javāhir – جواهر – jewels)

  79. ஜியாத் (jihād – جهاد – struggle – Arabic via Persian)

  80. சாலீன் (shālīn – شالین – elegant/polite)

  81. சாகூ (sāgū – ساگو – sago, from Persian)

  82. சாஹிப் (sāḥib – صاحب – sir/master)

  83. சாத்தான் (shaitān – شیطان – devil)

  84. சுப்ஹான் (subḥān – سبحان – glory)

  85. நயீப் (naʿīb – نائب – deputy)

  86. ஃபானா (fanā – فناء – annihilation/dissolution)


🔎 குறிப்பு:

  • இவை அனைத்தும் பாரசீக அல்லது பாரசீக வழியாக அரபிய மொழியிலிருந்து வந்த சொற்கள்.

  • தமிழ் வட்டார மொழியில் (முஸ்லிம் சமூகங்களில்) பரவலாகக் காணப்படும் சொற்கள்.

  • சில சொற்கள் அலங்காரமாக இலக்கியங்களில் மட்டும்தான் பயன்படுகின்றன.

தமிழில் ஊடுருவியுள்ள பாரசீக  சொற்களை அறிந்து கொண்டு, அவற்றைப் பரிசீலிக்கவும், அவசியமெனில் மாற்றுப் தமிழ்ச்சொற்களைப் பயன்படுத்தவும் நாம் முன்வர வேண்டும்.

தொகுப்பு: தீபம் இணையத்தளம்/ dheepam / www.ttamil.com /Theebam

>தமிழ் மொழி -அடுத்த பதிவினை வாசிக்க அழுத்துக...

Theebam.com: தமிழ் மொழி[15]- தமிழில் ஊடுருவியுள்ள அரபு மொழி (Ar...

>ஆரம்பத்திலிருந்து வாசிக்க, அழுத்துக...

Theebam.com: தமிழ் மொழி [01] -நவீன உலகில் தமிழ்மொழியின் நிலை: 

மாதவிடாய் நேரத்தில் பின்பற்ற வேண்டிய....

 👩ஆரோக்கியமான பழக்கங்கள்


மாதவிடாய் சுகாதாரம் குறித்த ஆலோசனைகளும், விவாதங்களும், பேச்சுகளும் மிகவும் அரிதாகவே இந்திய இலங்கை வீடுகளில் நடைபெறுகின்றன.

இது தொடர்பான விழிப்புணர்வு வளர்ந்து வந்தாலும்கூட, மாதவிடாய் என்பது பேசக்கூடாத, அசௌகரியத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு பேசுபொருளாகவே இன்றும் நீடிக்கிறது.

மாதவிடாய் சுகாதார தினம் ஒவ்வோர் ஆண்டும் மே 28ஆம் தேதி அன்று கடைபிடிக்கப்படுகிறது.

 

👧நேப்கின்களை தேர்வு செய்வது எப்படி?

*பருத்தி இழைகளால் ஆன நேப்கின்களை தேர்வு செய்ய வேண்டும். ஏனெனில், அவை எளிதில் ரத்தத்தை உறிஞ்சிக் கொள்ளும் தன்மை கொண்டவை. மேலும், எரிச்சல் போன்ற பிரச்னைகள் ஏற்படுவதையும் தவிர்க்கின்றன.

*நைலான் போன்ற பொருட்களால் செய்யப்படும் நேப்கின்களை காட்டிலும், இதன் விலை சற்று அதிகமாக இருந்தாலும், பெண்களின் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு இதற்காகப் பணம் செலவழிப்பதில் தவறில்லை.

*அதோடு, மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் வகையிலான பருத்தி துணிகளால் ஆன 'ப்ரீயட் பேன்டீஸ்' மற்றும் 'மறுபயன்பாடு செய்யக்கூடிய பருத்தி பேட்கள்' போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.

*இயற்கை மற்றும் சுற்றுச்சூழலுக்கு நன்மை தரும் வகையில் இவை தயாரிக்கப்பட்டாலும்கூட, இதுபோன்ற பொருட்களை முறையாகப் பயன்படுத்தவில்லை அல்லது சுத்தம் செய்யவில்லை என்றால், பெண்கள் நோய்த்தொற்றுக்கு ஆளாக நேரிடும்.


👧மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தும் பொருட்களை பராமரிப்பது எப்படி?

"பீரியட் பேன்டீஸ்' மற்றும் 'மறுபயன்பாடு செய்யக்கூடிய பருத்தி பேட்கள்' போன்ற பொருட்களை வைத்தியர்கள்  அதிகம் பரிந்துரை செய்வதில்லை.

அதுபோன்ற பொருட்களை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள் என்றால், மிதமான வெந்நீரில் அதை நனைத்து நன்றாகச் சுத்தம் செய்ய வேண்டும்."

அதோடு, "ஆன்டிசெப்டிக் போன்ற பொருட்களைப் பயன்படுத்தாமல், மிதமான சோப்பில் துவைத்து வெயிலில் நன்கு காய வைத்து எடுத்த பிறகு பயன்படுத்த வேண்டும்.

இப்படிச் சரியான முறையில் துவைத்து, காயவைக்கவில்லை என்றால் நோய்த் தொற்றுக்கு ஆளாக நேரிடும்.

 

👧எவ்வளவு மணிநேரத்துக்கு ஒரு முறை பேட்களை மாற்ற வேண்டும்?

"பொதுவாக நாள் ஒன்றுக்கு நான்கு முறை பேட்களை மாற்றுவது நல்லது. 'மென்ஸ்ட்ருவல் கப்' (menstrual cup) பயன்படுத்தும்போது 6 முதல் 8 மணிநேரத்துக்கு ஒரு முறை அதை 'அன்லோட்' செய்வது நல்லது.

ஆனால், இதே நேர அளவைத்தான் பின்பற்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒரு சிலருக்கு அதிகமான உதிரப்போக்கு இருக்கும். அப்போது நேப்கின்கள் முழுமையாக நனையும் வரை காத்திருக்காமல், மூன்று மணிநேரத்துக்கு ஒரு முறை நேப்கினை மாற்றுவது நல்லது."

 

👧மென்ஸ்ட்ருவல் கப் பயன்படுத்தும்போது கவனத்தில் கொள்ள வேண்டியது என்ன?

மென்ஸ்ட்ருவல் கப்பும் பொருளாதாரத்தைக் கவனத்தில் கொண்டுதான் அறிமுகம் செய்யப்பட்டது. நீண்ட நேரம் பயன்படுத்துவதற்கு ஏதுவானது. மேலும் பயணம் செய்யும் காலத்திலும் இவை பயன்படுத்தப்படும்.

பீரியட் பேன்டீஸ், மறுபயன்பாடு செய்யவல்ல பருத்தி பேட்கள் போன்றவற்றைச் சுத்தம் செய்வதைப் போன்றே, கொதிக்கும் நீரில் நான்கு நிமிடங்களுக்கு நன்றாகக் கொதிக்க வைத்த பிறகு, மிதமான, வாசனையற்ற சோப்பில் கழுவ வேண்டும்.

மாதவிடாய் காலத்தில் தங்களுடன் எப்போதும் ஒன்றுக்கும் மேலான கப்களை வைத்திருப்பது நல்லது. ஒரு நாள் முழுவதும் ஒரே கப்பை பயன்படுத்துவற்குப் பதிலாக, தூய்மையாக இருக்கும் மற்றொன்றைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது.

 

👧வலி நிவாரணிகளை எடுத்துக் கொள்வது சரியா?

முன்பு கூறியதைப் போன்றே மாதவிடாய் என்பது மிகவும் இயல்பான இயற்கை நிகழ்வு. இந்த நேரத்தில் பலருக்கும் வயிற்று வலி ஏற்படும். இதிலிருந்து தப்பிக்க வலி நிஅதில் தவறு ஒன்றும் இல்லை. வயிற்று வலியால் அவதிப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலியால் உங்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கக்கூடாது.

அதேவேளையில், கடுமையான வயிற்று வலி இருந்தால், மருத்துவரை அணுகி, முறையான சிகிச்சைகளை எடுத்துக்கொள்ள வேண்டியதும் அவசியம்.


👧மாதவிடாய் காலத்தில் பின்பற்றப்பட வேண்டிய இதர ஆரோக்கியமான பழக்கங்கள் என்ன?

*காற்றோட்டமான உள்ளாடைகளை அணிய வேண்டும்

*மாதவிடாய் காலகட்டத்தில் பெண்ணுறுப்பைச் சுற்றி இருக்கும் முடியை சவரம் செய்வது போன்றவற்றைத் தவிர்க்கவும். இது பொதுவாக பாக்டீரியா, வைரஸ் போன்ற தொற்றுகளில் இருந்து உணர்ச்சி மிகுந்த பகுதியைப் பாதுகாக்கும் பணியை மேற்கொள்வதால், மாதவிடாய் காலத்தில் இதுபோன்ற செயல்களைத் தவிர்க்கலாம்.

*அதிகப்படியான உதிரப்போக்கு, நாற்றம் போன்றவை ஏற்படும்போது மருத்துவரை ஆலோசிக்க வேண்டும்.

*பெண்ணுறுப்பைச் சுத்தம் செய்யும்போது முன்பிருந்து பின்புறமாகச் சுத்தம் செய்ய வேண்டும். யூ.டி.ஐ., (சிறுநீர்ப் பாதை தொற்று) மற்றும் இதர தொற்றுகளில் இருந்து பெண்களுக்குப் பாதுகாப்பை உறுதி செய்யும் பழக்கமாக இது பரிந்துரை செய்யப்படுகிறது.

*டேம்பான்கள் (Tampon) போன்றவற்றைப் பயன்படுத்தும்போது சிலருக்கு நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது. ஒருவேளை நோய்த் தொற்று, எரிச்சல், துர்நாற்றம் போன்றவற்றை உணர்ந்தால் சிறிதும் யோசிக்காமல் உடனடியாக மகப்பேறு மருத்துவரை அணுகுவது நல்லது.

 

👧பாதுகாப்பான மாதவிடாய் பொருட்களின்றி அவதியுறும் பெண்கள்

உலகம் முழுவதும் தோராயமாக, 500 மில்லியன் பெண்கள், மாதவிடாய் காலத்தில் பயன்படுத்துவதற்குத் தேவையான, பாதுகாப்பான, தூய்மையான பொருட்களின்றி அவதிப்படுவதாக 2022ஆம் ஆண்டில் வெளியான உலக வங்கியின் அறிக்கை கூறுகிறது.

"இன்று மாதவிடாய் நேரத்தில் பயன்படுத்துவதற்குத் தேவையான பொருட்களின் பற்றாக்குறை மட்டுமே பெண்கள் சந்திக்கும் பிரச்னையல்ல. மாதவிடாய் என்பது பெண்களின் வாழ்வில் நிகழும் ஓர் இயல்பான, ஆரோக்கியமான நிகழ்வுதான் என்றாலும்கூட பல்வேறு சமூகங்களில் மாதவிடாய் காலங்களில் பெண்கள் பாகுபாட்டை எதிர்கொள்கின்றனர். பல கலாசாரங்களில் பேசக்கூடாத ஒன்றாகவும் அது இருக்கிறது" என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

இதனால் மாதவிடாய் தொடர்பான தகவல்கள் அவர்களுக்குக் கிடைக்காமல் போய்விடுகிறது. இதன் காரணமாக, ஆரோக்கியமற்ற, சுகாதாரமற்ற மாதவிடாய் கால நடைமுறைகளைப் பெண்கள் பின்பற்ற நேரிடுகிறது. மாதவிடாய் குறித்து நிலவி வரும் எதிர்மறையான கருத்துகள் பெண்களை அவமானப்படுத்த, கேலிக்கு உள்ளாக்க மற்றும் பாலினம் சார்ந்த வன்முறைகளுக்கு வழிவகை செய்வதாகவும் உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.

அதோடு, "இதன் காரணமாகப் பல தலைமுறைகளாக, ஆரோக்கியமற்ற மாதவிடாய் செயல்பாடுகள் காரணமாக சமூக மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்து, அவர்களின் கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு, மனித வளர்ச்சி ஆகியவற்றைக் கடுமையாக பாதிக்கிறது," என்றும் உலக வங்கியின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

நன்றி:நித்யா பாண்டியன் //பிபிசி தமிழ்