கடைசிவாரம் வெளியான திரைப்படங்கள் எப்படி?

  


'கணம்விமர்சனம்  (Cinema Tamil Movie 'kanam' Review)

ஸ்ரீ கார்த்திக் இயக்கத்தில் சர்வானந்த், ரித்து வர்மா, அமலா, சதீஷ், நாசர், ரவி ராகவேந்திரா, எம் எஸ் பாஸ்கர், வையாபுரி எனப்பலர் நடித்திருக்கும் திரைப்படம்.  எஸ். ஆர். பிரபு தயாரிக்க, ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார்.

 

சர்வானந்த் ரமேஷ் திலக் சதீஷ் மூவரும்நண்பர்கள். தன் சிறு வயதிலேயே அம்மா அமலாவை இழந்தவர் சர்வானந்த். தன் பள்ளி நாட்களில் தன் தோழி காதலை புரிந்து கொள்ளாதவர் சதீஷ். சிறு வயதில் படிப்பு மீது நாட்டம் இல்லாதவர் ரமேஷ் திலக்.இந்த நிலையில் இவர்களுக்கு விஞ்ஞானி நாசர் மூலம் வாழ்க்கையில் 2வது வாய்ப்பு கிடைக்கிறது.எனவே டைம் ட்ராவல் செய்து 20 வருடங்களுக்கு 1998க்கு செல்கின்றனர்.அம்மாவை சந்திக்கிறார் சர்வா. தன் பழைய காதலியை சந்திக்கிறார் சதீஷ். நன்றாக படித்து முன்னேற நினைக்கிறார் திலக்இவர்களின் லட்சிய கனவு நிறைவேறியதா? என்பதை படத்தின் மீதிக் கதை.

மனசை நிச்சயம் பதம் பார்க்கும்.[3.5/5]

 

'கேப்டன்'-  விமர்சனம் (Cinema 'captain' Tamil Movie  ' Review)

சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் ஆர்யா, ஐஸ்வர்யா லட்சுமி, சிம்ரன் எனப்  பலர் நடித்திருக்கும் திரைப்படம்.  நடிகர் ஆர்யா தனது 'தி ஷோ பீபில்' என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் டி இமான் இசையமைத்துள்ளார்.

 

 ஏலியன்ஸ் போன்ற உயிரினங்களை கொண்டு ஒரு அறிவியல் புனைவு சார்ந்த படமாக திரில்லர் & அதிரடி திரைக்கதையில் உருவாகி வெளியானது.

எப்படிப்பட்ட எதிரியாக இருந்தாலும் கேப்டன் வெற்றிச்செல்வன் (ஆர்யா) டீம் அதை முறியடித்து விடும். அப்படிப்பட்ட டீமுக்கு செக்டர் 42ல் என்ன நடக்கிறது என்பதை கண்டு பிடிக்கும் டாஸ்க் கொடுக்கப்படுகிறது. ஏனென்றால், அங்கே போனவர்கள் யாரும் திரும்பி வரவில்லை என்பது தான். அப்படி அங்கு என்ன இருக்கிறது என்பதை கண்டறிய செல்லும் ஆர்யாவின் டீம் minotaur எனும் ஒரு வகையான பிரேட்டரிடம் சிக்கிய நிலையில் தப்பித்ததா? இல்லையா? அந்த உயிரினம் அங்கு வர என்ன காரணம் என்பது தான் கேப்டன் படத்தின் கதை.

அழுத்தமில்லாத திரைக்கதை[2.5/5]


'நட்சத்திரம் நகர்கிறது' - விமர்சனம் (Cinema Tamil Movie ‘Natchathiram Nagargirathu’ Review)

 பா ரஞ்சித் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம், கலையரசன், துஷார விஜயன் எனப்  பலர்   நடித்த இப்படத்தினை  விக்னேஷ் சுந்தரேசன் மற்றும் இப்படத்தின் பா ரஞ்சித் இணைந்து தயாரிக்க, தென்மா இசையமைத்துள்ளார்.

புதுச்சேரியில் உள்ள ஒரு நாடகக் குழு தங்களது புதிய நாடகத்தை மேடையேற்றுவதற்காகத் தயாராகிறது. அதற்காக பல பகுதிகளிலிருந்தும் கலைஞர்கள் வருகிறார்கள். அவர்களில் விதவிதமான காதல் ஜோடிகளும் இருக்கிறார்கள். நெருக்கமாகக் காதலித்து பிரிந்த காதல் ஜோடி, ஆண் - திருநங்கை காதல் ஜோடி, ஆண் - ஆண் காதல் ஜோடி, பெண் - பெண் காதல் ஜோடி, திடீரென முறைக்கும் காதல் ஜோடி அவர்களோடு மற்ற கலைஞர்களின் காதல் அனுபவம் என இப்படியான ஜோடிகளை வைத்து ஒரு காதல் கதையை நாடகமாக அரங்கேற்ற பயிற்சி எடுக்கிறார்கள். அவர்களுக்குள் நடக்கும் காதலும், காதல் நாடகமும் தான் இந்த 'நட்சத்திரம் நகர்கிறது'.

சாமானிய ரசிகர்களைச் சென்று சேருமா என்பது சந்தேகம்தான்.[2.75]

-தொகுப்பு:செ.மனுவேந்தன்


0 comments:

Post a Comment