இராவணன் நல்லவனா?.கேள்விகளின் முடிவாக!

எவ்வளவு வருடங்கள் ராவணன் அரசாண்டான், அவன் ஆட்சியில் மக்கள் துன்பம் அனுபவித்தார்களா? வால்மீகி சொல்லவில்லை. மற்றவர்களும் சொல்லவில்லை. தேவர்கள் துன்பம் இராவணனால் அனுபவித்தார்கள் என்றால் தேவர்கள் பரம்பரை இப்போது எங்கே? அப்படி அவர்கள் இருந்தால் அவர்களுக்கும் மனிதர்களுக்கும் இடையே இருந்த தொடர்பு ஏன் இப்போது இல்லை?

 

ராவணன் உண்மையாய் இருந்தான் (அதுவும் சீதையைக் கடத்தி ராமனுடன் மோதிய ராவணன்) 

 

ஆனால் ராவணன் ஆட்சியில் அவன் நாட்டுப் பெண்கள் சுதந்திரமாய் உலவினர். ராவணன் சிறுவர்களுடன் போரிடவில்லை.. என ராவணனுக்குண்டான பல நல்ல குணங்கள் மட்டுமே படித்து கேட்டு அறிந்திருக்கிறேன்..

 

ராமாயண காலத்திற்கான காலம் என்ன? கி.மு 5000 என்கின்றன சில இணையதளங்கள்.. ஆனால் அதிலெல்லாம் உறுதியான ஆதாரங்கள் எனக்குக் கிடைக்கவில்லை.

 

பாம்பனில் உள்ள மணல்திட்டு ராமாயணப் பாலம் என்று பலர் சொல்லுகின்றனர்.. ஆனால் அங்குள்ள பாறைகளையோ மண்ணையோ யாரும் ஆய்வு செய்ததாகத் தெரியவில்லை.. இலங்கை என்பது இலங்கையே இல்லை.. கோதாவரி நதிக்கு மத்தியிலிருந்த ஒரு தீவு என்போரும் உள்ளனர்.

 

ராவணன் சீதையைக் கடத்தியது மோகத்தால் அல்ல என்று சிந்திக்கும் பொழுது கதையின் பல கோணல்கள் சீராகின்றன. சீதை 6 மாதங்களுக்கு மேல் அவன் கைப்பிடியில் இருந்திருக்கிறாள்.. ராவணனுக்கு மோகம் என்ற ஒன்று அவள் மேலிருந்திருந்தால் நிம்மதியாய் உறங்கியிருக்க முடியாது.. என்னை மணந்துகொள் என்று சொல்லி இருக்க மாட்டான்.. தன் குலப் பெண்களுக்கு பணி செய்ய வைக்காது தனியே சிறைவைத்ததன் மூலம் அவன் சீதைக்கு மரியாதை அளித்தான் என்று புரிந்து கொள்ள முடியும்.. அவளின் மன உறுதியை குலைக்கும் முயற்சியில் மட்டுமே ஈடுபடுகிறான்.. சீதையும் ஏறத்தாழ தன் மன உறுதியை இழந்து விடுகிறாள்.. அனுமனிடம் அவள் காலக்கெடு கொடுப்பதில் இதை அறியலாம். தன் தம்பி மகளான திரிசடையை சீதையுடன் தங்க வைத்ததன் மூலம் சீதைக்கு மதிப்பளிக்கிறான் ராவணன்.

 

இதையெல்லாம் பார்க்கும் பொழுது ராம லட்சுமணர்கள் தன் தங்கையை அவமானப்படுத்தியதை பழிவாங்கும் பொருட்டே சீதையை கடத்தி இருக்கலாம்.. எல்லா சொந்தங்களையும் இழந்த பின்னும் சீதைக் கதையை முடித்து விடலாம்.. அப்புறம் போருக்குப் போகலாம் என்ற கெட்ட எண்ணம் அவனுக்கு எழவில்லை.. சீதையை ஆசையோடு தொடவேண்டாம்..அல்லது அடுத்தவனைக்கொண்டு சீதையை தொட்டிருக்கலாம். ஆத்திரத்தில் கொன்றிருக்கலாமே.. செய்யவில்லை ராவணன்.. ஏன் தெரியுமா? அவன் நல்லவன்

நம் கேள்வி பதில்களை ஆராயும் பட்சத்தில் ஒரே ஒரு கேள்வி நான் கேட்கிறேனே!!!

நான் கேட்ட கேள்விகளிலெல்லாம் நீங்கள் ராவணனை ஒரு நல்லவனாகவே காட்டுமாறு சுவாரசியமாகவும் திறமையாகவும் பதிலளித்தீர்கள்...... நான் கேட்டவை வால்மீகி (அதாவது கதை ஆசிரியர்) எழுதியவை மட்டுமே.......

ஆயிரம் தவறுகள் இருக்கட்டும்; அந்த நாட்டுக் கலாச்சாரமோ அல்லது அரசர்களின் மேலான செயலோ, மோகமோ கோபமோ அல்லது எதுவாகத்தான் இருக்கட்டும்.... ஒரு பெண்ணைக் அதுவும் கற்புக்கரசியை அதுவும் ஓர் உன்னத தலைவனின் (?) மனைவியை கடத்திக் கொண்டு வரும் ஒருவன் நல்லவன் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் அப்படித்தானே?

இதற்காக இராமன் நல்லவனா கெட்டவனா அல்லது அவன் தவறு செய்தானே! மானை துரத்தினானே மங்கை மூக்கை அறுத்தானே என்று ஆயிரம் காரணம் சொல்லவேண்டாம்... ஏனெனில் நான் ராமனும் கெட்டவன் தான் என்று முன்னமே குறிப்பிட்டுள்ளேன்....

அப்படியிருந்தும் இராவணன் நல்லவன்தான் என்றூ நீங்கள் அடித்துக் கூறும் பட்சத்தில் நான் ஒத்துக்கொள்கிறேன்.. ஓர் கடத்தல்காரனை நல்லவனாக.... ஏனெனில் போருக்காக  அடுத்தநாட்டு பெண்களைக் கவர்ந்து மன்னர்கள் போர்செய்வது அக்காலத்தில் சர்வ சாதாரணமான ஒரு முறையாகும்.


அதாவது ராவணன் சீதையைக் கடத்திய [தற்காலத்தில் அநாகரிகமாக கருதக்கூடிய]  ஒரே ஒரு செயல்கூட இராவணன்மேல் இருந்த ஒரு தவறினையும் துடைத்துவிடுகிறது. சரிதானே!!!

 

-தாமரை செல்வன்

------------------------------------முடிந்தது.

4 comments:

  1. கந்தையா தில்லைவிநாயகலிங்கம்Thursday, August 15, 2013

    எங்கள் பெருமைக்குரிய முப்பாட்டன் இராவண்ணன் போல யாரும் இல்லை என்றே சொல்லவேண்டும் . அவன் வாழ்ந்த காலத்தில் அவன் சிறப்பை சொல்லும் ஒரு பதிவை சினிமாவில் தந்துள்ளார்கள் . இப்பாடலில் எங்கள் தமிழ் உலகம் எப்படி அன்றும் செழிப்புற வாழ்ந்துள்ள உண்மை தெரிகின்றது.

    http://youtu.be/7AppYkc5vL0

    ReplyDelete
  2. வீணைக் கொடியுடைய வேந்தனே

    எங்கள் பெருமைக்குரிய,எம் மூதையார் ,இராவண்ணன் போல யாரும் இல்லை என்றே சொல்லவேண்டும் . அந்த மாபெரும் வித்தகனை வீழ்த்த எதிரிகள் செய்த தில்லு முல்லுகள் ஆயிரம். அவன் வாழ்ந்த காலத்தில் அவன் சிறப்பை சொல்லும் ஒரு பதிவை சினிமாவில் தந்துள்ளார்கள் . இப்பாடலில் எங்கள் தமிழ் உலகம் எப்படி அன்றும் செழிப்புற வாழ்ந்துள்ளது தெரிகிறது . இன்றும் நாம் பயங்கரவாதிகளாக உலக சதிகார கூட்டத்தால் வஞ்சகமாக கூறபட்டாலும் உண்மை எமக்கல்லவா தெரிகின்றது!!!.to watch: 
    https://www.youtube.com/
    paste:வீணைக் கொடியுடைய வேந்தனே Veenai Kodiyudaiya

    ReplyDelete
  3. ராவனன்சீதையை தீண்ட வில்லை...காரணம் நளகூபரன் என்னும் தேவனின் மனைவியை கற்பழித்தான்...அப்போது நள கூபரன் அவனை சபித்தான்...உன்னை விரும்பாத பெண்ணை நீ தொட்டால் பலாத்காரம் செய்தால் உன் தலைவெடித்து விடும் என்று......கடைசியிலே யுத்தகாண்டத்திலே இதை ராவணனே சொல்லுகிறான்...ஒரு அரக்கன் ராவணனிடம் சொல்லுகிறான் பேசாமல் சீதையை பலாத்காரம் செய்து விடுங்களேன் என்று அப்போதுதான் ராவணன் இதை சொல்லுகிறான்..

    ReplyDelete
    Replies
    1. அருமையான விளக்கம் உங்களுடையது....!

      Delete