அடியே! நீ எங்கே?


நீ பேசிய  காதல் மொழி 
பொய்யாகி  போனதால்
 என் வாழ்க்கையில்  இன்று முதல்  
இருள் குடி கொள்ளுமோ என 
என்  மனமும் ஏங்குதடி!

நீ தானே  உன்  புன்னைகையைச்  சிந்தி
  உன் காதல் பயணத்தில்
எனையும்   அழைத்து போனாய்!

 எனக்காக  துடித்த என் 
இதய துடிப்பையும்
உன் காதல் பயணத்தில்
 உனக்காக துடிக்க வைத்தாய்-இதனால்
என் இலட்சியம் முழுவதையும்
 உன் காதலில்  அடகு வைத்தேனடி! 

நீயோ எவ்வித உணர்வும் இன்றி
என்னை காதலில் சுழற வைத்து விட்டு
இவர் யார்? என்று   அசைவை காட்டி
கடந்து  போனாயடி!
இதனால்  காதலும் பகை ஆகி
 என்னை வாட்டி கொல்லுதடி -நீ 
எங்கு சென்றாய்யடி?
                                                                            அகிலன்,தமிழன் 

0 comments:

Post a Comment