சூழ்ச்சிகளால், உலக அழிவு ஆரம்பமாகிவிட்டதா ?


அமெரிக்காவில் ஓபாமா என்னும் அரசியல் தலைவனுக்குஅடுத்ததாக கிளாரி கிளிண்டன் ஜனாதிபதியாக வருவார் என்று உலகம் எதிர்பார்த்திருந்தது என்பதற்கு மேலாக, உலக மக்கள் அவரைபுதிய ஜனாதிபதியாக வரவேற்பதற்கு காத்திருந்தார்கள் என்பதே யதார்த்தம். கிளாரி அமெரிக்காவின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால், இந்தியாவிற்கு இந்திரா காந்தி அம்மையார் பிரதமராக கிடைத்த மகிழ்ச்சி எங்களுக்கு இருந்திருக்கும் என்று பல இந்தியப் பெண்மணிகள் ஊடகங்களுக்கு வழங்கிய கருத்துப் பரிமாற்றத்தை நாம் செவி மடுத்திருந்தோம்.

ஆனால் யாருமே விரும்பாத ட்ரம்ப் அமெரிக்காவின் ஜனாதிபதியாக கபடம் மறறும் சூழ்ச்சிகளால் கொண்டு வரப்பட்டுள்ளார்.

அவர் அமெரிக்காவின் ஜனாதிபதியாக பதவியேற்றபின்னர் எடுத்த பல முட்டாள்தனமான அரசியல் நடவடிக்கைகள், அமெரிக்காவில் இலட்சக் கணக்கான மக்களை ஆவேசத்துடன் பேசவைத்திருக்கின்றது. முன்னாள் ஜனாதிபதி ஓபாமா கூட வாய் திறக்கின்ற அளவிற்கு அங்கு ட்ரம்ப் அவர்களின் அவசரப் புத்தி தடுமாறிய வண்ணம் உள்ளது. இதனால் இதுவரை காலமும் அமெரிக்காவில் இடம்பெறாக அளவிற்கு அரசியல் அதிகார பீடம் அசிங்கங்கள் இடம்பெறும் மேடையாக மாறிவிட்டது.

இதே போன்று ஈழத்தமிழ் மக்களாகிய நாம்தாய்த் தமிழகம்என்று அழைக்கின்ற தமிழ்நாட்டிலும் கபடம் சூழ்ச்சி இரண்டுமே அரங்கத்தில் ஏறி நின்று தாண்டவமாடுகின்றன. எதிர்பாராத விடயங்கள் அவசரமாக நகர்த்தப்படுகின்றன. தமிழ் நாட்டின் இந்த அவசர நடவடிக்கைகளுக்கு மோடி அரசின் மறைமுகமான ஆதரவு இருக்கிறதா? என்று எண்ணத் தோன்றுகின்றது.

இந்த ஜல்லிக்கட்டு என்னும் கலாச்சாரப் பிரச்சனைக்கு இலட்சக் கணக்காய் குவிந்த மக்கள் தற்போது சசிகலா என்னும் சராசரி தகைமை இல்லாத பெண் தமிழ்நாட்டின் முதல்வராக பதவியேற்கவுள்ள அறிவிப்பைக் கேட்டும் வாயடைத்துப் போய் அமைதியாக உள்ளார்களே, இது எப்படி சாத்தியமாகின்றது?.. கோடிக்கணக்கான ரூபாய்களை கொள்ளையடித்துப் பழகிப்போன பல அமைச்சர்கள் சசிகலா என்னும் முதலமைச்சரின் பதவிக்காலத்தில்சுருட்டிக் கொள்ளக் கூடியவற்றை கறந்து விடுவோம் என்ற எண்ணத்தில் அவருக்கு பச்சைக் கொடி காட்டியுள்ளார்கள்.

உலகத் தமிழர்கள் கூனிக் குறுகிப் போயுள்ள இந்ததருணம் எப்போது இல்லாமல் போகும்? தமிழ் நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் இலட்சக்கணக்கில் உள்ள கற்றறிந்த பெரியோர்கள் விஞ்ஞானிகள், நேர்மையான அரசியல்வாதிகள், கல்விமான்கள், நிர்வாக அதிகாரிகள், தொழிலதிபர்கள், புத்திஜீவிகள்……. இவர்கள் எல்லாம் என்ன செய்து கொண்டிருக்கின்றார்கள்? இதற்கு மேலாக, இந்தியாவின் மாநில ஆட்சி தொடர்பான சட்டங்கள் என்ன வாயிற்று? அநியாயத்திற்கு எதிராக வீதிக்கு வந்து போராட்டங்களை நடத்த தகுந்த தலைவர் அங்கு இல்லையா? இவைதான தற்போதைய நிலையில் நாம் கேட்கும் கேள்விகளாகின்றன.
                                                                                              நன்றி:உதயன் 

0 comments:

Post a Comment