வினோதமான உலகம்

 எலிகளையும் உண்ணலாமா?


வடகிழக்கு இந்தியாவின் மலைகளில் உள்ள ஒரு தொலைதூர கிராமத்தில், எலியின் வயிறு, குடல், கல்லீரல், விதைப்பை, வால் மற்றும் கால்களை உப்பு, மிளகாய், இஞ்சி சேர்த்து கொதிக்க வைத்து தயாரிக்கப்படும் -'போலே பலாக் உயிங்' -கறி - இந்த பழங்குடியின மக்களின் விருப்பமான உணவு.அதனால் அங்கு  கோழி அல்லது காய்கறிகளை விட எலிகள் விலை அதிகம். எனவே பரிசளிப்பிலும், கல்யாணத்திற்கான சீதனத்திலும் எலிகள் வழங்கப்படுகின்றன.

சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு வரை, இதே போன்ற பொதுவான வீட்டு எலியான 'க்யோரே', நியூசிலாந்தில் பலரால் உண்ணப்பட்டது.

 சீனாவில் 618-907 ஆண்டு காலத்தில்   எலிகள் உண்ணப்பட்டன, மேலும் அவை 'வீட்டு மான்' என்று அன்று அழைக்கப்பட்டன.


சந்திரனில்  மனிதர் குடியேற்றம் தயார்!

சந்திரனுக்கு மனிதனை அனுப்பும் ஆர்ட்டெமிஸ்-1 திட்டத்தின் ஓரியா விண்கலம் நவம்பர் 16ஆம் தேதி நாசாவால் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

சந்திரனைச் சுற்றி 26 நாள் பயணத்திற்குப் பிறகு, ஓரியான் விண்கலம் பூமிக்குத் திரும்பியுள்ளது.

நாசா ஓரியனுடன் மிகவும் சிக்கலான பயணங்களைத் திட்டமிடுகிறது. 2024இன் பிற்பகுதியில் அந்தப் பயணங்கள் தொடங்கும். மேலும், 2025 அல்லது 2026இல், மனிதர்களை மீண்டும் சந்திர மேற்பரப்பிற்குக் கொண்டு செல்லும் முயற்சியும் இதில் அடங்கும்.

நாசாவின் இந்தப் புதிய திட்டத்திற்கு கிரேக்க புராணங்களில் அப்பல்லோவின் சகோதரியாக அறியப்படும் ஆர்ட்டெமிஸ் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இதற்கெல்லாம் பல லட்ஷம் பில்லியன் டொலர்களை செலவழித்து எதனை சாதிக்கப் போகிறார்கள் என்பதுதான் புரியவில்லை.

ஆக்கம்:செ மனுவேந்தன் 

0 comments:

Post a Comment