இவ்வாரம் வெளிவந்த திரைப்படங்கள்

 


வி 3- விமர்சனம்  (Cinema Tamil Movie 'V 3 ' Review)

அமுதவாணன் இயக்கத்தில் வரலக்ஷ்மி சரத்குமார் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்க, இப்படத்திற்கு ஆலென் செபாஸ்டின் இசையமைத்துள்ளார்.

 

பாலியல் வன்கொடுமையில் பலியான, ஆடுகளம் நரேனின் மகள் பாவனாவிற்கான விசாரணையில் பழி சுமத்தப்பட்டு 5 அப்பாவி இளைஞர்கள் பொலிஸாரினால் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். மக்களின் எதிர்ப்பால், இதனை விசாரிக்க மனித உரிமை கமிஷன் சார்பில்   அதிகாரியாக வரலட்சுமி சரத்குமார் நியமிக்கப்படுகிறார். அவரது விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின்றன. அது என்ன என்பதை விறுவிறுப்பான திரைக்கதையில் சொல்லி உள்ளனர்.

 

பெண்களுக்கு நீதி என பல முக்கிய பிரச்சனைகளை கையில் எடுத்து சாட்டையடி [3/5]

 

👀👀👀

 

டியர் டெத் - விமர்சனம்  (Cinema Tamil Movie '  Dear Death ' Review)

ஐஸ்வர்யா தியாகராஜன், சதீஷ் நாகராஜன் தயாரித்திருக்கின்றனர். இசை நவீன் அண்ணாமலை,  திரைக்கதையை ஸ்ரீதர் வெங்கடேசன் எழுத படத்தை இயக்கியுள்ளார் பிரேம்குமார். சந்தோஷ் பிரதாப் நாயகனாக நடிக்கும் திரில்லர் திகில் திரைப்படம்.

 

கதையின் நாயகன் சந்தோஷ் இந்த கதைக்களத்தில்  வந்து நான்கு கதைகளை சொல்கிறார்.

முதலாவது கதையாக: கொரோனாவால் தனது மனைவியை இழந்தவரின் கதையை சொல்கிறார்.

 

இரண்டாவது கதையாக: வயதான ஒருவரின் அம்மா உடல்நலக்குறைவால் இறந்துவிடுகிறார் அவரின் கதையை சொல்கிறார்.

 

மூன்றாவது கதையாக: திருமணமாகி 5 வருடங்களாக குழந்தை இல்லாத தம்பதியினருக்கு குழந்தை பிறக்கிறது ஆனால் எதிர்பாராத விதமாக அந்த குழந்தை ஒரு சிறிய விஷயத்தினால் இறந்து விடுகிறது அந்த கதையை சொல்கிறார்.

 

நான்காவது கதையாக: நான்கு நண்பர்கள் இருக்கின்றனர் அவர்களுள் ஒருவர் கிட்னி பாதிப்பால் இறந்துவிடுகிறார் அவரின் கதையையும் சொல்கிறார்.

 

இந்த நான்கு கதைகளின் முடிவில் சந்தோஷ் நமக்கு என்ன சொல்ல வருகிறார் என்பதுதான் படத்தின் மீதி கதை…

 

டியர் டெத்’ நாம் பார்க்காத விஷயம் அல்ல.[2.5/5]

 

👀👀👀

 

'செம்பி' விமர்சனம்  (Cinema Tamil Movie '  Sembi  ' Review)

பிரபுசாலமன் இயக்கத்தில் கோவை சரளாவுடன் அஸ்வின், நாஞ்சில் சம்பத், தம்பி ராமையா, சிறுமி நிலா எனப் பலர் நடித்து வெளிவந்த படம்

 

சிறுமி செம்பிக்கு நடக்கும் பாலியல் கொடுமைச்  சம்பவத்தால், தாய் கோவை சரளாவின் கனவு சிதைந்து போகிறது. பாதிக்கப்பட்ட அவர்களுக்கு துணையாக நிற்கவேண்டிய காவல்துறை அவர்களையே குற்றவாளியாக்கி துரத்த, மறுபக்கம் அரசியல்வாதிகள் கொலை செய்ய முயற்சிக்கிறார்கள். அவர்களிடம் இருந்து கோவை சரளாவும், செம்பியும் தப்பித்தார்களா? இல்லையா? செம்பிக்கு நடந்த கொடுமைக்கு நீதி கிடைத்ததா? இல்லையா? என்பதை கலங்கும்படி சொல்வது தான் திரைக் கதை.----பார்க்கலாம் .[4/5]

👀-தொகுப்பு:செ.மனுவேந்தன்


0 comments:

Post a Comment