கடந்த வாரம் வெளியான திரைப்படங்கள்

   


''கனெக்ட்''  விமர்சனம்  (Cinema Tamil Movie 'Connect' Review)

அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நயன்தாரா முன்னணி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திகில் - திரில்லர் திரைப்படம்.  விக்னேஷ் சிவன் தனது "ரௌடி பிக்சர்ஸ்" தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்கபிருத்வி சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.

 தந்தையை இழந்து வாடும் நயன்தாராவின் மகள் ஹனீயா நஃபீஸ் எடுக்கும் ஒரு விபரீத முயற்சியால் வீட்டுக்குள் அழையா விருந்தாளியாக வருகிறது பேய். கொரோணா நிலையில், வெளியுலக உதவியைப் பெற முடியா சூழலில், நயன்தாரா தன் மகளை எப்படிக் காப்பாற்றினார் என்பதே கதை.

ஒரு முறை பார்த்து திகில் அடையலாம்![3/5]

 

லத்தி (லத்தி சார்ஜ்) விமர்சனம்  (Cinema Tamil Movie 'LATHTHI CHARGE ' Review)

வினோத் குமார் இயக்கத்தில் விஷால், சுனைனா, பிரபு எனப்பலர் நடித்திருக்கும் தமிழ் நடிகர்களான ரமணா மற்றும் நந்தா இணைந்து 'ராணா புரொடக்ஷன்' என்ற நிறுவனத்தின் மூலம் தயாரிக்கயுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

ஒரு சாதாரண கான்ஸ்டபிள் தன்னையும், தன் குடும்பத்தையும் அதிகாரம் படைத்த சிலரிடம் இருந்து எப்படி காப்பாற்றுகிறார், என்பதே படத்தின் கதைக்கரு.

சுவாரஸ்யம் இல்லா திரைக்கதை[2.5/5]


தொகுப்பு:மனுவேந்தன் செல்லத்துரை


0 comments:

Post a Comment