விஞ்ஞானத்தின் கண்டுபிடிப்புகள் நன்மையையும் தீமையும் கொடுக்கும் வல்லமை உடையவை.அவற்றில் நன்மைகள் அதிகம் என நிரூபிக்கபட்டவையே மக்கள் தேவைக்கு அனுமதிக்கப்படுவன, அவற்றில் இன்று பல வளர்ந்துவிட்ட நாடுகளிலும் பரவலாக பாவனையில் உள்ள காற்றாலை பற்றிப் பார்ப்போம்.
🌬️
காற்றாலை என்றால் என்ன?
காற்றின் சக்தியை மின்சாரமாக மாற்றும் இயந்திரம் தான்
காற்றாலை (Wind Turbine).
காற்று
அடிக்கும் போது
சக்கரம் (blade) சுழலும். அந்த
சுழற்சியின் சக்தியை ஜெனரேட்டர் (Generator) மின்சாரமாக மாற்றுகிறது.
✅
காற்றாலை அமைப்பதின் நன்மைகள் (Advantages)
- புதுப்பிக்கத்தக்க
ஆற்றல்
- காற்று என்பது இயற்கையில்
என்றும் இருக்கும் சக்தி.
- எரிபொருள்
(Petrol, Diesel, Coal) போல குறைந்து போகாது.
- சூழல்
நட்பு (Eco-friendly)
- காற்றாலை
மின்சாரம் உற்பத்தி செய்யும் போது கார்பன் டை ஆக்சைடு, புகை, காற்று மாசு எதுவும் ஏற்படாது.
- அதனால் காலநிலை
மாற்றத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
- செலவு
குறைவு
- ஆரம்பத்தில்
கட்டும் போது செலவு அதிகமாக இருந்தாலும், பின்னர் பராமரிப்பு செலவு மிகக் குறைவு.
- இலவசமான
காற்றையே பயன்படுத்துவதால் நீண்ட காலத்தில் மிகவும் லாபகரம்.
- வேலை
வாய்ப்புகள்
- காற்றாலை
அமைக்கும் பணியாளர்கள், பராமரிப்பு குழு, பொறியாளர்கள் என பல வேலை வாய்ப்புகள் உருவாகின்றன.
- சிறிய
அளவிலும் பெரிய அளவிலும் சாத்தியம்
- ஒரு வீடு, பண்ணை அளவிலும்
சிறிய காற்றாலை அமைக்கலாம்.
- ஒரு பெரிய மின் நிலையமாகவும்
ஆயிரக்கணக்கில் காற்றாலைகள் அமைக்கலாம்.
0000000000000
❌
காற்றாலை அமைப்பதின் தீமைகள் (Disadvantages)
1.
பறவைகள் மற்றும் விலங்குகளுக்கு அபாயம்
o சுழலும் சக்கரத்தில் பறவைகள் மோதிக் கொல்லப்பட வாய்ப்பு அதிகம்.
தீர்வு - குறிப்பாக பறவைகள் அதிகம் பறக்கும் இடங்களில் (migration path)
அமைக்கக் கூடாது.
2.
சத்த மாசு (Noise Pollution)
o காற்றாலை சுழலும் போது "வீஷ் வீஷ்" எனும் சத்தம் உண்டாகும்.
தீர்வு: வாழும் மக்கள் வீடுகளுக்கு தூரமாக அமைப்பதன் மூலம் அது தொந்தரவு தொந்தரவு செய்வதை தவிர்க்கலாம்.
3.
இயற்கை அழகுக்கு பாதிப்பு (Visual
Pollution)
o மலை, கடற்கரை, சுற்றுலா இடங்களில் பெரிய காற்றாலைகள் இருந்தால் இயற்கை அழகு குறைந்து விடும்.
தீர்வு: சுற்றுலாத்துறை சாராத இடங்களை தெரிவு செய்யலாம்.
4.
நிலம் அதிகம் தேவை
o ஒரு காற்றாலைக்கு 1–2 ஏக்கர் நிலம் தேவை.
o அதனால் விவசாய நிலம், பசுமை நிலம் குறையக்கூடும்.
தீர்வு: விவசாய நிலங்களை தவித்துக்கொள்ளலாம்.
5.
காற்று இல்லாத நாட்களில் பயன் இல்லை
o காற்று வீசாத போது மின்சாரம் உற்பத்தி ஆகாது.
தீர்வு: அதனால் சோலார்,
ஹைட்ரோ,
தாப
மின்
போன்ற வேறு மின்சார முறைகளுடன் சேர்த்து பயன்படுத்தலாம்.
6. 🎯
முடிவுரை
7.
காற்றாலை
அமைப்பது நம் எதிர்காலத்திற்கு மிகவும் பயனுள்ள
சுத்தமான
ஆற்றல்
தீர்வு.
ஆனால் சரியான
இடத்தை
தேர்வு
செய்து,
பறவைகள்
பறக்கும்
வழிகளைத்
தவிர்த்து,
சுற்றுச்சூழல்
பாதிப்பு
குறையும்
வகையில்
அமைக்க வேண்டும். அப்படிச் செய்தால் நன்மைகள் அதிகமாகவும் தீமைகள் குறைவாகவும் இருக்கும்.
பெரும் தொல்லைகளையும், சமுதாய சீரழிவுகளை தந்துகொண்டிருக்கும் தொலைக்காட்சி, கைபேசி, சமூக வலைத்தளங்கள் எல்லாவற்றையும் சந்தோசத்துடன் அனுபவித்துக்கொண்டிருக்கும் நாம் பெரும் பலனை கொடுக்கக்கூடிய காற்றாலை திட்டத்தினை இலங்கையில் ஆதரிப்பதில் ஏன் இந்த தயக்கம் மக்களுக்கு என்று புரியவில்லை.
தொகுப்பு:செ.மனுவேந்தன்
குமரியில் முப்பந்தல் என்ற ஊரில் (நெல்லை குமரி சேருமிடம் , கற்றாலை இரு மாவட்டத்திலும் உள்ளது ) முதன் முதலில் தமிழ் நாட்டில் மிக பெரிய அளவில் 1986 முதலே பல நுற்றுக்கணக்கான கற்றாலைகள் அமைக்கப்பட்டன. இப்போது ஆயிரக்கணக்கானவை சுமார் 1500 மெகா வாட்ஸ் மின்சாரம் உற்பத்தி செய்யும் அளவுக்கு உள்ளது. இந்தியாவில் இது தான் அதிகம் மின்சாரம் உற்பத்தி ஆகும் காற்றாலைகள் அமைக்க பட்ட இடம் . இந்தியா முழுதும் பல தொழிற்சாலைகள் இங்கு காற்றாலை மூலம் மின் உற்பத்தி செய்து இங்கு மின் வாரியதிற்கு மின் யூனிட் அளவில் அளித்து தமது இடத்தில் 3 சதம் கழித்து மீதி யூனிட்கள் வாங்கி கொள்கிறார்கள். இந்த நில பரப்பு மேற்கு தொடர்ச்சி மலை தொடரின் இறுதி தெற்கு பகுதியின் மகேந்திரகிரியின் தென் கிழக்கில் ஆரல்வாய்மொழி கணவாயில் ( Aramboly Pass ) உள்ளது. இங்கு பல வருடங்களுக்கு முன்னரே காற்றாலைகள் மிகுந்து கிழக்கு திசையில் வெகு தூரம் கூடங்குளம் வரை சென்று விட்டது. கணவாயில் இருப்பதால் ஆனி, ஆடி ஆவணி மாதங்கள் உள்பட வருடத்தில் பெரும்பால நாட்களில் மிக வேகமாக காற்று வீசுகிறது. வீடுகளில் இருந்து 100 மீட்டர் தூரம் தள்ளி தான் நிறுவ வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால் அது செயல் படுத்த படுகிறதா என்பது சந்தேகமே. பிரமாண்டமான விசிறி சுற்றும் போது அதிக ஒலி மாசு ஏற்படும். துக்கத்தை கெடுக்கும். விசிறி சுற்றும் போது இரவில் மிக பயங்கரமாக ஊளை இடும் சத்தமும் கேட்கும். மேலும் இயற்கையாக வரும் பல நீரோடைகளை காற்றாலையின் அடித்தளம் கட்டுவதற்கு மூடிவிட்டனர். பாலிடெக்னிக் படித்த மாணவர்களின் திறமையை மிக குறைந்த சம்பளத்திற்கு பயன் படுத்துகிறார்கள். காற்றாலை நிறுவுவதற்கு பல கம்பெனிகளின் அலுவலகங்கள் இங்கு உள்ளன. அவைகள் பெரும்பாலும் வட இந்திய முதலாளிகள் கட்டுப்பாட்டில் உள்ளது. சிவில் ஒப்பந்தங்கள் ( அடித்தளம் அமைத்தல் ) தமிழர் பலருக்கு வழங்க படுகிறது. காற்றாலை ஆள் இல்லாத இடங்களில் இருப்பதால் தாமிர கம்பிகள் திருட்டு நடைபெறுகிறது.
ReplyDeleteஆனாலும் பல இளவல்களுக்கு இங்கு முதலில் வேலை கிடைத்து பின்னாளில் நல்ல வேலைக்கு செல்ல ஒரு பயிற்சியாக அமைகிறது. இங்கு நல்ல வேலை செய்யும் நபர்கள் ஸ்ரீலங்கா முதலானா நாடுகளுக்கு சென்று ஓரளவு நல்ல நிலையில் உள்ளனர். மேலும் பல பறவைகள் விசிறியில் பட்டு இறக்கின்றன. ஆனாலும் அந்த இடம், பக்கத்தில் உள்ள காவல் கிணறு, ஆரல்வாய்மொழி, பணகுடி மக்களின் பயிர் செய்யப்படாத நிலங்கள் நல்ல விலை போனது. காவல் கிணறு, ஆரல்வாய்மொழி ஆகிய ஊர்களில் தொழில், வியாபாரம் மிகவும் பெருகியது. பல கட்டிடங்கள் வந்தன , வீட்டு வாடகை கூடியது .
வீட்டுக்கு வீடாக வீ டுகளுக்கு காற்று மின்னாலை தனித்தனியாக என்பது இப்போதுதான் பரவலாகத் துவங்கியிருக்கிறது. ஜெர்மனியின் 'ஸ்கைவிண்ட்', தனது மைக்ரோ நுண் மின் காற்றாலையான 'என்.ஜி.,'யை, அமெரிக்க இல்லக் கூரைகளில் நிறுவுவதற்கு ஏற்றது என்ற சான்றிதழை, இரண்டாண்டு சோதனைக்குப்பின் பெற்றுள்ளது.
ReplyDeleteதமிழர்கள் இலேசுபடடவர்கள் இல்லைப் பாருங்கோ! வெள்ளைக்காரன் ஆட்சியில முதன் முதலில் கொழும்பில இருந்து யாழ்ப்பாணம் தொடர் வண்டி வருவதற்கே , ''வெள்ளைக்காரன் ரெயில் ஓடி தமிழரை கொல்லப்போறான்'' என்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்த பரம்பரை பாருங்கோ !
ReplyDelete