"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" [In Tamil & English] /
பகுதி: 24 C / விஜயனின் பின் ஆட்சி செய்த மன்னர்களும் அது தொடர்பான
விபரங்களும் / 'நாகவில் [Naga] முடிவடையும் பெயர் தமிழர்களைக் குறிக்குமா?' [தமிழ்
விரிவாக்கம் தொடர்கிறது]
இன்று இலங்கையில் ஏறத்தாழ
முழுமையாக சிங்களவர்கள் வாழும், தென்மாகாண காலியை கருத்தில் கொண்டால், அங்கே ரொசெட்டாக்
கல் அல்லது கல்வெட்டின் ஒரே பக்கத்தில் இரு
அல்லது மூன்று வெவ்வேறு மொழிகளில் எழுதப்பட்டிருக்கும் கல்வெட்டு / கற்பலகை
[Rosetta Stone] ஒன்றை எஸ். எச். தோம்லின் என்ற பொறியாளர் [An engineer, S. H.
Thomlin] 1911இல் கண்டு எடுத்து உள்ளார். இதை இன்று காலி மும்மொழி கல்வெட்டு
(Galle Trilingual Inscription) என்று அழைப்பதுடன், இலங்கையின் கொழும்பு தேசிய நூதனசாலையில்
காட்சிக்கும் வைக்கப்பட்டுள்ளது. இலங்கையின் காலியில் சீனக் கடற்படைத் தளபதியும், நாடுகாண்
பயணியுமான 'செங் கே' [Chinese traveler Zheng He,dated 15 February 1409] இத்தீவிற்கு
இரண்டாம் முறை வந்ததின் நினைவாக 1409 ஆண்டில் சீன, தமிழ், பாரசீகம் [Chinese,
Tamil and Persian] ஆகிய மூன்று மொழிகளில் எழுதப்பட்ட இந்த கற்றூண் [stone pillar]
கல்வெட்டு நடப்பட்டது ஆகும். இதில் நீங்கள் கவனிக்க வேண்டியது என்னவென்றால் பதின்மூன்றாம்
/ பதினான்காம் நூற்றாண்டில், இலங்கையின் தெற்குப்பகுதியான காலியில் கூட , சிங்களத்தை
தவிர்த்து தமிழில் கல்வெட்டு எழுதப்பட்டு இருப்பது, அந்த நாட்களில், காலியில் கூட,
தமிழ் எவ்வளவு நடைமுறையில் இருந்தது என்பதற்கான சான்றாக விளங்குகிறது. மேலும் இது அவரும்
[செங் கே] மற்றவர்களும் சிவனொளிபாதம் அல்லது பாவா ஆதம் மலைக்கு (Adam's Peak; சிங்களம்:
சிறிபாத] வழங்கிய காணிக்கை பற்றி கூறுகிறது. புத்தருக்கு கொடுத்த காணிக்கை பற்றி சீன
மொழியிலும், அல்லாஹ்விற்கு வழங்கியதை பாரசீக மொழியிலும், தென்னாவர நாயனார்
[Tenavarai Nayanar] என அழைக்கப்படும் விஷ்ணுவிற்கு வழங்கியதை தமிழிலும் எழுதப் பட்டுள்ளது.
[The Chinese inscription mentions offerings to Buddha, the Persian in Arabic
script to Allah and the Tamil inscription mentions offering to Tenavarai
Nayanar (Hindu god, Vishnu).]. தொண்டீசுவரம் (அல்லது தொண்டேசுவரம், தொண்டேச்சரம்
/ Tenavaram temple) என்பது இலங்கையின் தெற்கில் மாத்தறை மாவட்டத்தில் தெவிநுவர (தேவந்திரமுனை)
எனும் பகுதியில் இருந்த ஒரு வரலாற்று சிறப்பு மிக்க சிவன் கோயிலாகும். பஞ்சஈஸ்வரங்களில்
ஒன்று இது ஆகும். இது பின் இலங்கையை ஆக்கிரமித்த போத்துக்கீசியரால் சிதைவடைக்கப்பட்டது.
இங்கு மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளின் போது ஒரு பெரிய சிவலிங்கம் ஒன்று ஆய்வாளர்களால்
அகழ்ந்து எடுக்கப்பட்டது. தற்போது தொண்டேச்சரம் கோயில் இருந்த இடத்தில் ஒரு விஷ்ணு
கோயில் அங்கிருந்த சிங்களப் பௌத்தரால் எழுப்பப்பட்டுள்ளது. "தெவிநுவர கோயில்"
என இது இன்று அழைக்கப்படுகிறது
கல்லாடநாகன் (கிமு 50 –
44) (2) சோரநாகன் (கிமு 3 – 9) (3) இளநாகன் (கிபி 96 – 103) (4) மாகலக்க நாகன் (கிபி196
– 203) (5) குஜ்ஜநாகன் (கிபி 246 – 248) (6) குட்டநாகன் (கிபி 248 – 249) (7) ஸ்ரீநாகன்
I (கிபி 249 – 269) (8) அபயநாகன் (291 – 300) (9) ஸ்ரீநாகன் II (கிபி 300 – 302)
(10) மகாநாகன் (கிபி 556 -568) எனப் பல அரசர்கள் நாக பின்னோட்டத்துடன் இலங்கையை 6 ஆம் நூற்றாண்டு வரை அநுராதபுரத்தை தலைநகராகக்
கொண்டு ஆண்டுள்ளார்கள் என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டியது ஆகும். அது மட்டும் அல்ல,
தீசன் என்ற சொல்லும் நாக வம்சத்தவருக்கு உரிய சொல்லே ஆகும். எடுத்துக் காட்டாக ஸ்ரீநாகனின் தந்தை பெயர் வீர தீசன் ஆகும் (The Early
History of Ceylon by G.C.Mendis -pages 83-85). இவர்கள் யாரும் தங்களை ஹெல, சிகல அல்லது
சிங்கள என அழைக்கவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.
நாகர்கள் அதிகமாக மங்கோலியா
இன மூலத்தை கொண்டவர்கள் [Mongolian origin] என்று
C.ராஜநாயகம் [C.Rasanayagam] கூறுவதுடன், வருணோ மஹதி [Waruno Mahdi] என்பவர்,
நாகர்கள் ஒரு கடல் வாழ் மக்கள் என்கிறார் [a maritime people]. மேலும் தென் இந்திய
மக்களில், கேரளத்தில் வாழும் திராவிட நாயர்
[Nāyars]
சமுதாயத்தை உதாரணமாக எடுக்கிறார்கள், பண்டைய கேரளா மக்கள் தமிழ் சேரர் என்பது குறிப்பிடத்
தக்கது. வட இலங்கையில் ஆரியர் வருவதற்கு முன் குடி ஏறி வாழ்த்த நாகர்கள் இவர்களே என்று
ஹென்றி பார்க்கர் கூறுகிறார். இதை K.M. பணிக்கர் சில காரணங்களை சுட்டிக்காட்டி ஆமோதிக்கிறார்.
நாகர் தான் நாயர் என மாற்றம் அடைந்ததாகவும், ஆணும் பெண்ணும் தமது தலை முடியை முடிச்சு
போடும் விதம், ஒரு நாகப்பாம்பின் பேட்டை ஒத்திருப்பது, இதை உறுதி படுத்துவதாகவும் கூறுகிறார்.
[Perhaps the only South Indian community that could be reasonably identified
with the Nāgas of yore are the Nāyars,
a Dravidian – speaking military caste of Kerala amongst whom remnants of
serpent worship have survived. Henry Parker suggested that “the Nāgas
who occupied Northern Ceylon long before the arrival of the Gangetic settlers
were actual Indian immigrants and were an offshoot of the Nāyars
of Southern India”. This view is lent support by K.M. Panikkar who suggests that the Nāyar
were a community with a serpent totem and derives the term Nāyar
from Nāgar
or serpent-men. The belief that the Nāyars have taken their
name from the Nāgas also appears to be supported by the
peculiar type of hair knot at the top of the head borne by Nayar men and the
coiffure of Nayar women in the olden days which resembled the hood of a cobra] மனோகரன்.
நாகர்கள் பண்டைய வட இலங்கையில் வசித்தவர்கள் என்றும், பண்டைய தமிழர் என்றும் இரண்டாம்
நூற்றாண்டு டோலமியின் வரைபடத்தை வைத்து வாதாடுகிறார் [Manogaran (2000) believed
the Nāgas
of the MV to be ancient Tamils, drawing his conclusions on Ptolemy’s 2nd
century A.C. map of Taprobane which he supposes indicates Nāgadīpa
in the northern part of the island, the areal extent of which corresponds to
the area settled by present-day Tamils] நாகர்கள் கி மு 3ஆம் நூற்றாண்டிற்கு முன்பே
தென் இந்தியாவும் அதை ஒட்டிய பகுதிக்கும் வந்து, படிப்படியாக தமிழுடன் குறைந்தது கி
மு 3 ஆம் நூற்றாண்டில் முழுமையாக இணைந்து விட்டார்கள் என்கிறார். நாகர், அதிகமாக திராவிட
இனத்தவர்களும் மற்றும் பாம்பை வழிபடுபவர்கள் ஆகும் [Laura Smid (2003). South
Asian folklore: an encyclopedia : Afghanistan, Bangladesh, India, Pakistan, Sri
Lanka. Great Britain: Routledge. 429]. கி மு மூன்றாம் நூற்றாண்டு வரை நாகர்கள் தனித்துவமான
இனமாக ஆரம்பகால இலங்கை வரலாற்று குறிப்பேடுகளிலும் [chronicle] மற்றும் ஆரம்பகால தமிழ்
இலக்கிய படைப்புகளிலும் காணப்படுவதுடன், கி மு மூன்றாம் நூற்றாண்டு தொடக்கத்தில், நாகர்கள்
தமிழ் மொழியுடனும், தமிழ் இனத்துடனும் ஒன்றிணைய தொடங்கி, தம் தனிப்பட்ட அடையாளத்தை
இழந்தார்கள் [Holt, John (2011), The Sri Lanka Reader: History, Culture,
Politics, Duke University Press] என்று கருதப் படுகிறது.
*அடுத்த பகுதியை வாசிக்க அழுத்துக...
*ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக...
நன்றி
Thanks
[கந்தையா
தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
[Kandiah
Thillaivinayagalingam,
Athiady, Jaffna]
பகுதி / Part: 25 தொடரும்
/ Will follow
0 comments:
Post a Comment