அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles'
from a scientific perspective" [In Tamil & English] /
பகுதி: 24 B / விஜயனின் பின் ஆட்சி செய்த மன்னர்களும் அது தொடர்பான விபரங்களும் / 'நாகவில் [Naga]
முடிவடையும் பெயர் தமிழர்களைக் குறிக்குமா?'
[தமிழ் விரிவாக்கம் தொடர்கிறது]
மேலும் மூத்த பிளினி தனது குறிப்பில், அங்கு இருந்த மக்கள் சேரர்களுடன் வர்த்தகம் செய்தனர் என்றும் [and that the people had commercial dealings with a
race called the Seres —], மற்றும் மன்னர் தனது உயர்வான அதிகாரத்தின் [இறையாண்மை] மேல் ஏதேனும் அட்டூழியம் செய்தால், குற்றவாளியென்று
தீர்மானித்து அவரை உலகளாவிய வெறுப்பால், வருந்த விடுவர் [If
the king committed any outrage against his duty as a sovereign, he was
condemned to suffer ” (not by the hand of violence, as, for example, in the
case of Charles I. of England) “by the universal detestation which he
experienced. Every individual avoided his company, and he was left to perish in
silence and solitude] என்கிறது. இதே காலத்தை ஒட்டிய தமிழரின் சங்க இலக்கியமும் இவ்வாறான தகல்வல்களையே தருகின்றன. உதாரணமாக, புறநானூற்றுப் பாடல் ஒன்று "பழி எனின் உலகுடன் பெறினும் கொள்ளலர்" (புறம்-182)
என்று கூறுகிறது. பொதுமறை இன்னும் ஒருபடி மேலே சென்று விடுகிறது. தானே பழிக்குரியனவற்றைச் செய்யா விடினும், தன்னுடன் தொடர்புடையார் செய்த பழியும் அதற்கும் அஞ்சுவதே நாணுடைமை என்று கூறுகிறது.
"பிறர் பழியும் தம்பழி போல் நாணுவர் நாணுக்கு
உறைபதி என்னும் உலகு." (குறள்-1015)
எனவே,
[அரசனே] பழிக்குரியவற்றைச்
செய்யினும் அல்லது [அரசன்] தான் செய்யவில்லை, எனவே தனக்கு அதில் தொடர்பில்லை என்றிருந்து விடாமல், அதையும் தானே செய்தது போலக் கருதியும் [அரசன்] நாண மடையும் பண்பாட்டையே உலகம் போற்றும். இதை மனதில் கொண்டே பெருங்கதை,"வடுநீங்கு அமைச்சர்" (பெருங்கதை 484) என்ற அடைமொழியைத் தருகிறது எனலாம். மேலும், பழைய நூல்கள் பழியஞ்சும் இயல்பை அமைச்சனுக்கு இன்றியமையாது வேண்டப்படும் இயல்பாகவே விதிக்கிறது. உதாரணமாக, மதுரைக்காஞ்சி 494 - 498
"நன்றும் தீதும் கண்டாய்ந்து அடக்கி,
அன்பும் அறனும் ஒழியாது காத்து,
பழிஒரீஇ உயர்ந்து,பாய்புகழ் நிறைந்த"
என்கிறது, அதாவது, அமைச்சர்கள் மக்களின் நன்மை தீமைகளைத் தம் அறிவால் கண்டு,மேலும் ஆய்ந்து அன்பு நெறியிலும் அறச்செயலிலும் ஒழுக எக்காலமும் மாறாதவாறு தன்னைக் காத்து, பழி தம்மிடத்து வராமல் அதனாலேயே ஏனையோரினும் உயர்ச்சி அடைந்து..., என்று பாடுகிறது. இது ஒன்றே அங்கு தமிழர் பண்பாடு, அதன் ஆதிக்கம், சந்த [சந்திர] முகன் மன்னர் அவையில் ஓங்கி இருந்ததை காட்டுகிறது. முகம் என்பது, முகத்தல் - முகர்தல் என்ற வேர்ச்சொல்லின்
அடியாகப் பிறந்த ஒரு தமிழ் சொல். இது மன்னனுக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பை காட்டுகிறது மற்றும் சந்திரமுகன் சிவா, ஒரு சைவன் என்பதையும் காட்டுகிறது.
நாக
மக்கள் ஒரு காலத்தில் இலங்கையிலும் தென்னிந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் வாழ்ந்த பழங்கால பழங்குடியினர் என்று சிலரால் நம்பப்படுகிறது. மகாவம்சம், மணிமேகலை போன்ற பல பண்டைய நூல்களில் நாகர்கள் பற்றிய குறிப்புகள் உள்ளன. யாழ்ப்பாணக் குடாநாடு தமிழ் இலக்கியத்தில் நாக நாடு என்றும், பாலி இலக்கியத்தில் நாகதீபம் என்றும், கிரேக்க வர்த்தமானி [Greek gazetteer / வர்த்தமானி என்பது ஒரு வரைபடம் அல்லது நிலவரைத் தொகுப்பு இணைந்து பயன்படுத்தப்படும் புவியியல் அகராதி ஆகும் / A
gazetteer is a geographical dictionary or directory used in conjunction with a
map or atlas.] நாகதிபா [Nagadiba] என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. நாகபூமி என்ற பெயர் யாழ்ப்பாணம், உடுத்துறையில் இருந்து எடுக்கப்பட்ட பிராமி பொறிக்கப்பட்ட நாணயத்திலும், யாழ்ப்பாணக் குடாநாட்டைக் குறிக்கும் தமிழ்நாட்டின் புதுக்கோட்டையிலிருந்து ஒரு தமிழ் கல்வெட்டிலும் காணப்பட்டது. நாக வழிபடும் பாரம்பரியம் இன்னும் தமிழ்நாட்டில் பின்பற்றப்படுகிறது. இந்த வார்த்தைக்கு பல மூலங்கள் உள்ளன. தமிழில் "நாகரிகம்" என்றால் பண்பட்ட மக்கள் என்றும் பொருள் படும். சமஸ்கிருதம், பாலி மற்றும் தமிழ் மொழியில் "நாக"
என்பது "பாம்பு" அல்லது "அரவம்"
என்று பொருள்படும். க.இந்திரபாலா போன்ற அறிஞர்கள், இவர்கள் கி.மு. 3ஆம் நூற்றாண்டிலிருந்து தமிழ் கலாச்சாரம் மற்றும் மொழியுடன் இணைத்துக் கொள்ளத் தொடங்கிய பழங்கால பழங்குடியினராகக்
கருதுகின்றனர். தமிழறிஞர், வரலாற்று ஆய்வாளர் வி.கனகசபையின் கூற்றுப்படி, தென்னிந்தியாவிலும் வடகிழக்கு இலங்கையிலும் பரவியிருந்த ஒளியர், பரதவர், மறவர், பறையர், கள்ளர், பள்ளி மற்றும் எயினர் [Oliyar, Parathavar, Maravar, Paraiyar, Kallar, Palli
and Eyinar] ஆகியவர்கள் நாக பழங்குடியினர் என்கிறார்.
பல
ஆசிரியர்களின் கூற்றுப்படி அவர்கள் திராவிட பழங்குடியினராக இருக்கலாம். சங்க இலக்கியத்திற்குப்
பங்களித்த பல தமிழ்ப் புலவர்கள் தங்கள் நாக வம்சாவளியைக் குறிக்க நாக முன்னொட்டுகளையும்
பின்னொட்டுகளையும் தங்கள் பெயர்களுடன் இணைத்தனர் என்பது வரலாறு!.
*அடுத்த பகுதியை வாசிக்க அழுத்துக...
*ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக...
நன்றி
Thanks
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
[Kandiah
Thillaivinayagalingam,
Athiady,
Jaffna]
பகுதி
/ Part: 24 C தொடரும் / Will Follow
0 comments:
Post a Comment