தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?] பகுதி :11‏

தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
இந்தியாவினதோ அல்லது தமிழ் நாட்டினதோதொல்பொருளியல் துறையினர் ஒரு முழுமையானமுறையான எந்த ஆய்வும் பூம்புகார் பற்றி இதுவரை செய்யவில்லை.ஒரு மிக சிறிய ஆய்வேஇதுவரை  எவராலும் செய்யப்பட்டுஉள்ளது.ஆங்கிலேய ஆய்வாளர் கிரகாம் கான்காக்தற்போதய பூம்புகாரின் கிழக்கே கடலுக்கடியில் செய்தஆய்வு,கரையில் இருந்து 5 கில்லோ மீற்றர் தூரத்தில், 23 மீற்றர்ஆழத்தில்  
குதிரைலாட  வடிவத்தில் அமைந்த ஒருகட்டுமானமும் அதன் பக்கத்தில் அமைந்தஇன்னும் ஒரு கட்டுமானத்துடன் மட்டுமேநின்றுவிட்டதுஆனால் அதே பகுதியில் 100மீற்றர் ஆழத்திற்கு மேல் 20 இற்கு மேற்பட்டபெரிய கட்டுமானம் அங்கு இருப்பதாகஅறிந்தது பரபரப்பூட்டுகிறதாக உள்ளது.அவைஒரு  கருவி மூலம் பரிசோதிக்கப்பட்டதே தவிர சுழியோடியால்இன்னும் ஆராய்ச்சி செய்யப்படவில்லை.அவை ஒரு அழிந்தநாகரிகத்தின் பகுதியா?என்பதை  கூடுதலான,முழுமையான ஆய்வுமூலம் நாம் அறியலாம்.அது மட்டும் அல்ல குமரி கண்டம் என்றுஒன்று இருந்ததா அல்லது அது ஒரு கட்டு கதையா என்பதற்கும்விடை கொடுக்கும்.இப்பொழுது இந்நிலையில் குமரிக் கண்டம்என்பது உண்மையா அல்லது வெறும் கற்பனையா என்ற விடயம்தெளிவாக இல்லாது இருக்கின்றதுகன்னியகுமரி பகுதியில்கடலுக்கடியில்  ஒலிச்சமிக்கை அனுப்பி உளவு செய்ததில்[Ultra-Sonic Probing]  நீண்ட மலைத்தொடர் ஒன்று இருப்பதாக ஒருஆராச்சி உரிமை கோருகிறது.ஆகவே நாம் மீண்டும் இந்த வேலைதிட்டத்தை தொடங்க வேண்டும்.அதன் மூலம் பல சாட்சிகளை முன்நிறுத்தி உண்மையை உலகத்திற்கு எடுத்து கூறலாம்.அதாவது குமரிகண்டம் உண்மையா பொய்யா என்பதை.பண்டைய பேச்சு ,கவிதைதவிர எம்மிடம் உருப்படியான பல சாட்சிகள்இல்லை.எவ்வாறாயினும் குமரி கண்டத்தை  நம்புபவர்கள் சுட்டிகாட்டும் காரணங்களை கீழே ஒரு பட்டியலாக தருகிறேன்.


1)மடகாஸ்கர் தீவில்[Madagascar Islands] வாழ்கிற
மடகாஸ்கர்மூதாட்டி

 இனங்களுக்கும் இந்தியாவில் இருப்பவைக்கும் ஒரு ஒத்ததன்மையுடையதாக காணப்பட்டது அவைகள் பக்கத்தில்இருக்கும் ஆஃப்ரிக்காவுடன் ஒத்து  போகாமல் தூர இருக்கும்இந்தியாவுடன் ஒத்து போனது.


2) அவுஸ்ரேலியா பழங்குடி மக்கள் மற்றும் ஆபிரிக்க பழங்குடி
ஆஸ்திரேலிய பழங்குடி சிறுமி 

மக்கள் பேசும் மொழி தமிழினை ஒத்து இருத்தல்.(இதனைநீங்கள் மாத்தளை சோமு எழுதிய ‘வியக்க வைக்கும் அறிவியல்என்னும் நூலில் இருந்தும் மா.சோ.விக்டர் எழுதிய மொழிஆய்வு 
 கிராமப்புற தமிழ் சிறுமி

நூல்களில் இருந்தும் அறிந்துக்கொள்ளலாம்).உதாரணமாக அவுஸ்ரேலியா பழங்குடி மக்கள்ஒரு பெண்ணினைக் கூப்பிட ‘பூனங்காஇங்கவா’ என்றுக்கூறுகின்றார்கள்.இது ‘பூ நங்கையே இங்கே வா’ என்பதின்மருவு தான் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

3) சங்க இலக்கிய பாடல்களின் செய்திகள்.

4)பழந்தமிழர்களின் பழக்க வழக்கங்கள்குறிப்பாககடலோரத்தில் வாழும் மக்களின் பழக்கவழக்கங்கள்.

5)காவேரிப்பூம்பட்டினம்:-பூம்புகார் என்று பெயர் பெற்ற இந்தமாபெரும் நகரம் கடலினுள் மூழ்கி விட்ட வரலாறு.

6]தனுஷ்கோடி:-இந்தக் கதை நம் சமகாலத்தில் நிகழ்ந்தது.1964
ஆம் ஆண்டு டிசம்பர் 23 இல் மன்னார்வளைகுடாவில் ஏற்பட்ட புயல் கரையைகடந்த போது ராட்சத அலைகள் எழுந்துஊருக்குள் புகுந்ததுதனுஷ்கோடிநகரமே கடலால் மூழ்கடிக்கப்பட்டது.தனுஷ்கோடியையும் பாம்பனையும்இணைத்த இருப்புப்பாதை வீசிய கடும்புயலில் அடித்து செல்லப்பட்டது.புயல்வந்து புரட்டிப் போட்டதன்அடையாளமாக இன்றும் மிச்சமிருப்பது அழிந்த நிலையில் உள்ளஒரு தேவாலயம்சில கட்டடங்கள் மட்டுமே.அதிகாலையில் நடந்தஇந்த கோர தாண்டவத்தில் மொத்தம் 2000 பேர் வரைஉயிரிழந்தனர்அதன் பின்னர் தமிழ் நாடு அரசு இந்த ஊரைவாழத்தகுதியற்றதாக அறிவித்தது.

7) ஆடு மேய்ச்சான் பாறை:-தமிழகத்திலுள்ள குளச்சல்துறைமுகத்தில் இருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் கடலில்ஒரு பாறை இருக்கின்றதுஅந்த பாறையினை அங்கு வாழும்மக்கள் ‘ஆடு மேய்ச்சான் பாறை’ என்று வழங்குகின்றனர்.காரணம் என்னவெனில் ஒருக் காலம் அந்தப் பாறை இருந்தஇடம் தரையாக இருந்தது என்றும்  அப்பொழுது அங்கு சென்றுமக்கள் ஆட்டினை மேய்தனர்.என்றும் கூறுகின்றனர்

8]மொழி ஆராய்ச்சியாளர்களின் கருத்துகளும் மற்றும் தமிழ்அறிஞர்களின் கூற்றுக்களும்

9]ஆங்கிலேய ஆய்வாளர் கிரகாம் கான்காக் (Graham Hancock)கின் ஆராச்சி முடிவு.

10] கன்னியாகுமரிக்குத் தெற்கே  ஒலிச்சமிக்ஜை அனுப்பிஉளவு செய்ததில் [Ultra-Sonic Probing] தென்பகுதிக்கடலடியில் நீண்ட மலைத்தொடர் ஒன்று இருப்பதைக் கண்டது 

இப்பொழுது நாம் சில விடயங்களை தெளிவு படுத்திக்கொள்ளலாம்

அறிவியல் ஆராய்ச்சிகள் குமரி கண்ட கொள்கையைஆதரிக்கவும் இல்லை நிராகரிக்கவும் இல்லை.புவிஓடுஅசைவுகள்,கண்ட ஓட்டங்கள் போன்ற புதிய அறிவியல்கருத்துக்கள் புவியியலாளர்களால் ஏற்றுக் கொள்ளப் பட்டபின்,ஆசிய ஆப்பிரிக்க கண்டங்களுக்கு இடையே பாலம் போல்அமையலாம் என்ற குமரி கண்டம்/இலெமூரிய புனைக்கோள்கைவிடப்பட்டாலும்அறிவியல் முடிந்த முடிவாக தேவையானசாட்சிகளை இன்னும் முன் வைக்கவில்லை.ஆகவே முறையானஆய்வுகள்,கடல் அடி பரிசோதனைகள் பூம்புகார் கடல்பகுதியிலும் அது அண்டிய பகுதியிலும் செய்யப்பட்டு,அங்கேபுதையுண்டு கிடக்கும் மனிதனால் செய்யப்பட்ட கட்டுமானங்கள்,பொருட்கள் மற்றும் ஏதாவது முக்கிய சாட்சிகள்அது ஒரு மூழ்கிய நிலப்பகுதி என காட்டக்கூடியதாக  அல்லதுநிராகரிக்க உதவுகூடியதாக அமைந்தால்,மேலும் அவைகளின்காலம் சரியாக கணக்கிடப்பட்டால் அன்றி நாம் ஒரு அறிவியல்முடிவிற்கு வரமுடியாது.அப்படியான ஒரு U வடிவ மனிதன்செய்ததாக கருதப்படும் ஒரு கட்டு மானம் 1991 இல்கண்டுபிடிக்கப்பட்டாலும்அதன் பின் எந்தவொரு ஆய்வும்அங்கு இதுவரை செய்யப்படவில்லை.அப்படி  மேலும் பலஆய்வுகள் செய்யும் வரை  யாரும் ஒருவர் ஏதாவது ஒருஉலகத்தின் மூலையில் இருந்து இதைப்பற்றி கதைத்துக்கொண்டே இருப்பர்

இப்போதைய அறிவியல் ஆராய்ச்சிகள் உலக நாகரிகங்கள் சுமேரியாவிலோ  அல்லது  சிந்து சமவெளியிலோ தோன்றிஇருக்க வேண்டும் என்று கூறுகின்றனஅதற்கு முன்னர்நாகரிகங்கள் இருந்தனவா?… அதற்கு முன்னர் மக்கள்எவ்வாறு இருந்தனர் என்று அந்த ஆராய்ச்சிகள் இன்னும்முழுவீச்சில் ஆராயத் தொடங்கவில்லை.இது ஒரு குறைபாடே

தமிழர்கள் பூம்புகார் பற்றிக் கூறும் செய்திகள் உண்மையென்றுசில ஆராய்ச்சிகள் கூறும் பொழுது குமரிக்கண்டதினைப் பற்றிமட்டும் அவர்கள் பொய் சொல்லி இருப்பார்களா?ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுமாஉண்மை வெளிப்படுமா?பொறுத்திருந்து பார்ப்போம்

0 comments:

Post a Comment