விளக்காய் வந்தவளும் ,வினையை விதைத்தவனும்👧விளக்காய் வந்தாளே!

வாழ்வு சிறக்க  
கனவுகளை விதைத்தவளே
வாழ்வின் வேதத்தின்
ஆதாரம் அவளே
என் மனதில்
குடிகொண்ட தேவதையானாள்
என்றும் 
மறையாத அன்பாலே 
கருணையானவள்
அவள் விடும் 
அன்பு துளியிலே
அவலங்களும் 
தோற்று தான் போவதாலே
ஆனந்தங்களும்
நெஞ்சிலே பொங்கியே வழியவே
உயர்ந்து செல்லவும்
விளக்காய் வந்தாளே !

👦விதைத்ததை அறுப்பாய்

விதைத்ததை அறுப்பாய்
மறந்து போகாதே
விதையுள்ள மனங்களை
பாழாக்கி வாழாதே
பால்மனதில் உளறல்களே
புகுந்து போகும்
பாழடைந்த மனமேதான் 
தோற்று போகும்
வேதனை கொடுக்க 
யாரையும் தீண்டாதே
வேரிலும் உறங்க 
அனுமதி கொடுக்காதே
கருணையான மனங்களிலே 
மனிதமும் பிறக்கின்றன
கருணையின் பூக்களையும் 
உணர செய்கின்றன

ቶቶቶቶቶகாலையடி ,அகிலன் ராஜாቶቶቶቶቶ


0 comments:

Post a Comment