கண்ணால் கதைபேசவா !


கண்ணால் கதைபேசவா கண்ணாளா
காண வேண்டும் என ஓடிவந்தேன்.
காத்திருக்க நேரமின்றி.
காணாமல் சென்றாயே கண்ணாளா.
காதலும் கனலாய் தாக்குதே
இங்கே கண்ணாளா.
காரணமின்றி நீ இன்னும்
சோதித்து பார்க்கிறியே கண்ணாளா.
கசந்து போகும் வாழ்வை
எண்ணிப்  பார்க்கையிலே  கண்ணாளா.
காதலும் தித்திக்கும் என்பதுவும்
பொய்யாகி போகுதே கண்ணாளா.
காற்றைப்போல    நீயில்லா   இடைவெளியை.
கனவுகள் வந்து  நிறைகிறதே கண்ணாளா.
கவலைகள் தீர்ப்பாய் என்று.
கண்ணீர் துடைப்பாய் என.
நாயகனே  இன்ப
நொடிபொழுதுகள் கழிய.
துன்ப சூழ்நிலைகள் சூழ.
காத்திருக்கிறேன் கண்ணாளா
வருவாயா
கண்ணால் காதல் செய்ய!
  
🏩💌-காலையடி , அகிலன்- 💌🏩


0 comments:

Post a Comment