தற்கொலை- தமிழர் மத்தியில் ஏன் அதிகம்? பகுதி: 01

அண்மையில் நான், The Sunday Observer / 17 மார்ச், 2019  என்ற இலங்கை பத்திரிகையை வாசிக்கும் பொழுது என்னை அதிரவைத்த செய்தி, "வடக்கு கிழக்கு பெண்களை, கடன் தற்கொலைக்கு தூண்டுகிறது - 150  இற்கு மேற்பட்டோர் 2018 இல் மட்டும் இறந்துள்ளார்கள்" / "Debt drives women to suicide in North and East - Over 150 debt related deaths in 2018 alone " என்ற அறிக்கையே, அதில் முற்போக்கு விவசாயிகள் காங்கிரஷின் [Progressive Peasants’ Congress (PPC)] அறிக்கையின் படி, குறைந்தது 170 பேர் இலங்கை முழுவதும் பரவலாக தற்கொலை செய்து இருப்பதாகவும், அதில் கூடுதலான தற்கொலைகள் வவுனியா, யாழ்ப்பாணம், மற்றும் மட்டக்களப்பு பகுதியில், அதாவது தமிழர் பகுதியில், நடந்துள்ளதாகவும் எடுத்து காட்டுகிறது.
 ஏன் தமிழர்கள் கூடுதலாக தற்கொலை செய்கிறார்கள்? என்ற என் கவலையின் தேடுதலே இந்த கட்டுரையாகும். 

முதலில் நாம் தற்கொலை என்றால் என்ன என்று பார்ப்போம். நீங்களே உங்கள் சொந்த வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வரும் நடவடிக்கையை தற்கொலை எனலாம். இது அநேகமாக மக்கள் தமது வலி அல்லது துன்பத்தில் [pain or suffering] இருந்து தப்பிக்க வேறு மாற்று வழிகள், அந்த கணத்தில் தெரியாத நிலையில், சடுதியாக கடைபிடிக்கும் ஒரு வழி என்றும் கூறலாம். ஆனால் எல்லோரும் அப்படி என்று நாம் அறுதியாக கட்டாயம் கூறமுடியாது. தற்கொலை மூலம் இறந்த மக்கள் பொதுவாக நம்பிக்கையற்ற தன்மை, விரக்தி மற்றும் உதவியின்மை [feelings of hopelessness, despair, and helplessness] போன்றவற்றால் கடுமையாக பாதிக்கப் பட்டு இருந்தது தெரிய வந்துள்ளது. மற்றது, தற்கொலையை ஒருவரின் ஒரு தார்மீக பலவீனம் அல்லது அவரின் ஒரு ஒழுக்க குறைபாடு [a moral weakness or a character flaw] என்றும் கூறமுடியாது.


 ஒருவர் தன்னுயிரை தானே மாய்துகொள்வதையும் கொலை என்று அர்த்தம் தொனிக்க தற்கொலை என்றே நாம் இன்று கூறுகிறோம். அது போலவே, The Oxford English Dictionary முதல் முதல்  suicide என்ற சொல்லை 1651 இல் சேர்த்து கொண்டாலும், அந்த சொல்லை  மிகவும் வெறுப்புடன் பொதுவாக பார்க்கப்பட்டு, பலர் தமது அகராதியில் அதை போடாமல் சொல்லகராதியில்[vocabulary] மட்டும் விட்டுவிட்டு, அதற்கு பதிலாக “self-murder”, “self-killing”, and “self-slaughter” என்ற வார்த்தைகளை, அன்று பாவித்தனர். ஏன், 2450 ஆண்டு களுக்கு முன்பு வாழ்ந்த புகழ்பெற்ற கிரேக்க நாட்டின் தத்துவஞானி சோக்கிரட்டீஸ் (Socrates) கூட "மனிதன் என்பவன் கடவுளின் உடைமைகளில் ஒன்று, எனவே ஒரு மனிதன் தன்னை கொல்ல முடியாது" / "a man, who is one of the god’s possessions, should not kill himself " என்று வாதாடுகிறார். என்றாலும் பிளாட்டோ [Plato] மற்றும் அரிஸ்டோட்டல் [Aristotle] தற்கொலை சில சூழ்நிலைகளில் ஏற்றுக்கொள்ளலாம் என்கின்றனர். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட எமது திருவள்ளுவரும் "மயிர் நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் உயிர்நீப்பர் மானம் வரின்"[969]. என  உடலில் உள்ள உரோமம் நீக்கப்பட்டால் உயிர் வாழாது கவரிமான் என்பார்கள் அதுபோல் மானம் அழிய நேர்ந்தால் உயர்ந்த மனிதர்கள் உயிரையே விட்டு விடுவார்கள், அதாவது தற்கொலை செய்வார்கள், என்று அதற்கு ஒரு பெருமையே சேர்க்கிறார்.அது மட்டும் அல்ல ,தமிழரின் அன்றைய கலாச்சாரத்தில் வடக்கிருத்தல் என்று போற்றப்படும் ஒரு செயலையும் காண்கிறோம்.

வடக்கிருத்தல் பண்டைய தமிழரின் நம்பிக்கை சார்ந்த ஒரு பழக்கவழக்கமாகும். ஊருக்கு வெளியே ஓரிடத்தில் வடக்கு திசை நோக்கி அமர்ந்தவண்ணம் உண்ணாநோன்பிருந்து தமது உயிரை சில காரணங்களுக்காக துறப்பர். இப்படி இறந்தோருக்கு அன்று நடுகல் இட்டு, அவரின் மன உறுதியை பெருமைப் படுத்தும் முகமாக, அவருக்கு நினைவுச் சின்னம் அமைத்து வழிபடுவதும் உண்டு. உதாரணமாக, கி.மு. 3 ஆம் நூற்றாண்டு  புறநானூறு 66 ,

"நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி
வளிதொழில் ஆண்ட உரவோன் மருக!
களிஇயல் யானைக் கரிகால் வளவ!
சென்றுஅமர்க் கடந்தநின் ஆற்றல் தோன்ற
வென்றோய், நின்னினும் நல்லன் அன்றே
கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை
மிகப் புகழ் உலகம் எய்திப்
புறப்புண் நாணி, வடக் கிருந்தோனே."

களிப்புநடை போடும் யானைமேல் தோன்றும் கரிகால் வளவ! கடலில் நாவாய்க் கப்பல் ஓட்டிக் காற்றையே ஆண்ட வலிமையாளரின் வழிவந்தவன் நீ. நீ போரில் வென்றாய். அதனால் நீ நல்லன். எனினும் வெண்ணிப் பறந்தலைப் (போர்க்களத்தில்) போரில் உன் வலிமை மிக்க தாக்குதலால் புறப்புண் பட்டு அதற்காக நாணி அப் போர்க்களத்திலேயே வடக்கிருந்து உயிர் துறந்த மன்னன் (பெருஞ்சேரலாதன்) உன்னைக் காட்டிலும் நல்லவன் அல்லனோ? என்று தற்கொலைக்கு ஒரு புகழாரம் சூட்டுகிறது. அதேபோல இன்றும் தன்னுயிரை தான் ஈயும் சான்றாண்மை தற்கொடையாம் என்று தற்கொலையை தற்கொடை என்று சில சந்தர்ப்பங்களில் புகழ் பாடுவதையும் தமிழர் கலாச்சாரத்தில் நாம் காணுகிறோம். இவைகளை இளம் பருவத்தினர் தொலைக்காட்சியிலோ, திரை அரங்கிலோ அல்லது பத்திரிகை அல்லது புத்தக வாயிலாகவோ பார்த்து இருப்பார்கள், உளவியல் எச்சரிப்பது இவையும் அவர்களின் தற்கொலைக்கு ஒரு தூண்டுதலாகவும் அமையலாம் என்று.

நல்லதங்காள் வறுமையின் காரணமாகவும் தனது அண்ணியின் சுடுசொல் தாளாமலும் தான் பெற்ற பிள்ளைகளைக் கிணற்றில் வீசிக் கொன்று விட்டு, பின் தானும் அக்கிணற்றில் விழுந்து தற்கொலை செய்ததாகவும், அவளது மரணத்தைத் தாளாத அவளது அண்ணன் நல்லதம்பியும் அதே கிணற்றில் விழுந்து தற்கொலை செய்ததாகவும் கூறும், அவளின் புகழ் பாடும் நாட்டுப்புறக் கதை, தமிழரின் மத்தியில் சர்வசாதாரணமாக புழங்குவதுடன், அவளுக்கு கோயில் அமைத்து சிறு தெய்வமாக  திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள அர்ச்சுனாபுரத்தில் வழிபடுவதையும் காண்கிறோம். அது மட்டும் அல்ல தமிழர்களுடன் தொடர்புடைய மாயன்கள் தற்கொலைக்கு என, ‘இக்ஸ்டாப் (Ixtab) என்னும் பெயருடைய ஒரு கடவுளையும் வைத்திருந்தவுடன் தற்கொலையை தப்பானதாக மாயன்கள் கருதவில்லை. எனினும் நான் முழுக்க முழுக்க இவையையே தமிழர்களை கூடுதலாக தற்கொலைக்கு தூண்டும் காரணம் என்று சொல்லவில்லை, ஆனால் அவர்களுக்கு இது ஒரு தென்பை, வலிமையை, பயமின்மையை கட்டாயம் கொடுத்து இருக்கும்.

தற்கொலை என்பது திடீரென, ஒருவர் எடுக்கும் சாவுக்குரிய அபாயகரமான முடிவு அல்லது ஒரு செயல் என்றும் மற்றும் தூண்டுதலின் பங்கே இப்படியான சோகமான விடயங்களில் முக்கியமான ஒன்று என்றும் [The role of impulsiveness is one of the saddest things about suicide] அடிக்கடி விவரிக்கப்படுகிறது. ஆனால் உண்மையில், தங்களைக் கொல்ல முயற்சிக்கும் பெரும்பாலான மக்கள் அவ்வாறு செய்ய முதலே திட்டமிடுகின்றனர் என்றும் மனக்கிளர்ச்சி அல்லது உந்துதலே என்று வரையறுக்கப் படுபவை கூட,
அவர்கள் முயற்சி செய்வதற்கு முன்பு அப்படியான எண்ணம் அவர்களிடம் இருந்ததாகவும் ஒரு 2007 ஆண்டு ஆஸ்திரேலிய ஆய்வு கூறுகிறது.ஆனால் அவர்களின் எண்ணத்திற்கு செயல் வடிவத்தை , வலிமையை அதிகமாக உந்துதல்களே கொடுத்து இருக்க வாய்ப்பு அதிகம்.

இவை ஒரு வரலாற்று ரீதியான ஒரு முக்கியமான காரணம். ஏனேன்றால் மற்ற சமூகங்களுடன் ஒப்பிடும் பொழுது ,தமிழர் சமுதாயம் ஒரு கொள்கைக்காக ,நோக்கத்திற்காக தம் உயிரை விட்டவர்களுக்கு நடுகல் வைத்து வணங்கியதையும், அவர்களை சிறு தெய்வமாக்கியதும் மற்ற சமூகங்களில் காண்பது அரிது. அது மட்டும் அல்ல, அந்த பண்பாட்டிற்கு, குறிப்பாக ஈழத்தில் 1980 க்கு பிறகு மீண்டும் உயிர் கொடுத்து இன்று அந்த கலாச்சாரம் மீண்டும் புத்துயிர் பெற்றிருப்பது வேறு எங்கும் காண்பது அரிது. எனவே இவைகள் கட்டாயம் தமிழர் மத்தியில் ஒரு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும் என்று நம்பலாம். என்றாலும் தற்கொலை- தமிழர் மத்தியில் ஏன் அதிகம்? என்பதை புள்ளிவிபரங்கள் மற்றும் அதற்கான இன்றைய காரணங்கள் பற்றியும் அடுத்த பகுதியில் பார்ப்போம்.

உலக தற்கொலைத் தடுப்பு சங்கமும், உலக சுகாதார நிறுவனமும் இணைந்து ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 10-ம் தேதியை  சர்வதேச தற்கொலைத் தடுப்பு தினமாக (World Suicide Prevention Day) அறிவித்து உள்ளது. நாமும் எம்மக்கள் மத்தியில் அதிகரித்து வரும் தற்கொலைக்கான காரணத்தை ஓரளவாவது புரிந்து, சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுது எல்லாம், சிறிது நேரம் ஒதுக்கி, தற்கொலை எண்ணமுடைய ஒரு நபரின் வாழ்க்கையில் மாற்றத்தைக் கொண்டு வர முயலுவோம் !
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]
பகுதி: 02  தொடரும்

3 comments:

 1. It is perfect time to make some plans for the future and it’s time to be happy.
  I’ve read this post and if I could I want to suggest
  you some interesting things or tips. Perhaps you can write next articles
  referring to this article. I want to read more things about
  it! I am sure this paragraph has touched all the
  internet people, its really really nice paragraph on building up
  new weblog. It is the best time to make some plans for the future and it is time to be happy.
  I have read this post and if I could I want to suggest you few interesting things or suggestions.

  Maybe you could write next articles referring to this article.
  I wish to read even more things about it! http://foxnews.org

  ReplyDelete
 2. I am sure this article has touched all the internet users,
  its really really nice paragraph on building up new web
  site. Ahaa, its nice dialogue about this piece of writing at
  this place at this webpage, I have read all that, so at
  this time me also commenting at this place. I have been browsing online more
  than three hours nowadays, but I never found any attention-grabbing article like yours.

  It is pretty worth enough for me. In my view, if all
  site owners and bloggers made just right content material as
  you probably did, the web might be much more useful than ever before.
  http://dell.com

  ReplyDelete
 3. I couldn’t resist commenting. Perfectly written! I’ve
  been surfing online more than 4 hours today, yet I never found any interesting
  article like yours. It is pretty worth enough for me. In my view, if all web owners and bloggers made
  good content as you did, the web will be a lot more useful than ever before.
  What's up, I log on to your blog like every week.
  Your story-telling style is witty, keep it up! http://cspan.org/

  ReplyDelete