தமிழ்நாடு,இலங்கை- சுனாமி...! -நினைவு நாள்


26 டிசம்பர் 2004 அன்று இந்தோனேசியாவின் சுமத் ரா தீவு அருகே ஆழ்கடலில் ஏற்பட்ட நில அதிர்வு காரணமாக எழுந்த பேரலைகள் தாய்லாந்து, இந்தோனேசியா, மலேசியா, இந்தியா இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் பேரழிவை ஏற்படுத்தின
தமிழர் கண்ட கொடுமையான நாட்கள் பல. அதில்  இது கொடுமையிலும் கொடுமை.
கரையைத் தாண்டி வந்த கடலே...


     
🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅
கரையைத் தாண்டி வந்த கடலே, நம்
ஊரை  அண்டியதும்  முறையோ
யாரைத் தேடி நீ வந்தாய் பாரிலுன்
பேரைக் கெடுத்து நீயும் சென்றாய்.

🏊🏊🏊🏊🏊🏊🏊🏊🏊🏊🏊🏊🏊🏊🏊🏊
விழுங்கிய குமரிக் கண்டத்தினுள்
விளைந்து வளர்ந்தவளடி நீயும்
அழுகிய இனவாதப் பேய்களுடன்
பழகியதால் வந்த பழக்கமோ யிது

🌊🌊🌊🌊🌊🌊🌊🌊🌊🌊🌊🌊🌊🌊
பண்  பாடிய புலவரெலாம் உன்னை
பெண் என்றார் ,தெய்வம் என்றார்
விண் தொட்டு நீ எழுந்தனையோ
கண்கெட்டு நீ நடந்தனையோ

⛵⛵⛵⛵⛵⛵⛵⛵⛵⛵⛵⛵⛵
உப்பாய் நீ உவர்ந்தபோதும் கூட
தப்பாயுனை  எடைபோட் ட தில்லை
உரக்க நீ விரைந்து வந்தெம்மில்
அரக்கத்தனமாடி  அழித்தனையோ

😵😵😵😵😵😵😵😵😵😵😵😵😵
கஞ்சி கொடு தெய்வமே  யென
கிள்ளியே வாழ்ந்தோம் உன்னில்
வஞ்சித்துவிட்ட  வஞ்சகியே யெம்மை
அள்ளியே சென்ற அரக்கியடி நீ

💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
வேலி கடந்து வந்து என் தாயோர்
தாலியறுத்து நீ காவிச் சென்றாய்
காலி செய் தே யவர்கள் வாழ்வினை
கேள்வி யாக்கியப் பேரலை நீ


 🤺🤺🤺🤺🤺🤺🤺🤺🤺🤺🤺🤺🤺
துணையாள் எந்தன் காதலிபோல்
மனையுடன் இழுத்து மங்கைகள்
இணையற்ற வாழ்வொழிய எமனா
துணை நின்ற துரோக்கியடி நீ

🚼🚼🚼🚼🚼🚼🚼🚼🚼🚼🚼🚼🚼🚼🚼🚼
பழகிய தம் உறவுகளைக் காணாது
குழறியழவும் தெரியாது மிரளும்
அழுகிய குழவிகளை உன் கரையில்
அனாதைகளாக்கி விட்ட ஆழியடி நீ

💑💑💑💑💑💑💑💑💑💑💑💑💑💑💑💑
ஓடி ஒளித்தும்  எங்கள் மண்ணில்
கூடி வாழ்ந்த குடும்பங்களை நாடி
தேடி மொத்தமாய்க் கொன்றொழித்த
கோடிமடங்கு கொடுமைக்கா ரியடி நீ

😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
அழுது அழுது அலுத்தவர் நாம்
விழுந்து விழுந்து எழுந்தவர் நாம்
முழு முயற்சியில் முன்னேறுவோம்
வலுவான தமிழராய் வளர்ந்திடுவோம்


↫ 2004 இல் இலங்கையை தாக்கிய சுனாமி நினைவாக உதயன் பத்திரிகையில்   வெளிவந்த  கவி. ↬

2004 - இல் உலகையே புரட்டிப்போட்ட சுனாமி1 comments:

  1. மறக்கமுடியுமா,அந்த அகோர காட்சிகள்.அனைத்தையும் நினைவு படுத்துகிறது இக் கவிதை.

    ReplyDelete